இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, December 8, 2022

கற்பூரம் தயாரிக்கும் முறை.....

சுயதொழிலில் சிறந்த தொழிலாக விளங்குகிறது இந்த கற்பூரம் தயாரிப்பு. குறிப்பாக இந்த கற்பூரம் இந்து மதத்தினர் தினமும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக விளங்குகிறது. அதுமட்டும் இன்றி இந்து கோயில்களிலும், சித்த மருத்துவத்திற்கும் இதன் தேவை அதிகளவு உள்ளதால் தயங்காமல் இந்த தொழிலை துவங்கலாம். குறிப்பாக இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, வேலையாட்களோ தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிறிய அறையில் செய்யக்கூடிய தொழில். ஆண், பெண் இரு பலரும் செய்யக்கூடிய சிறந்த தொழிலாகவும் விளங்குகிறது.

கற்பூரம் தயாரிக்கும் முறை:

மூலப்பொருட்கள்:-

இந்த கற்பூரம் ஊசி இலை தாவரம் என்கின்ற இலையில் இருந்துதான் தயாரிக்கின்றனர், அதுவும் சிலவகையான கெமிக்கல் மற்றும் இதர பொருட்களை சேர்த்து தான் இந்த கற்பூரத்தை தயாரிக்கின்றனர்.

இருப்பினும் இந்த கற்பூரம் செய்வதற்கு மூலப்பொருட்கள் மிக எளிதாக நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதாவது கற்பூர பொடி, கற்பூர கட்டி என்று அனைத்து நாட்டு மருந்து கடையிலும் விற்கப்படும். அவற்றை வாங்கி கற்பூரம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்



தயாரிக்கும் இயந்திரம்
இந்த கற்பூரம் தயாரிப்பதற்கு முக்கியமாக கேம்பர் மிசின் (Camphor Machine) தேவைப்படும்
இந்த மெஷின் இலங்கையில் எங்கு கிடைக்கும் என்ற தகவல்கள் எங்களுக்கு தெரியாது ஆனால் இந்தியமர்ட் இணையத்தலத்தின்மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்

தயாரிக்கும் முறை :

இந்த கற்பூரம் தயாரிப்பு ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. கேம்பர் இயந்திரம் வாங்கிவிட்டோம் என்றால் எளிதாக செய்துவிட முடியும்.

கேம்பர் இயந்திரத்தில் மூலப்பொருட்களான கற்பூர கட்டியையோ அல்லது பொடியையோ இந்த இயந்திரத்தில் கொட்டினால் போதும் கற்பூரங்கள் அச்சிடப்பட்டு வெளிவரும்.

இவற்றில் சிறிய கற்பூரம், பெரிய கற்பூரம் என்று இரண்டு வகை உள்ளது. சிறிய கற்பூரம் வேண்டும் என்றால் சிறிய அச்சியை மாட்ட வேண்டும் அல்லது பெரிய கற்பூரம் வேண்டும் என்றால் பெரிய அச்சியை மாட்ட வேண்டும்.

கற்பூரம் தயாரித்ததும் அவற்றை எடுத்து பேக்கிங் செய்து, லேபிள் ஓட்டினால் போதும், கற்பூரம் விற்பனைக்கு தயார்.

சந்தை வாய்ப்பு:

கற்பூரத்தின் தேவை அதிகளவு உள்ளதால், அனைத்து மல்லிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.

கிராமப்புறங்களில் உள்ள சிறு பெட்டி கடையிலும் விற்பனை செய்யலாம். அதுமட்டும் இன்றி நமக்கு தெரிந்தவர்களின் வீட்டிற்கு சென்றும் விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எனவே கற்பூரம் தயாரிப்பு என்பது மிக அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites