அறிமுகம்தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் மேலான ஆர்வம் அதிகரித்து மெட்ரிக் பள்ளிகள் அதிகமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இவை ஆங்கில மொழியை பயிற்று மொழிப் பாடமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது. இந்த மெட்ரிக் பள்ளிக் கல்வி நிறுவனங்கள் தனியார் அமைப்புகளால் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களைத் தனியார் அமைப்புகளே நியமித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களிடம் தேவையான கல்விக் கட்டணங்களைப் பெற்றுக் கொள்கின்றன.மெட்ரிக் பள்ளி தொடங்கத் தேவையானவைஅமைப்பு பதிவுமெட்ரிக் பள்ளி தொடங்கவிருக்கும் அமைப்பு ஒரு சங்கமாக (Society) அல்லது அறக்கட்டளை (Trust) ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.நிலம்மெட்ரிக் பள்ளி தொடங்க உள்ள பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பெயரில் நிலம் கிரயமாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது நிலம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் (50 வருடத்திற்கு...