யார் இந்த அருணாசலம் முருகானந்தம் ! அட இவரு IITல படிக்கவில்லை ! அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை !இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை ! பரம்பரை சொத்து போல, பிரதமர் பதவிக்கு ஆசை கொள்ளவில்லை ! அட பாருங்க, அந்த தத்துவா, இந்த தத்துவா பேசவில்லை !தாத்தா தயவில் வாழும் பேரனும் இல்லை ! அட காலேஜ் கூட போகவில்லை !ஆனா பாருங்க மனுஷன் டைம்ஸ் இதழில் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்க்களில் அவரும் இடம் பெற்று இருக்கிறார் ! ஒரு மனுசனை உழைப்பு எந்த அளவு உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் ஒரு சிறந்த உதாரணம் ! கோயம்பத்தூர் பக்கத்துல இருக்கற ஒரு ஊராக பகுதியில் பிறந்து, ஒன்பதாம்...