'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.''மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு......