இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, April 22, 2013

உணவுக் காளான்


உணவுக் காளான்

அகாரிக்கஸ் பைஸ்போரஸ்


ப்ளுரோட்டஸ் ஆஸ்ட்ரியேட்டஸ்

 
ப்ளுரோட்டஸ் இயோஸ்




கோ 2, ஆய்ஸ்டர் – ஹிப்சிஸ்கஸ் அல்மேரிஸ்


கலோசைப் இன்டிக்கா 


வால்வேரியல்லா வால்வேசியே


கனோடெர்மா லுசிடம்

      
அகாரிக்கஸ் அகேஸ்டஸ்

    
அகாரிக்கஸ் பைடார்க்குவிஸ்


ட்ரைக்கோலோமா மேக்னிவெல்லர்




வால்வேரியல்லா ஸ்பெசியோசா

Sunday, April 21, 2013

தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை



தாய் வித்து காளான் பூசணத்தை தானிய அடிப்படையிலான ஊடகத்தில் வைத்து வளர்ப்பதேயாகும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் சோதனை செய்யப்பட்ட பல பொருட்களில், சோளம் தான் பூஞ்சாண் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. நோயற்ற சோள தானியங்களை காளான் வித்து வளர்வதற்கான அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தாய்க் காளான் வித்துக்களை தயாரிப்பதற்கான முறை பின்வருமாறு தரப்பட்டுள்ளது
  • சோளத் தானியங்களை சுத்தமான நீரில் ஊற வைத்து, சேதமடைந்த தானியங்களை அகற்ற வேண்டும்
  • சோளத்தை 30 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்
  • வேக வைத்த தானியங்களை சமதள தரையில் பரப்பி ஈரப்பதத்தை போக்க வேண்டும்
  • 50% ஈரப்பத நிலையில், கால்சியம் கார்பனேட்டை உலர் தானியங்களுடன் 20 கிராம் / கிலோ என்ற அளவில் கலக்க வேண்டும்
  • கிருமி நீக்கம் செய்த பாட்டில்களில் முக்கால் அளவு உயரத்திற்கு (சுமாராக 300 – 330 கிராம் / பாட்டில் (அ) கலன்) நிரப்பி, பிளாஸ்டிக் வளையத்தை உட்செலுத்தி, முனைகளை உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு மூட வேண்டும்
  • பஞ்சைச் சுற்றி பயனற்ற தாளைக் கொண்டு மூடி நூலைக் கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்
  • இந்த பைகளை அழுத்தக் கொப்பரையில் வைத்து, 20 – எல்பி. எஸ் அழுத்தத்தில், 2 மணி நேரத்திற்கு வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
  • குளிர்ந்த பின், பைகளை வெளியே எடுத்து, புற ஊதாக் கதிர் உள்ள வளர்ச்சி ஊடகத்தில் 20 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும்
  • பின் பூஞ்சாண் வளர்ச்சியை இரண்டு அரைப்பகுதியாக வெட்டி, ஒரு பகுதியை பாட்டிலிலும், அடுத்த அரைப்பகுதியை அடுத்த பாட்டிலிலும் மாற்ற வேண்டும்
  • பூசண வளர்ச்சி உட்செலுத்திய பாட்டிலை 10 நாட்களுக்கு அறை வெப்ப நிலையில் வைத்து அடைகாக்க வேண்டும். இதுவே படுக்கை வித்துத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
குறிப்பு: கால்சியம் கார்பனேட் கலப்பதின் நோக்கம்
  • வேகவைத்த தானியங்களில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற
  • தானியங்களின் கார அமிலத் தண்மையை நடுநிலைப் படுத்த
  • கிருமி நீக்கம் செய்தபின் கட்டியாவதைத் தடுக்க
    வெள்ளை சோளத் தானியங்கள்
    வேகவைத்தல் (30 நிமிடங்கள்)
    நிழலில் உலர்த்துதல்
    கால்சியம் கார்பனேட் (20 கிராம் / கிலோ) கலக்குதல்
    பிளாஸ்டிக் வளையங்கள்
    காளான் வித்துப்பைகள் தயாரித்தல்
    நிலை – 1
    நிலை – 2
    நிலை – 3
    தானியங்களை பைகளில் நிறைத்தல்
    பிளாஸ்டிக் வளையங்கள் கொண்டு இறுக்குதல் 
    உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு அடைத்தல்
    தாளைக் கொண்டு மூடி, நூலைக் கொண்டு கட்டுதல் 
    தட்டுக்களில் சேமித்தல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • சோளத்தை அளவுக்கு அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையென்றால், தானியங்கள் பிரிந்து விடும்
  • கால்சியம் கார்பனேட்டை பரிந்துரைக்கப்பட்ட அளவே பயன்படுத்த வேண்டும
நச்சுக் காளான்


அமேனிட்டா கன்ஸ்டிக்டா
 

லென்டினஸ் எடோட்ஸ்


ஆரிகுளேரியா பாலிடிரிக்கா


சைசோபில்லம் கம்யூனே


ஃப்ளேமுளினா வெலுட்டைப்ஸ்


பொலிட்டஸ் எடுலிஸ்


ட்ரெமெல்லா ஃபூசிபார்மிஸ்


பாலிபோரஸ் அம்பலேட்டஸ்


அபேனிட்டா சிசரியா


கேன்தரல்லஸ் சிபேரிக்கஸ்


ஹெரிசியம் எரினாசியஸ்


லேட்டிபோரஸ் சல்ப்யூரிஸ்

மார்செல்லா டெலிசியோசா


ஹெப்போமைசிஸ் ஹயலினூ

அமேனிட்டா ஃபேலோய்ட்ஸ்


அமேனிட்டா ஆக்ரியேட்டா


அமேனிட்டா மஸ்கேரியா


அமேனிட்டா மஸ்கேரியா

காளான் உற்பத்தியாளர்கள்
வ. எண்
பெயர் மற்றும் முகவரி
தொலைபேசி எண்
1
திரு. எம். மோகனா சுந்தரம்,
ஏ ப்ரின்ஸ் 5 காளான்,
பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், புள்ளியன் காடு தோட்டம், சூரியம்பாளையம்,
பெத்தம்பாளையம் (அஞ்சல்),
ஈரோடு – 638116
04294-35208
2
திருமதி. கே. புவனேஸ்வரி,
அபி ஆனந்த் காளான்,
சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான்
உற்பத்தியாளர், 5 – ஏ, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1
889601
3
திரு. செல்வா சேகரன். ஆர்,
அக்ரோவின் பண்ணை,
சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான்
உற்பத்தியாளர், 175 - பி, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1
887325, 888325,889914, Resi:881898
Cell:98422-88325 மின்னஞ்சல்:ocean24@eth.net
4
திரு. டி.சி. குணாலன், DEE,
தாரா காளான் மையம்,
சிப்பிக்காளான், பால் காளான்  மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், எல்.ஜி.எம் – 2, சேலம் முகாம்,
மேட்டூர் அணை – 2, சேலம்
04298-40872
திரு. ஆர். பாபு,
ஈஸ்ட்வுட் அக்ரோ சிஸ்டம்,
காளான் கருவிழை, தாய் காளான் கருவிழை, வளர்ப்புக் குழாய், சிப்பிக்காளான் காளான் உற்பத்தியாளர், 3/27, பி, வி.ஆர்.ஆர் வளாகம், மருதமலை சாலை, வடவள்ளி,
கோவை – 41
424747, வீடு: 424736
திரு.பி.இழஞ்செழியன், எம். ராதாகிருஷ்ணன்,
எம். கலைவானன்,
க்ரீ் ஹவுஸ பால் காளான் பண்ணை,
சிப்பிக்காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர்,
ஆர் 18/1, வெப்ப உறைவிடம்,
ஆர் – 4, பகுதி, சுப்பிரமணியர் கோவில் எதிரில்,
மேட்டூர்அணை – 1, சேலம்
04298-43083, 43969
திரு. கே. ஜே. பாலா சுந்தரம், ஜே. சாந்தி,
இன்டிகா காளான் பண்ணை,
பால் காளான், காளான் விதைகள்,
அங்கக உரம், 4/62 – ஏ,
கவுண்டம்பாளையம் அஞ்சல்,
விஜயம்பாளையம் வழி, கோவை – 110
854262
8
திருமதி. வி.அகிலா, M.Com, PGDCA, மற்றும் வி. பாக்யா,
ஜெயசக்தி காளான் பண்ணை, சிப்பிக்காளான் உற்பத்தியாளர், நள்ளிக்கவுண்டனூர், அய்யம்பாளையம் அஞ்சல்,
கவுண்தப்பாடி – 638456
04285-24668, 04256-42084
திருமதி. வேதம்பாள் மூர்த்தி,
கள்ளக்குழு, ஓண்ஸ்டர் காளான் விதைகள் மற்றும் காளான் உற்பத்தியாளர், கள்ளன்கட்டுவலசு, போலவகள்ளிப்பாளையம் அஞ்சல், கோபி – 638476
04285-25083, 26470 p.p
10
திரு. டி. இராஜேந்திரனம், ஆர். கே. ராமஜெயம்,
மதுரா காளான் உணவு உற்பத்திப் பொருள், பால் மற்றும் சிப்பிக்காளான் உற்பத்தியாளர், ஊறுகாய் உற்பத்தியாளர், 3/261 ஹெச், தங்கா நகர், பெரம்பலூர் சாலை, துரையூர் – 621010
45297, வீடு: 44557
11 
திருமதி. எஸ்.மீனாட்சி, (W/o ஏ.ஆர். சுப்பிரமணியன்),
மகா காளான் பண்ணை, காளான் உற்பத்தியாளர், எக்ஸ் – 27,
கோவைப்புதூர், கோவை – 42
0422-807021
12 
எம்.ஆர்.டி. காளான் விதைகள்,
சிப்பிக்காளான், காளான் கருவிழை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில், 16, மாரியம்மன் கோவில் வீதி, டி.என்.பாளையம், பி.என்.புதூர், கோவை – 41
440223, 430830
13
திருமதி. ராதா சண்முகம், புரதா சுய உதவிக் குழு,
பால் மற்றும் சிப்பிக்காளான், காளான் கருவிழை மற்றும் சூப் பவுடர், ஊறுகாய் உற்பத்தியாளர், உலர் காளான், காளான் பிரிவு, செங்குளம் இன்குர் அஞ்சல், பெருந்துரை (வழி),
ஈரோடு, தமிழ்நாடு
04294-30321, 30564
மின்னஞ்சல்:drda@erode.tn.nic.in
14
திருமதி. வசந்தி ஜெயபாலன்,
ராஜ லக்ஷ்மி காளான் பண்ணை, காளான் கருவிழை தரத்தின் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கிடைக்குமிடம், 71 – பி, திலகர் வீதி, சீரனாயக்கன் பாளையம், கோவை – 7
434734
15
திரு. எஸ். செந்தில், ஆர். விஜயகுமார்,
ரேவதி காளான் பண்ணை,
பால் காளான் உற்பத்தியாளர் மற்றும் காளான் உற்பத்திப்பொருள் விற்பனை, 104 ரபிந்தர்நாத் தாகூர் சாலை,
மணியகாரன்பாளையம், கோவை – 6
0422-537161
16
திருமதி. ஆர். விஜயலக்ஷ்மி (W/o ரமேஷ் குமார்),
ஆர். வி. காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் விதைகள், 1/41, ஆசிரியர் குடியிருப்பு, குள்ளம்பாளையம், கோபி – 638 476
04285-28190
17
திரு. சி. கதிர்வேல்,
சக்தி காளான், சூப் பவுடர்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான், காளான் கருவிழை உற்பத்தியாளர், 69, கட்டூர் வீதி,
டி.என். பாளையம்,
ஈரோடு – 638 506
04295-60899
18
திரு. ஜே. சஹாயநாதன்,
சஹாய் காளான் பண்ணை,
சிப்பிக் காளான் மற்றும் காளான் கருவிழை  உற்பத்தியாளர்,
கருமபுரம் அஞ்சல்,
காரிப்பட்டி, சேலம் – 636 106
0427-812341
19
திரு.பி. மாரப்ப கவுண்டர்,
சக்தி காளான் பண்ணை,
பால், சிப்பிக் காளான், மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், குப்பக்காடு,
மலைப்பாளையம், முள்ளம்பட்டி அஞ்சல்,
நாசியனூர், ஈரோடு – 638 107
0424-556263

20
திரு. பி. சோம சுந்தரம்,
எஸ்.ஆர்.ஜி. காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், தெத்துக்காடு அஞ்சல், கலப்பனாயக்கன்பட்டி (வழி), நாமக்கல் – 637 404
04286-42259
21
திரு. கே. நட்ராயன்,
ஸ்ரீநிவாஸ் காளான் விதைகள்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கருவிழை மற்றும் அங்கக உரம் உற்பத்தியாளர், 3/59, சக்தி நகர்,
சர்வேயர் காலனி, கே.புதூர் அஞ்சல்,
மதுரை – 625 007
0452-560547
22
திரு. ஆர். ரங்கராஜ்,
ஸ்ரீ சக்தி காளான்,
சிப்பிக்காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், ஜோதிபுரம், 548, மேட்டுப்பாளையம் சாலை,
பெரியநாயக்கன் பாளையம், கோவை- 47
0422-893115,
0422- 893727
23
திரு.என். சுப்பிரமணியன்,
சுஜி களன் உலகம்,
பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், வங்கரன்காடு, குமாரசாமிபாளையம்,
கணபதிபாளையம் அஞ்சல், ஈரோடு – 638153
0424-51686
தொலைபேசி:98430-89681
24
கே. தியாகராஜன்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் உற்பத்தியாளர்,
சின்னியம்பாளையம், கஞ்சி கோவில் அஞ்சல்,
ஈரோடு – 638 116
04294-35556
25
திருமதி. ஜி. திலகவதி,
டி.ஜி. காளான்கள், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கருவிழை உற்பத்தியாளர், 44, தீம் கவுண்டர் வீதி, கவுண்டம்பாளையம், கோவை – 30
-
26
திரு. டி. யோகநாதம்,
வேல் முருகா களன், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் உற்பத்தியாளர், 376, ஒணைக்கட்டு சாலை,
சூரம்பட்டி வலசு,
ஈரோடு - 9     
272913
27
கே. வெங்கடேசன்,
சிப்பிக்காளான் உற்பத்தியாளர், ப்ளாட் எண். 4,
ராஜாஜி வீதி, நைநார் மண்டபம், பாண்டிச்சேரி – 4
043-355269
28
திரு. கே.எஸ். சரவணன் (சேகர்),
எஸ்.எஸ். காளான்கள்,
சிப்பிக்காளான், உலர் காளான் விதைகள் உற்பத்தியாளர், ஐயர் தோட்டம், களராமணி, கோபி(எஸ்) – 638 476
-
29
திரு. டி.பி. பொன்னுசாமி,
சக்தி காளான் மற்றும் விதைகள் மையம்,
சிப்பிக்காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை, திட்டம் பாளையம், மரவப்பாளையம், சென்னிமலை – 638 051
04257-43018,
04294-52247
30
திரு. டி. பரமேஸ்வரன்,
(S/o ஆர். தசப்பன்,
நில களன் பண்ணை, சிப்பிக்காளான் உற்பத்தியாளர்,
பச்சைமலை அடிவாரம் பின்புரம், கோபி – 638 476
26500

Saturday, April 20, 2013

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!


ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை 100 ரூபாய் எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றால் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி விடலாம். ஆனால், இன்றைக்கு 100 ரூபாய்க்கு ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகளைக்கூட வாங்க முடியவில்லை. அந்தளவிற்கு எகிறிக் கிடக்கிறது காய்கறிகளின் விலை. நான்கு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு மாதத்துக்கான காய்கறிகளுக்கு செலவு மட்டுமே ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம். இவ்வளவு செலவு செய்து வாங்கும் காய்கறிகள் ரசாயனத்தைக் கொட்டி விளைய வைக்கப்படுவதால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
ந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, நம் வீட்டின் மொட்டை மாடியிலேயே தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வதுதான். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள வட்டவிளை கிராமத்தைச் சேர்ந்த பிரபா அருள் தனது வீட்டுத் தோட்டத்தில் பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார். அவருடன் பேசினோம்.
”எங்க அத்தை மன அமைதிக்காகக் கொஞ்சம் செடி கொடிகளை வளர்த்தாங்க. பிறகு அதுல ஒருவித ஈடுபாடு வந்து ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்து வீட்டில் செடி, கொடிகளை வளர்க்கத் தொடங்கினோம். வீட்டைச் சுத்தி காலியிடம், மொட்டை மாடி, வராண்டான்னு எங்க வீட்டுல எங்கே பார்த்தாலும் செடிகளாகத்தான் இருக்கும். எங்களுக்குத் தேவையான காய்கறிகள் இதுலயே கிடைத்துவிடுகிறது.
வகை வகையாக..!
தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் மட்டுமில்லாம மலைப்பகுதிகள்ல விளையுற கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் மாதிரியான காய்கள், சுரைக்காய், பீர்க்கன், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, மக்காச்சோளம், வெண்டை, கூவைக்கிழங்கு, கறிவேப்பிலை, இஞ்சின்னு எங்க வீட்ல விளையாத காய்கறிகளே இல்லீங்க. மிளகாய்ல மட்டும் பச்சை, வெள்ளை, உருண்டை, ஃபேன்ஸி, பஜ்ஜி, காந்தாரின்னு சொல்ற மோர்மிளகாய்னு பல ரகங்க இருக்கு. கீரையில பொன்னாங்கன்னி, சிவப்பு கீரை, பச்சைக்கீரை, கொடி பசலி, ஆப்பிரிக்கன் கீரைன்னு பல ரகங்க இருக்கு. இதுபோக அயர்ன் பீன்ஸ் கொடியும் இருக்கு. இது பார்க்குறதுக்கு அரிவாள் மாதிரியே இருக்கும். பிஞ்சா இருக்கும்போது பறிச்சு பொறியல் வெச்சா அவ்வளவு ருசியா இருக்கும். இடை இடையே சேம்பையும், சேனைக் கிழங்கையும் வெச்சுருக்கோம்.
இதைத் தவிர சுண்ட வத்தல், வலுதலங்காய், அன்னாசி, தடியங்காயும் இருக்கு. வீட்டுக்குப் பக்கத்துல காலியா இருக்கற இடத்துல தென்னை, வாழை வெச்சுருக்கோம். இந்த செடி, கொடிகளுக்கு இடையிடையே கேந்தி, ரோஜா, ஆர்க்கிட் மாதிரியான அலங்கார செடி கொடிகளையும் வெச்சிருக்கோம்” என்ற பிரபா அருள் வீடுகளில் தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
பழைய சிமென்ட் சாக்கே போதும்!

வீட்டுக்கு முன்னாடி காலி இடம் இருக்கறவங்க நிலத்தைக் கொத்திவிட்டு விதைகளை, செடிகளை நட்டு வெச்சு காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இடம் இல்லாதவங்க மொட்டை மாடியிலயே தோட்டம் அமைக்கலாம். மொட்டை மாடியில தோட்டம் அமைக்கும்போது தண்ணி இறங்கி கான்கிரீட் பாதிக்குமேன்னு கவலைப்படத் தேவையேயில்லை. அதுக்கு சில வரைமுறைகளை கடைபிடிச்சாலே போதும். மரப்பலகைகளை வச்சு அதுமேல தொட்டி அல்லது சாக்கு பையை வச்சா கட்டுமானத்துல தண்ணி இறங்காது. செடிகளை வளர்க்க மண் தொட்டிதான் வேணும்னு இல்லை. சிமென்ட் சாக்கு, காலியான அகலமான டப்பாவுலக்கூட வளர்க்கலாம். நாங்க சாக்குப் பையிலதான் அதிகமா வளர்க்குறோம். சாக்கோட கீழ்ப்பகுதியில ஒரு அடுக்கு தேங்காய் மட்டையை அடுக்கணும். இதை வச்சா செடிக்கு ஊத்துற தண்ணி கீழே வடியாது. அதோட மண்ணும் உறுதியா இருக்கும். தேங்காய் மட்டைக்கு மேல இலை, தழைகளை ஒரு அடுக்கு போடணும். அதுக்கு மேல செம்மண், மணலை நிரப்பி அதோட கொஞ்சம் தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூளையும் போட்டு அதுக்கு மேலதான் செடிகளை நடணும். ஒருமுறை விதைகளை வாங்கி நடவு செஞ்சா போதும். அடுத்தடுத்த முறை விளையுற காய்கள்ல இருந்தே விதைகளை எடுத்து பயன்படுத்திக்கலாம். 
உடற்பயிற்சியோடு..!
அங்கங்க கேந்தி (செண்டுமல்லி) செடி இருக்கறது அழகுக்காக மட்டுமல்ல. அது பூச்சியை விரட்ட உதவுது. அதேபோல புதினா, செவ்வந்தி, துளசி, வசம்புன்னு பூச்சிகளுக்கு எதிரான செடிகளையும் வளர்க்குறோம். வசம்பு இருக்குறதால பாம்பு வராது. வாரம் ஒருமுறை பச்சை சாணத்தோட கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கை தண்ணியில கலக்கி ஒவ்வொரு செடிக்கும் ஒரு கொட்டாங்குச்சி அளவுக்குத் தெளிப்போம். மாசத்துக்கு ஒருமுறை கொஞ்சம் தொழுவுரத்தைப் போடுவோம். தினமும் ஒருமுறை செடிகளுக்கு தண்ணி ஊத்துறதே நல்ல உடற்பயிற்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். அப்பப்பக் கொஞ்சம் மஞ்சள் தூளையும் செடிகள்ல தூவி விடுவோம். இதுபோக சமையலறையில வீணாகுற கழிவுகளையும் செடிகளுக்கு உரமா போடுறோம்.
இந்த செடிகளுக்குக் கொஞ்சம்கூட ரசாயன உரம் கொடுக்காம இயற்கையான முறையில விளையிறதால அக்கம் பக்கம் இருக்கவங்க விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. வீட்டுத் தேவைக்குப் போக, தினசரி கீரை மட்டும் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு வித்துடும். நாங்க இதை வியாபாரமாச் செய்யலை. எங்களோட தேவைக்குப் போகத்தான் வெளியில கொடுக்குறோம். ஆனா, நகரங்கள்ல சொந்த வீடு இருக்கறவங்க மாடித் தோட்டம் அமைச்சு இயற்கை காய்கறிகளை உற்பத்தி பண்ணினா வீட்டுத் தேவையும் நிறைவேறும்; கணிசமான வருமானமும் கிடைக்கும்” என்றார்.
வாய்ப்பு உள்ளவர்கள் காய்கறிகளை உற்பத்திச் செய்து பயன்படுத்திக்கொள்வதோடு அதை விற்று நாலு காசும் பார்க்கத் தொடங்கலாமே!
படங்கள்: ரா.ராம்குமார்

Friday, April 19, 2013

மாடித்தோட்டம்


உணவுக்குக் காய்கறி… மருந்துக்கு மூலிகைகள்…
மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!
பல்பொருள் அங்காடிகளில்… பளீர் விளக்குகளின் வெளிச்சத்தில்… பளபளக்கும் காய்கறிகளை ஒரு வாரத்துக்குத் தேவையான அளவுக்கு மொத்தமாக வாங்கி, அவற்றைஎல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளுக்குப் பழக்கம். ஏன், கிராமங்களில்கூட இந்தப் பழக்கம் இப்போது மெள்ள தொற்றிவருகிறது. இத்தகையோருக்கு மத்தியில், பரபரப்பான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வெட்டூர்ணிமடத்தில் உள்ள தங்கள் வீட்டில், மாடித்தோட்டம் அமைத்து, தினமும் புத்தம்புதிய காய்கறிகளைப் பறித்து உண்டு, ஆரோக்கியத்தைக் கடைபிடித்து வருகிறார்கள், ஆட்ரிஜோவின் குடும்பத்தினர்!”16 வருஷத்துக்கு முன்ன அமைச்சது, இந்த மாடித்தோட்டம். இப்போ, நான் கோயம்புத்தூர்ல, பொறியியல் கல்லூரி துணைப் பேராசிரியரா இருக்கறதால… இதுல அதிகம் ஈடுபாடு காட்ட முடியல. லீவு கிடைச்சா போதும்… தோட்டத்தைப் பார்க்கறதுக்காகவே உடனே கிளம்பி வந்துடுவேன். அப்பாவும் அம்மாவும்தான் முழுக்க இந்த மாடித்தோட்டத்தைப் பாத்துக்கறாங்க” என்று உற்சாகமாகச் சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைத்தது பற்றிய அனுபவத்தை, தொழில்நுட்பத் தகவல்களோடு கலந்து சொல்ல ஆரம்பித்தார்.
கழிவுப்பொருட்களில் காய்கறிச்செடிகள் !
”எங்க வீட்டு மாடி, 600 சதுர அடி. இதுல சில மூலிகை உட்பட இருபதுக்கும் மேலான செடி வகைகள் இருக்கு. வீட்டுத் தேவைக்காக வெளியில் இருந்து விலை கொடுத்து காய்கறி வாங்கறதை நிறுத்தி, 15 வருசம் ஆச்சு. மாடித்தோட்டம் அமைக்கறப்போ தண்ணி இறங்கி, கட்டடம் சேதமாகாம இருக்கறதுக்காக… தொட்டிகளுக்கு அடியில, ரெண்டு அடுக்கா செங்கல் வைக்கணும். மண்தொட்டிதான்னு இல்லாம, மண் கொட்டி வைக்க முடியுற எதுல வேணாலும், செடிகளை வளக்கலாம். நாங்க எண்ணெய் கேன்களைக் கூட ரெண்டா வெட்டி செடி வெச்சுடுவோம். அப்பா ஃபிரிட்ஜ் மெக்கானிக். அதனால, அவர் கழட்டிப் போடுற உதிரி பாகங்கள்லகூட செடி வளர்க்கிறோம்.
தொட்டி, பாத்திரம், வாளினு செடி வைக்கறதுக்காக எதைத் தேர்ந்தெடுத்தாலும்… அதுல நாலு கதம்பையை (தேங்காய் மட்டை) வெச்சு, 5 கிலோ மண், ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கையளவு செங்கல்பொடி போட்டு, செடிகளை நட்டுடுவோம். சமையலறைக் கழிவுகள், கழிவு நீர் எல்லாம் எங்க வீட்டுப் புழக்கடையிலதான் சேருது. அங்க இருந்து மண் எடுத்துதான் செடி வளர்க்கிறோம். இப்படி சத்தான மண் கிடைச்சுடறதால… செடிகள் நல்லா வளருது.
செடிகளுக்கு உரமாகும் கழிவுகள் !
வீட்டுல நிறைய கலர் மீன்கள் வளர்க்கிறோம். மீன்தொட்டியில 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் மாத்தணும். அந்தத் தண்ணியையும் வீணாக்காம செடிகளுக்கு ஊத்திடுவோம். அதுல மீன்கழிவுகள் கலந்து இருக்கறதால… அது நல்ல திரவ உரமா ஆயிடுது. எங்க சொந்தக்காரர் ஒருத்தர் முயல் வளக்குறார். அவர் வீட்டுல இருந்து முயல் கழிவுகளை எடுத்துட்டு வந்து… இருபது லிட்டர் தண்ணீருக்கு, ஒரு கிலோ முயல் கழிவுனு ஒரு கேன்ல கலந்து வெயில்ல வெச்சுடுவோம். 15 நாட்கள்ல அதுல நல்லா பாசி பிடிச்சுடும். அதை அப்படியே செடிகள்ல ஊத்திடுவோம். அதனால, பயிர்களுக்கு நைட்ரஜன் சத்து அதிகமா கிடைச்சுடுது. இந்த மாதிரி இயற்கையா கிடைக்கிற பொருட்களை மட்டும்தான் ஊட்டத்துக்காகப் பயன்படுத்துறோம். மத்தபடி, தினமும் காலையில… சாயங்காலம் தண்ணீர் ஊத்துறதோட சரி.
எங்க தோட்டத்தில பீன்ஸ், கோழிஅவரை, மிளகாய், சுண்டைக்காய், வெண்டை, பாகற்காய், சிவப்புக்கீரை, வழுதலங்காய், பிரண்டை, கோவைக்காய்னு நிறைய காய்கறிகள் இருக்குது. மாடியில விளைஞ்சுருக்குற காய்களை வெச்சுதான் நாங்க சமையலை நிர்ணயிப்போம். அதேமாதிரி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, துளசி, செம்பருத்தி, மருதாணி, கீழ்க்காய்நெல்லி (கீழா நெல்லி)னு மூலிகைகளும் நிறைய நிக்குது.
பயிர்களைக் காக்கும் சிலந்தி-ஓணான்!
முழுக்க இயற்கை முறைனாலும், அப்பப்போ பூச்சிகளும் எட்டிப் பாக்கும். அதுக்காக ரசாயன மருந்தெல்லாம் அடிக்க வேண்டியதில்லை. செடிகள்ல வலை கட்டுற சிலந்தியை மட்டும் கலைக்காமல் விட்டுட்டாலே போதும்… பூச்சிகளை அது பாத்துக்கும். அதேமாதிரி செடிகளைத் தேடி வர்ற ஓணான்களையும் நாங்க விரட்டறதில்லை. அதுகளும் பூச்சி, புழுக்களைப் பிடிச்சு சாப்பிட்டுடறதால்… பூச்சி பிரச்னை இருக்கறதில்லை. இந்த மாதிரி சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கடைபிடிச்சாலே… நல்ல முறையில காய்கறிகளை உற்பத்தி பண்ணி சாப்பிட்டு, ஆரோக்கியமா வாழமுடியும்” என்று சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைக்கும் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைக்கான தீர்வு ஒன்றையும் சொன்னார்.
வாடாமல் காக்கும் கதம்பை!
”நாலு நாள் வெளியூர் போனா… செடிகள் வாடிப் போயிடுமேனுதான் நிறைய பேர் மாடித் தோட்டம் போடத் தயங்குறாங்க. ஆனா, அதுக்காகக் கவலைப்படத் தேவையில்லை. அந்தத் கவலையை… கதம்பை (தேங்காய் மட்டை) பார்த்துக்கும். ஆமாம்… ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீரை அது எப்பவும் கிரகிச்சு வைச்சுக்கிடும். அதனால கவலையேயில்லை” என்றவர், நிறைவாக…
இதயத்துடிப்பை சீராக்கும் செம்பருத்தி!
”செம்பருத்தி இலைகளை தினமும் சாப்பிட்டா… இதயத்துடிப்பு சீராகிடும். செம்பருத்தியையும், மருதாணியையும் சேர்த்து அரைச்சு தலையில் தடவினா, இளநரை கட்டுப்படும். கீழ்க்காய் நெல்லி… மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. சோற்றுக் கற்றாழைக்குள்ள இருக்குற ‘ஜெல்’லை தினமும் ரெண்டு துண்டு சாப்பிட்டா தோல் சம்பந்தமான நோய்களும், உணவுக்குழாய் பிரச்னைகளும் வரவே வராது. மாடித்தோட்டத்தால, காய்களுக்குக் காய்களும் ஆச்சு. மருந்துக்கு மருந்தும் ஆச்சு. இதைவிட வேற சந்தோஷம் என்ன இருக்க முடியும்?” என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்!
உண்மைதானே!
தொடர்புக்கு,
ஆட்ரிஜோவின், செல்போன்: 99947-97284

எந்த ஊரில் என்ன வாங்கலாம்!




ன்னியாகுமரி என்றாலே உடனே நம் எல்லோரது ஞாபகத்துக்கும் வருவது முக்கடல் சங்கமம்தான். தென்னை, வாழை, காய்கறி, ரப்பர் என மாவட்டம் முழுவதும் விவசாயம் பச்சைப்பசேல் என்று இருக்கிறது. இந்த பயிர்களுக்கு நடுவே, ஊடுபயிர் சாகுபடியாக தேனீ வளர்க்க, அதிலிருந்து விவசாயிகள் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த மாவட்டம் முழுக்க தேன் உற்பத்தி பெரிய அளவில் நடப்பதால், குறைந்த விலையில் தரமான தேன் கிடைக்கிறது. 
மார்த்தாண்டம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் தேன் விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனையாகிறது. இன்னும் சிலர் தனியாக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலர் ஜான் வெஸ்லியைச் சந்தித்தோம். ”இங்கு பெரும்பாலான விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து, இருப்பு வைத்து அக்மார்க் சான்றிதழ் பெற்று விற்பனை செய்கிறோம். 1937-ம் ஆண்டு இருபத்தைந்து நபர்கள் சேர்ந்து தொடங்கிய இந்த சங்கத்தில் தற்போது 1,361 பேர் உறுப்பினராக இருக்கின்றனர்.
எங்கள் சங்கத்திலிருந்து மட்டும் கடந்த வருடத்தில் 2,67,496 கிலோ தேன் இந்தியா முழுவதுக்கும் அனுப்பிருக்கோம். விவசாயிகள் கொண்டுவரும் தேனை பதப்படுத்தி ஒரு கிலோ பாட்டில் 186 ரூபாய்க்கும், அரை கிலோ 101 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். வாங்குபவர்கள் பாட்டில் கொண்டுவரும்பட்சத்தில் 500 ரூபாய்க்கு, தேன் வாங்கினால் பத்து சதவிகித தள்ளுபடியும், பாட்டில் இல்லையென்றால் ஐந்து சதவிகித தள்ளுபடியும் கொடுக்கிறோம். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை என மார்த்தாண்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சுற்றுலா வருபவர்கள் மார்த்தாண்டம் தேனை வாங்காமல் செல்வதில்லை. இதே அளவுக்கு தரமான தேனை வேறு ஊர்களில் வாங்க வேண்டுமென்றால் விலை அப்படியே டபுளாகும்’ என்றார்.
தேனை பதப்படுத்திச் சொந்தமாக விற்பனை செய்துவரும் அன்பு செழியனிடம் பேசினோம். ”என்னோட வீட்டு புழக்கடை, ரப்பர், அன்னாசி, வாழைத் தோட்டங்களில் தேனீ பெட்டிகளை வைச்சுருக்கேன். தேனீ பெட்டி தயாரிப்பு, பாதுகாப்பு நுட்பங்கள்னு நுணுக்கமான நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாத்துக்கும் மேல ஏக்கருக்கு பத்து பெட்டிதான் வைக்கணும். அதிகமா வைத்தால் தேன் கிடைக்குறது குறைஞ்சுடும். கூடவே பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுவதிலும் சிக்கலை ஏற்படுத்திடும். பொதுவாகத் தோட்டங்களில் பயிர்கள் பூ பூக்கும் காலங்களில் கூடுதலா தேன் கிடைக்கும். அதை எடுத்து நானே பிராசஸ் பண்ணி பாட்டிலில் அடைச்சு விற்பனை பண்ணிட்டு இருக்கேன். நுகர்வோர்களே தேடி வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. எங்க பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை குடிசைத் தொழிலாச் செஞ்சுட்டு இருக்காங்க” என்றார் மகிழ்ச்சியோடு.
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்த்தாண்டத்திலிருந்து தொடங்கி, குழித்துறை வரை சாலையின் இருபக்கமும் தேன் விற்பனை கடைகளின் அணிவகுப்புதான். கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவது போக, இங்குள்ள கடைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிலோ தேன் தினசரி வெளி இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அதிலும் ‘அக்மார்க்’ முத்திரை பெற்றுவிட்டால் அதற்கான விற்பனை வாய்ப்பும் ஏறுமுகம்தான்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகத்தில் வேளாண் அலுவலராக இருக்கும் ஆரோக்ய அமலஜெயனிடம் பேசினோம். ”தேனைப் பொறுத்தவரை பத்து கட்ட ஆய்வுக்கு உட்படுத்தி ஸ்டாண்டர்டு, ஏ, ஸ்பெஷல் என மூன்று பிரிவாக வகைப்படுத்துறோம். ஒரு குவிண்டால் தேனை தரம் பிரிப்பு செய்ய மத்திய அரசுக்கு 12 ரூபாய், மாநில அரசுக்கு 15 ரூபாய் என மொத்தம் 27 ரூபாய்தான் செலவாகும். அதாவது ஒரு கிலோவுக்கு வெறும் 27 பைசாதான். ஆனால், அக்மார்க் முத்திரை குத்திய தேனுக்கு உள்ளூர் முதல் உலகம் முழுவதும் விற்பனை வாய்ப்பும் பிரகாசம்தான்.
தேனைப் பொறுத்தவரை நாங்கள் நேரடியாகவே விவசாயிகள் தேனை சேமித்து வைத்துள்ள குடோன்களுக்குச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துறோம். அக்மார்க் முத்திரை வாங்கிய தேனை பதினெட்டு மாதங்கள் வரை விற்கலாம். மார்த்தாண்டம் தேன் மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால் நிறைய போலி தேன்களும் உலாவுகிறது. நுகர்வோர்கள் எச்சரிக்கையாக அக்மார்க் முத்திரை குத்திய தேனை வாங்கி பயன்படுத்தலாம்” என்று பயனுள்ள தகவல்களை எடுத்து வைத்தார்.
மார்த்தாண்டத்தைச் சுற்றி பல நூறு கடைகள் இருந்தாலும், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெந்நி கூட்டுறவு சங்கத்திலும், மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்திலும், கதர் கிராமத் துறை அலுவலகத்திலும் சுத்தமான தேன் கிடைக்கும். இங்கு சென்று வாங்க முடியாதவர்கள் அக்மார்க் முத்திரைகொண்ட தேனை மட்டும் வாங்கலாம்! அடுத்தமுறை நாகர்கோவிலுக்கோ, கன்னியாகுமரிக்கோ போனால், ஒரு பாட்டில் தேனை மறக்காமல் வாங்கி வரலாம்!ன்னியாகுமரி 

முருங்கைத் தேனுக்கு கூடுதல் விலை!
தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த திருஞானசம்பந்தம், ''நான், எங்க ஊர்ல இருந்து, 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்கள்ல அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்கள்ல பெட்டிகளை வைக்கும்போது, அந்தப் பயிர்களோட மகசூலும் கூடுது. அதனால, விவசாயிகள் அவங்க தோட்டத்துல பெட்டி வைக்கறதுக்கு ஒத்துழைக்கிறாங்க.
அரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகள்ல நூத்துக்கணக்கான ஏக்கர்ல செடிமுருங்கை விவசாயம் நடக்குது. அந்தப் பகுதிகள்ல எப்பவுமே அதிக அளவுல தேன் கிடைக்கும். அதனால அந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுருக்கேன். முருங்கைத்தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கறதால, அதுக்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப்பேட்டை, பல்லடம் பகுதிகள்ல, வருஷம் ஒரு போகம் மானாவாரியா நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் சமயத்துல இந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுடுவேன். பொங்கலூர், சுல்தான்பேட்டை பகுதிகள்ல வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகள்லயும் பூவெடுக்குற பருவத்துல பெட்டிகளை வெச்சுடுவேன்.
மாத வருமானம் 1 லட்சம்!
ஒரு பெட்டியிலிருந்து மாசம் சராசரியா 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமா, மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மத்த தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகுது. 6,500 ரூபாய் முதலீட்டுல ஆரம்பிச்ச இத்தாலியத் தேனீ வளப்பு மூலமா இப்போ, மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என்று பெருமிதப் பார்வையை வீசினார்.
நிறைவாக, ''தேனீக்களைப் போல நாமும் சுறுசுறுப்பாக இருந்தாதான் இந்த தொழில்ல லாபம் பாக்க முடியும். பெட்டியை வாங்கி வெச்சுட்டு 'தேமே’னு உக்காந்து இருந்தா... பல நேரங்கள்ல முதலுக்கே மோசம் வந்துடும்'' என்கிற எச்சரிக்கையையும் சொல்லி முடித்தார்.

 நிலமே தேவையில்லை...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. பிலிப்ஸ்ரீதர் தேனீ வளர்ப்புப் பற்றி சொன்ன தகவல்கள்...
''தேனீ வளர்ப்பு லாபகரமான தொழில்களில் ஒன்று. கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், 'விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, 'வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.
விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.
வியாபார ரீதியில்... அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.
'எந்த மாதத்தில், எந்த ஊரில் என்ன பயிர் இருக்கும்?’ என்ற தகவல்களைத் திரட்டி, ஒரு வரைபடம் தயார் செய்துகொண்டு... அதன் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்தால், அதிகளவில் தேன் அறுவடை செய்யலாம். இம்முறையில், குறைந்தது 100 பெட்டிகளாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். கிட்டத்தட்ட கிடை ஆடு மேய்ப்பது போலத்தான் இத்தாலித் தேனீ வளர்ப்பும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆடுகளை பகலில் இடம் மாற்றுவோம். தேனீக்களை இரவில்தான் இடம் மாற்ற வேண்டும்.
வில்லங்கமில்லாத விற்பனை வாய்ப்பு !
தேனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. முறைப்படி 'அக் மார்க்’ முத்திரை பெற்று, இதை விற்பனை செய்யும்போது நம்பிக்கை கூடுவதால், விற்பனையும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர், அதிகளவில் தேனை கொள்முதல் செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். தனியாக, சந்தைப்படுத்த முடியாதவர்கள் இச்சங்கத்தில் விற்பனை செய்யலாம்.
முறையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், ராணித் தேனீயில் இருந்து 'ராயல் ஜெல்லி’யை சேகரித்து லட்சக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்'' என்ற பிலிப்ஸ்ரீதர் நிறைவாக,
''நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெட்டிகளை, பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செழிப்பான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளில் 'நடமாடும் தேன் உற்பத்திக் கூடங்கள்’ இயங்குகின்றன. அதுபோல இங்கும் வசதிகள் ஏற்பட்டால், இன்னும் ஏராளமானோர் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி, எங்கள் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடத்தி வருகிறோம். ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்று சொன்னார்.
 தொடர்புக்கு,
ம.வே. திருஞானசம்பந்தம், செல்போன்: 99762-63519.
டாக்டர். இரா. பிலிப்ஸ்ரீதர், செல்போன்: 94429-18685.
- என்.சுவாமிநாதன்,
படங்கள். ரா.ராம்குமார்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites