தமிழகத் தொழில் முதலீட்டு கழகம் (டிக்), வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.நிலம், கட்டடம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு, நீண்ட கால தவணையில் கடன் வழங்கி வரும், தமிழக அரசின், 'டிக்' மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அரிசி மற்றும் மாவு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி, கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் போன்ற 25க்கும் மேற்பட்ட வேளாண் பொருள் மதிப்புக்கூட்டு தொழில் துவங்குவோருக்கு, கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாறுபடும் வட்டி விகிதம்: ஒரு தொழில் நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் 14.75 சதவீதம்,...