இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, January 28, 2012

பல வகையான ஐஸ் கிரீம் எப்படி தயாரிப்பது-வீட்டில் வைத்து செய்து விற்பனை செய்யலாம்

ஃபளூடா
* முதலில் துளசி விதையை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும்.
    *
பாலையும் தண்ணீரையும் கலந்து காய்ச்சி சர்க்கரையை கலந்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும்.
    *
வேகவைத்த அரிசி நூடுல்ஸை குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடித்து வைக்கவும்.
    *
பிறகு அரவை இயந்திரத்தில் ஐஸ்க்ரீமை போட்டு சிறிது பாலை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து எல்லாப் பாலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி ஒரு பெரிய கோப்பையில் ஊற்றி ரோஸ் எசன்ஸை கலந்து வைக்கவும்.
    *
பிறகு நான்கு பெரிய பீங்கான் குவளையில் ஊறிய துளசி விதை சிறிதைப் போட்டு பிறகு சிறிது நூடுல்ஸை போட்டு தயாரித்த பால் கலவையை அதன் மேல் ஊற்றி நீண்ட கரண்டியால் இலேசாக கலந்து ஜில்லென்று பரிமாறவும்.
யோக்கட் *
 ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.

    *
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்த பெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.

    *
அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமா மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90 க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    *
அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.

    *
பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60க்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    *
அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40 அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும். பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40 வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.

    *
யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும் பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.
ஜெலி ஐஸ் கிரீம்
ஜெல்லி பவுடரை அரை கோப்பை கொதிக்கும் நீரில் கரைத்து ஆறவிடவும். பாலை நன்றாகக் காய்ச்சி சர்க்கரை கலந்து ஆறவிடவும்.
இரண்டும் ஆறிய பிறகு ஒன்றாக்கி கடைந்த கிரீம், எஸன்ஸ் சேர்த்து குளிர்விக்குவும். வண்ணமயமான ஜெல்லி ஐஸ் கிரீம் தயார்.
அவல் ஆரஞ்சுப்பழ ஐஸ் கிரீம்
அவலை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும், நீரில் கழுவி, இரண்டு நிமிடம் ஊறவிட்டு கையால் நன்கு பிசறி வைக்கவும் (தண்ணீரை வடித்துவிட்டு).
பால் எடுத்துக் கொண்டால் அதை சுண்டக்காய்ச்சி ஆற வைத்து சர்க்கரையைப் போட்டு நன்கு கலந்து வைக்கவும்.

மில்க் மெய்ட் எடுத்துக் கொண்டால் சர்க்கரை சேர்க்காமல் காய்ச்சி ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும்
ஜி.எம்.எஸ்.ஐ கால் கோப்பை வெதுவெதுப்பான பாலில் நன்றாகக் கரையவிட வேண்டும். பின் ஜெலடீனை அரைக்கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கரைய விட வேண்டும்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் ஐஸ் கிரீம் ஸ்டெபிலைஸரைக் கலந்து வைக்கவும். தயார் செய்திருக்கும் சர்க்கரை கலந்த பால் அல்லது மில்க் மெய்ட்டில் ஜி.எம்.எஸ்.ஐஸ் கிரீம் ஸ்டெபிலைசர், ஜெலடின், கிரீம், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, ட்டி ஃப்ரூட்டி மற்றும் அவல் இவற்றை நன்கு கலந்து, ஐஸ் கிரீம் கப்புகளில் விட்டு, ஃப்ரீஸரில் வைக்கவும் தேவைப்படும்போது பரிமாறலாம்

காபி ஐஸ் கிரீம்
ஐஸ் கிரீம் விரும்பாத குழந்தைகள் இருக்க முடியாது. அதிலும் கோடை காலத்தில் பெரியவர்களும் விரும்புவது ஐஸ் கிரீம் வகைகளை.

கடையில் பெரியவர்களும் விரும்புவது ஐஸ் கிரீம் தரம் எப்படி இருக்குமோ, ஏதாவது கெடுதல் செய்து விடுமோ என்ற எண்ணம் இருப்பவர்களுக்காக வீட்டிலேயே தரமான ஐஸ் கிரீம் தயாரிப்பதற்கான செய்முறைகள் தரப்பட்டுள்ளன.

ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது கவனத்தில் வைத்துக்
கொள்ள வேண்டியவை.ஐஸ் கிரீம் செய்ய வேண்டும் என விரும்புகிறவர்கள் முன்னதாகவே ஃப்ரிட்ஜை டீப்ராஸ் செய்தால் ஐஸ் கிரீம் மிகவும் சீக்கிரமாக செட்டாகும்.

ஐஸ் கிரீம் ஃபிரிட்ஜில் வைக்கும்போது மூடி வைக்க வேண்டும். ஃப்ரீஸரில் மட்டுமே வைக்கவும்.
ஐஸ் கிரீம் தயாரிக்க தரமான எஸன்சை பயன்படுத்த வேண்டும். ஐஸ் கிரீமில் ஜெலட்டின் என்ற ஒரு பொருளை சேர்ப்பர். ஜெலட்டினுக்கு பதிலாக சைனா கிராஸும் சேர்க்கலாம்.

சில சமயம் வீட்டில் ஐஸ் கிரீம் செய்யும்போது கடையில் வாங்குவது போல இல்லாமல் க்ரிஸ்டல்களாக இருக்கும். அவ்வாறு வராமல் இருக்கத் தேவையான பொருள்களை கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒரு முறை எடுத்து மீண்டும் மிக்ஸியில் அடித்து வைத்தால் ஐஸ் கிரீம் நன்றாக வரும்.

பில்டர் காபி சூடாக இருக்கும்போதே அதில் கோகோ பவுடரை நன்கு கலந்து கொள்ளவும். பாதி பாலில் சோளமாவை கலந்து குழம்பாக வரும் வரை மிதான தீயில் வைத்து கிளறி எடுக்கவும்.

பிறகு எல்லாவற்றையும் பாலேட்டுடன் கலந்து 5 நிமிடம் நன்கு அடித்துக் கொள்ளவும். கலவையை கப்புகளில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்துக் குளிர விடவும். புது சுவையுடன் காபி ஐஸ் கிரீம் தயார்.
கலர்புல் பழ சாலட்
பழத்துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். கிரீமைத் தவிர்த்து சர்க்கரையும் மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து முள் கரண்டியால் நன்றாகக் கலக்கவும்.

பிறகு கிரீம் சேர்க்கவும்.பாதாம் முந்திரி மேலே தூவவும். கலர்புல்லான, சுவையான பழ சாலட் தயார்.

பிஸ்தா ஐஸ்கிரீம்
பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில்
பாலை ஊற்றி, காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து
கொதிக்கும் பாலில் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரையையும் சேர்த்து
கரையும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பில் வைத்து இறக்கி நன்றாக ஆறவிடவும். எசன்ஸும்
கலரும் சேர்க்கவும். இந்தக் கலவையை, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்து,க்ரீமை சேர்க்கவும். பிறகு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம்
கழித்து, வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யவும். உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும்.
ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும்.

ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்
கோவாவை ஃப்ரிட்ஜில் வைத்து, கெட்டியானதும் எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.அத்துடன் மைதாவைக் கலந்து பிசையவும். தண்ணீர் சேர்க்காமல் சோடா உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து பாகு காளிணிச்சவும். (சர்க்கரை உருகி கொதி வரும் வரை காய்ச்சினால் போதும்).
பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுத்து, ஜீராவில் போடவும். குங்குமப்பூவைக் கரைத்து, அதை குலோப்ஜாமூன் + ஜீராவுடன் கலக்கவும்.
பிறகு எசன்ஸையும் கலந்து, குலோப்ஜாமூனுடன் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும். வித்தியாசமான ‘ஜில்’ ஸ்வீட் & ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்.
பப்பாளி ஆப்பிள் ஐஸ்கிரீம்
பழங்களின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கவும். ஐஸ்கிரீமுடன் தேன், சர்க்கரை,
பழத்துண்டுகள் சேர்த்து கலந்து உடனே பரிமாறவும். குளிர வைத்தும் சாப்பிடலாம்.
முதலீடு
கிரீம் உற்பத்திக்கு தேவையான பாய்லர் மெஷின் ரூ.1.5 லட்சம், ஹோமோஜினேஷன் மெஷின் ரூ.2 லட்சம், ஏஜிங்வெட் மெஷின் ரூ.2 லட்சம், மெஷின்களை நிறுவ 20க்கு 60 அடி நீள, அகலமுள்ள  கட்டிடத்துக்கு அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம், ஐஸ் ப்ரீஸர் ரூ.15 ஆயிரம் என கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.85 லட்சம் தேவை.

உற்பத்தி செலவு: தினசரி 200 லிட்டர் கிரீம் தயாரிக்க ரூ.10 ஆயிரம் வீதம் மாதம் ரூ.3 லட்சம். வாடகை, மின்கட்டணம், ஊழியர்கள் 4 பேர் சம்பளம் ஆகியவற்றுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் என மாதம்தோறும் உற்பத்தி செலவுக்கு ரூ.3.5 லட்சம்.

துவக்கத்தில் கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ.9.35 லட்சம் வேண்டும்.

ஐஸ் கிரீம் பார்லர் மட்டும் வைக்க சாப்டி மெஷின் ரூ.3 லட்சம், இன்டீரியர் டெக்கரேஷன் ரூ.2 லட்சம். 10க்கு 20 அடி நீள, அகலமுள்ள கடை வாடகை அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம் என ரூ.5.5 லட்சம் தேவை.

பார்லருக்கு மாத செலவு மின்கட்டணம், 2 ஊழியர் சம்பளம், வாடகை ஆகியவற்றிற்கு மாதம் ரூ.20 ஆயிரம். விற்பனைக்குத் தேவையான வெண்ணிலா க்ரீம் 600 லிட்டர் ரூ.30 ஆயிரம். கப், கோன், ஸ்ட்ரா மற்றும் பல்வேறு வகை எசென்ஸ் ஆகியவை ரூ.5 ஆயிரம் என ரூ.55 ஆயிரம் தேவை. பார்லர் வைக்க துவக்கத்தில் ரூ.6.05 லட்சம் வேண்டும். உற்பத்தியோடு பார்லரும் சேர்த்து வைக்க ரூ.15.4 லட்சம் தேவை.

இயந்திரங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், உற்பத்தி பொருட்கள் பெரு மற்றும் சிறு நகரங்களிலும் கிடைக்கிறது.
பராமரிப்பு
ஒரு மணி நேர பயணத்தில் சப்ளை செய்யும் இடங்களுக்கு ஐஸ் ப்ரீஸர் மூலம் எடுத்து செல்லலாம். அதற்கு மேலான தூரத்துக்கு மைனஸ் 80 டிகிரி வெப்பநிலை நிலவும் வகையில் டிரை ஐஸ்களை, பெட்டிகளை சுற்றி வைத்து கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ஐஸ் கிரீம் உருகாமல் இருக்கும். ஐஸ் உருகிவிட்டால் அதில் பாக்டீரியா உருவாகும். பின்னர் மீண்டும் ப்ரீஸரில் வைத்தாலும், சாப்பிடுபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, சளி பிடிக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும்.
வெப்பநிலை முக்கியம்
ஐஸ்க்ரீமில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் உள்ளது. உடலுக்கு தேவையான சக்தி அளிக்க கூடியது. பொதுவாக ஐஸ்கிரீம் உடலுக்கு உஷ்ணம் தருபவை. அவற்றை குளிர் மற்றும் மழை காலத்தில் சாப்பிட்டால் உடல் கதகதப்பாக இருக்கும். ஹார்டு ஐஸ் கிரீம்களை மைனஸ் 30 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்காவிட்டால் பாக்டீரியா உருவாகும் வாய்ப்புள்ளது. மைனஸ் 5 டிகிரியுள்ள சாப்டி ஐஸ் கிரீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பானது. குளிர், மழை காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்காது.

கொடைக்கானல் அருவி

மலைகளின் அரசி ஊட்டியைப் பற்றி முன்னரே விளக்கியிருந்தேன். இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Click to enlarge map
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.


வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.


Silver Falls
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.


இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.


Kodaikanal Lake
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.


150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
Bryant Park
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.  


வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).


Coaker's walk




டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. 


இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம்   எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.


Dolphin's nose
பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
Suicide point
தலையர் நீர்வீழ்ச்சி:
      இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.



Thalaiyar falls
குணா குகைகள்:
      கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம். 


Guna caves
Pine forest:
      இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.


Pine forest
பியர் சோழா அருவி(Bear shola Falls):
        கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


Bear shola falls
Kodaikanal solar observatory:
         கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார். 


Solar observatory
திறந்திருக்கும் நேரம் 


  • காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
  • சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
        இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Pillar rocks

பாம்பர் அருவி:
         இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
Pambar falls

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்கும் இடம் கொடைக்கானல். மரங்களுக்கு அடைக்கலம் தரும் மலைகள்; இதுவரை பார்த்திராத பறவைகள்; என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் இடம். மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்றும் இதனை அழைப்பவர்கள் உண்டு.

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் :
** பிரையண்ட் பார்க்
** தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
** தூண் பாறைகள்
** குணா குகைகள்
** தொப்பித் தூக்கிப் பாறைகள்
** மதி கெட்டான் சோலை
** பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
** குறிஞ்சி ஆண்டவர் கோயில்
** செட்டியார் பூங்கா
** படகுத் துறை
** சில்வர் நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் ஏரி

ஏரியில் படகில் மிதந்தபடி ஏகாந்தமாய் பயணிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இயற்கையின் அழகையெல்லாம் கொட்டி வைத்திருக்கும் ஏரியழகின் ரம்மியம் தனித்துவமானது. கொடைக்கானலின் மையப்பகுதியே இந்த ஏரிதான். இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏரியில் மீன்கள் விடப்பட்டன. முதன் முதலில் 1932 இல்தான் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை தொடங்கியது. இப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாமும் செயல்படுகிறது.

கரடிச் சோலை அருவி

கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று களைத்துப் போய்விட்டீர்களா? அதோ தெரியுது பாருங்கள் அதுதான் கரடிச்சோலை அருவி. இங்கு வந்து கரடிகள் நீர் அருந்தியதால் சோலையுடன் கரடியும ஒட்டிக்கொண்டது. கொடைக்கானல் ஏரியிலிருந்து 2 கி.மீ. தூரமும் பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்திலும் கரடிச் சோலை உள்ளது.

ஃபேரி அருவி

மலையில் அருவி இல்லாமலா! இந்த அழகுமிகுந்த அருவி பயணிகளுக்கு உவகைதரும் உல்லாச இடம். கொடைக்கானல் ஏரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த நீரருவி அமைந்துள்ளது.

பம்பர் அருவி

பம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சகட்டம். இந்த அருவிக்கு கிராண்ட் கேஸ்கட் என்றொரு பெயரும் உண்டு. பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் தொலைவாக உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அழகிய அருவியை அடையலாம். கொடைக்கானலிலிருந்து நீங்கள் 4 கி.மீ. பயணிக்கத் துணிந்தவர் என்றால் பம்பர் அருவியை அடையலாம்.

வெள்ளியருவி

கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவி இது. ஆர்வம் உள்ளவர்கள் வெள்ளியருவியில் குளித்து மகிழலாம். இதைக்காண ஏரியிலிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும்.

தலையாறு அருவி

கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயரம் 975 அடி. அவ்வளவு உயரத்திலிருந்து நீர் கொட்டும் அழகை என்னவென்று சொல்வீர்கள்?

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி

தேர்வு பயத்தினால் ஹார்மோன்க ளின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன்  பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிக  மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப் பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும். இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.  படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள். - ஸ்ரீதேவி


ரெசிபி

பிரட் புதினா சாலட்: புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் - கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.

முளைப்பயறு துவையல்: ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும். முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

சோயாவடை: ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

டயட்

தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது. எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.  எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
*  சிறு கீரையுடன் மிளகுத்தூள், உப்பு போட்டு சமைத்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  செலரிக் கீரையுடன் திப்பிலி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*   தக்காளி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை தின மும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
*  திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
*  பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் மறதி குறையும்.
*  புளியாரை கீரையுடன் வேப்பந்துளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மை அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* பொன்னாவரைக் கீரையின் விதையை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
thnxs:http://www.dinakaran.com/tamilmurasu/Inner_Tamil_News.asp?Nid=20242

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites