இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, August 11, 2016

இளம் தொழிலதிபர்

கனவுகள் சுமக்கும் கண்களும் லட்சியங்கள் சுமக்கும் மனதுமாக துடிப்புடன் இருக்கிறார் கிருத்திகா. இளம் தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் வலம் வருகிற இன்ஜினியர். ப்ரின்ட் லே’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற நிறுவனம் நம்மூருக்குப் புதிதான 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டது. பெண்களுக்குப் பொருந்தா துறையாகப் பார்க்கப்படுகிற டெக்னாலஜியில் அசத்திக் கொண்டிருக்கிறார் கிருத்திகா!

2015லதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெளியில வந்தேன். படிப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட் ஆகி, ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலை கிடைச்சது. ஆனாலும், ‘வேணாம்’னு சொல்லிட்டேன். காரணம் என் கனவு... யெஸ்... எனக்கு ரொம்ப சின்ன வயசுலேருந்தே தொழிலதிபராகணும்கிறது ஆசை. வேலை கிடைச்சப்ப, `இது மாதிரி யாராவது பைத்தியக்காரத்தனம் பண்ணுவாங்களா? கிடைச்ச வேலையை விட்டுடாதே... 

இந்த வயசுல பிசினஸ் எல்லாம் சரியா வராது’னு நிறைய பேர் நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, என் கனவு அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலை. ரெண்டாவது வருஷம் இன்ஜினியரிங் படிக்கிறபோது நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து இன்டர்நேஷனல் ரோபோடிக்ஸ் போட்டியில கலந்துக்கிட்டோம். அதுல மனுஷனை மாதிரியே இயங்கக்கூடிய ஒரு ரோபோவை டிசைன் பண்ண யோசிச்சோம். அப்பதான் முதன் முதலா 3டி பிரின்ட்டிங் பத்திக் கேள்விப்பட்டோம். அதுலேருந்து அதைப் பத்தித் தேடித் தேடி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

படிப்பை முடிச்சிட்டு வௌியில வந்ததும் நான் பண்ணப் போற பிசினஸ் 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டதா இருக்கணும்னு அப்பவே தீர்மானம் பண்ணிட்டேன்...’’ என்கிறவர், தன்னுடன் இன்ஜினியரிங் முடித்த சக மாணவர் வைத்யநாதனின்  துணையுடன் பிசினஸை ஆரம்பித்து நடத்துகிறார்.

நம்ம நாட்டுக்கு 3டி பிரின்ட்டிங் புதுசு. வெளிநாடுகள்ல 3டி பிரின்ட்டிங் இல்லாத துறையே இல்லை. மண்டையோட்டை ரீப்ளேஸ் பண்ற அறுவை சிகிச்சைக்கும், எலிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் மருத்துவத் துறையில 3டி பிரின்ட்டிங் டெக்னாலஜியை யூஸ் பண்ணி இருக்காங்க. இன்னும் டிரெஸ் டிசைனிங், ஷூ டிசைனிங், பைக், கார் டிசைனிங்னு தினசரி நாம பயன்படுத்தற எல்லா தயாரிப்புகள்லயும் 3டி பிரின்ட்டிங் வந்தாச்சு.

இந்த முறையில பிளாஸ்டிக், மெட்டல், மரம்னு எதுல வேணாலும் ரொம்பவும் நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருட்களை அடுக்கு, அடுக்கா பிரின்ட் பண்ணி உருவாக்கலாம். கொஞ்சம் எளிமையா சொன்னா எல்லாருக்கும் புரியும். ஒருத்தங்க தன் வீட்டு அலமாரியில அழகான ரோஜா பொம்மையை வச்சிருந்ததாகவும் திடீர்னு அது உடைஞ்சு போனதாகவும் கற்பனை பண்ணிக்கோங்க. அதே மாதிரி ரோஜா பொம்மையைத் தேடிப் பிடிச்சு வாங்கறது கஷ்டம்னு வச்சுப்போம். 3டி பிரின்ட்டிங் முறையில அதே கலர்ல, அதே டிசைன்ல ரோஜா பொம்மையை உருவாக்க முடியும். 

இந்த மாதிரி எதை வேணாலும் டிசைன் பண்ணிக்கலாம். ஃபிலமென்ட் ரோல்னு ஒயர் மாதிரியான ஒரு மெட்டீரியல் இருக்கும். அதை 3டி பிரின்ட்டிங் மெஷினுக்குள்ள வச்சா, உருகி, திரவ நிலைக்கு மாறும். அது லேயர் லேயரா நமக்குத் தேவையான பொருளோட டிசைனை இழைச்சு, இறுதி வடிவத்துக்குக் கொண்டு வரும்...’’ - விஞ்ஞான ரீதியாக 3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தை விளக்குகிறார் கிருத்திகா. 

3டி பிரின்ட்டிங் முறையில மொபைல் கேஸ், லேப்டாப் கவர், கீ செயின், காபி மக், சாப்பிடற தட்டு, டைல்ஸ்... இப்படி எதுல வேணாலும் நமக்கு விருப்பமான உருவங்களை பதிச்சுக்கலாம். ஃபேவரைட் சினிமா நட்சத்திரங்கள், ஸ்போர்ட்ஸ் ஆட்கள், குடும்ப உறுப்பினர்கள்னு மனசுக்குப் பிடிச்சவங்க போட்டோவை பிரின்ட் பண்ணிக்கிறதுக்கும் இளைஞர்கள் மத்தியில பயங்கர வரவேற்பு இருக்கு...’’ என்கிற  கிருத்திகா, அடுத்தகட்டமாக தொழில் நிறுவனங்களுக்கான பொருட்களை ஆர்டர் எடுத்து 3டி முறையில் பிரின்ட் செய்து கொடுக்கும் பெரிய பொறுப்பையும் கைப்பற்றியிருக்கிறார்!

டிசைனிங் ஸ்டேஜ்லயே தவறு களை சரி செய்யவும், டிசைனை இம்ப்ரூவ் பண்ணவும் 3டி பிரின்ட்டிங் முறையில வாய்ப்புகள் அதிகம். செலவும் கம்மி...’’ என்கிறவர், இன்னொரு பக்கம் ரோபோடிக்ஸ் பயிற்சி  வகுப்புகள் எடுப்பதில் பயங்கர பிசி! வயசு வாரியா இந்தப் பயிற்சி வகுப்புகளை சொல்லித் தரேன். 5 வயசுக் குழந்தைக்கு பேட்டரியால ஒரு காரை ஓட்ட வைக்கக் கத்துக் கொடுக்கிறது மூலமா, அது எப்படி இயங்குதுனு யோசிக்க வைக்க முடியும். வரையற ரோபோ, பூச்சி ரோபோ, டூத் பிரஷ் ரோபோ எல்லாம் குழந்தைகளுக்கானது. 

அடுத்த லெவல்ல ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்களுக்கு விஞ்ஞானப்பூர்வமான ரோபோடிக்ஸ் வகுப்புகள் மூலமா, படிக்கிற பாடங்களை இன்னும் சுலபமா புரிஞ்சுக்கற மாதிரியான பயிற்சிகள் கொடுக்கறேன். மூணாவது காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கானது. இனிமே வரப் போற காலத்துல ரோபோக்களோட பயன்பாடு அதிகமா இருக்கப் போகுது. ரோபோ டிசைன் பண்ண லட்சக்கணக்குல செலவாகும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. 

அப்படியெல்லாம் இல்லை. சரியான பயிற்சியும் பிளானிங்கும் இருந்தா அதிக செலவில்லாம ரோபோவை டிசைன் பண்ணிடலாம். வெளிநாடுகள்ல வீட்டு வேலைகளுக்கான ரோபோக்கள் வந்தாச்சு. சமைக்கிறது, வீட்டை சுத்தப்படுத்தறதுக்கெல்லாம் அங்கே ரோபோ இருக்கு. நம்மூர்லயும் அது மாதிரி நிறைய ரோபோக்கள் வரணும். நானும் என் பிசினஸ் பார்ட்னர் வைத்யநாதனும் ரெண்டு ரோபோக்களுக்கான ஐடியாக்களை பிளான் பண்ணிட்டிருக்கோம். ஒண்ணு... ஹோட்டல்கள்ல சாப்பாடு பரிமாறும் ரோபோ. ரெண்டு கை, ரெண்டு கால்கள் இருந்தாதான் ரோபோனு நினைக்காதீங்க. ஒரு டிராலி மாதிரி இருந்தாலே போதும். ஒவ்வொரு டேபிளுக்கும் அதுவா போய் ஆர்டர் எடுத்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும். 

ஆட்கள் இல்லாத டேபிள்ல லைட், ஃபேன் ஓடிக்கிட்டிருந்தா தானா ஆஃப் பண்ணி, மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இன்னொண்ணு மனித வடிவ ரோபோ. நாம பேசறதைப் புரிஞ்சுக்கிட்டு சொல்ற வேலையைச் செய்யும். இந்த ரெண்டு கனவு புராஜெக்ட்டுகளையும் சீக்கிரமே முடிச்சிட்டு, அந்த சாதனை சந்தோஷத்தோட சீக்கிரமே மறுபடி சந்திப்போம்...’’  3டி புன்னகையுடன் வழியனுப்புகிறார் கிருத்திகா.
நன்றி குங்குமம் தோழி


படங்கள்: ஆர்.கோபால்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites