இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, May 3, 2014

பூசு மஞ்சள் புன்னகை!

Apply yellow smile!நாகரிகத்தின் தாக்கத்தால் நாளுக்கொரு கலாசாரமும் பாரம்பரியமும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று பெண்களின் மஞ்சள்  தேய்த்துக் குளிக்கிற பழக்கம். மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள்.  ஆனாலும், மஞ்சளை மறக்காத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பூசு மஞ்சள் தூள் தயாரிப்பில் பிசியாக  இருக்கிறார் கண்ணம்மா. குழந்தைகள், இளம்பெண்களுக்கு ஒரு  வகை, கொஞ்சம் வயதான பெண்களுக்கு ஒரு வகை என இரண்டு வித மஞ்சள் தூள்  தயாரிக்கிறார் இவர்.

‘‘நான் வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சு உபயோகிச்சுத்தான் பழக்கம். கடைகள்ல வாங்கற மஞ்சள் தூள் சருமத்துல எரிச்சலை  உண்டாக்கிறதாகவும், வெள்ளைப் புள்ளிகளை ஏற்படுத்தறதாகவும் நிறைய பேர் சொன்னாங்க. அப்ப நாங்க தயார் பண்ணினதைக் கொடுத்து யூஸ்  பண்ணச் சொன்னேன். எல்லாருக்கும் திருப்தி. அப்படியே ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்கவும் அதையே பிசினஸா ஆரம்பிச்சுட்டேன். பிறந்த குழந்தை  நிறம் கம்மியா இருந்தா, கிராமங்கள்ல கஸ்தூரி மஞ்சள் தேய்ச்சுக் குளிப்பாட்டுவாங்க. தேமலைப் போக்கி, கரும்புள்ளி, வெண்புள்ளிகளை நீக்கி, சரும  நோய்கள் வராமத் தடுக்கிற குணம் அதுக்கு உண்டு.

பருத்தொல்லை வராம இருக்கவும் மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கத்தை இள வயசுப் பொண்ணுங்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். மஞ்சள் பூசணும்,  ஆனா, அது தெரியக் கூடாதுன்னு நினைக்கிற இளம் பெண்களுக்கும் ஏற்றது. கூடவே வெட்டிவேர், பூலாங்கிழங்கு சேர்த்து அரைக்கிறதால, ரோம  வளர்ச்சியும் இருக்காது.  மஞ்சள் பூசினது தெரியணும்னு நினைக்கிறவங்களுக்காக குண்டு மஞ்சள் நிறைய சேர்த்து அரைக்கிற இன்னொரு தூளும்  தயாரிக்கிறேன்’’ என்கிறார்.

‘‘நல்ல மஞ்சளைத் தரம் பிரிச்சுக் கண்டுபிடிக்கிறது, பதப்படுத்தி, என்னென்ன சேர்த்து அரைக்கிறது, எப்படி மார்க்கெட் பண்றதுங்கிற விவரங்களைக்  கத்துக்கலாம். 50 கிராம், 100 கிராம் பாக்கெட்டாவும், 1 ரூபாய் பாக்கெட்டாவும் போட்டு கடைகள், கோயில்கள்ல கொடுத்தாலே  அதிக லாபம்  பார்க்கலாம். ஒரு கிலோ 250 ரூபாய். கிலோவுக்கு 40 ரூபாய் லாபம் நிச்சயம்’’ என்பவர், தனக்கு ஏற்றம் தந்த இந்த பிசினஸை மற்றவர்களுக்கும்  கற்றுத் தரக் காத்திருக்கிறார். ஒரே நாள் பயிற்சி தான். கட்டணம் 200 ரூபாய். (95661 12724)

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites