நாகரிகத்தின் தாக்கத்தால் நாளுக்கொரு கலாசாரமும் பாரம்பரியமும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று பெண்களின் மஞ்சள் தேய்த்துக் குளிக்கிற பழக்கம். மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள். ஆனாலும், மஞ்சளை மறக்காத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பூசு மஞ்சள் தூள் தயாரிப்பில் பிசியாக இருக்கிறார் கண்ணம்மா. குழந்தைகள், இளம்பெண்களுக்கு ஒரு வகை, கொஞ்சம் வயதான பெண்களுக்கு ஒரு வகை என இரண்டு வித மஞ்சள் தூள் தயாரிக்கிறார் இவர்.‘‘நான் வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சு உபயோகிச்சுத்தான் பழக்கம். கடைகள்ல வாங்கற...