ஆலோசனை
கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், 'புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத் தூர் வாரலாமா?’ என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக... கோடை காலத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர் வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்.
''கோடை காலங்களில் கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும்...