வதோதரா: கடந்த 12 ஆண்டுக்கு முன்னர்.. அந்த பெண் சாதாரண கிராமத்துவாசி. இப்போது மிகப்பெரிய கம்பெனியின் தலைமை நிர்வாகி வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ள அந்த கிராமத்து பெண் துளியும் படிப்பறிவு இல்லாதவர். இப்போது 40 பேருக்கு வேலை கொடுத்து சம்பளமும் வழங்கி வருகிறார்.நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள சபர்கந்தா மாவட்டம் பென்தர்புரா கிராமத்தை சேர்ந்தவர் ரமிலாபென்(43). இவரது கணவர் கோவிந்த்பாய். எழுத படிக்க தெரியாது. விவசாய வேலையும் சரிப்பட்டு வரவில்லை. சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ரமிலா மனதில் தொடர்ந்து உறுத்தி கொண்டிருந்தது. குஜராத் மாநிலம் பால் உற்பத்தியில் தன்னிகரற்று திகழ்கிறது. நாட்டில் வெண்மை புரட்சிக்கு காரணமாக இருந்த பால் உற்பத்தி இயக்கம், அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது. மாடுகள் வளர்த்து நாமும்...