இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, January 2, 2012

சூப்பர் டிப்ஸ்

23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

24.
பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25.
பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26.
ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு (மேலும் விவரங்களுக்கு: ஷ்ஷ்ஷ்.ழீutமீ.நீஷீனீ).
பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...
28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29.
மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30.
பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31.
டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32.
பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

33.
புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34.
இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பயிற்சியிலேயே பணம் பார்க்கலாம்!

35. '
நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!
36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங் புரோக்ராம்களை நடத்துகின்றன. மென்கலைகள், கம்யூனிகேஷன், ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள். நல்ல தெளிவான ஆங்கிலம் இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம். தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கலாம்.

37.
செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38.
சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.
ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39.
கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை சேவை மூலமாக அளிப்பது நல்லதொரு சுயதொழில். 'புத்தகங்களை நகலெடுப்பதைவிட, மலிவான வாடகைக்கு கிடைக்கிறதே' என்று மாணவர்களும் மொய்ப்பார்கள். இதில் ஆர்வமுடையவர்கள், எம்.வி. புக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தக வங்கிகளை அணுகி, அவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40.
வீட்டில் இணையதள வசதியிருந்தால்... ரயில் மற்றும் பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியை ஆரம்பிக்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites