இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, January 17, 2012

பெண்களுக்கு அதிக மோப்பத் திறன்,

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள் . பெண்கள் வேட்டைக்குப் போனார்களா ? அது ஆண்களின் வேலை அல்லவா என்று ஆச்சரியம் எல்லாம் படக் கூடாது . எல்லா விலங்குகளிலும் ஆணைவிடப் பெண்தான் அதிக வேட்டுவத் தன்மைகொண்டு இருக்கும் . கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் . அப்பிராணி, கடிக்காது . ஆனால், பெண் துரத்தித் துரத்திக் கடித்து மலேரியாவைப் பரப்பும் . காரணம், பெண்ணுக்குத்தான் தன் குட்டிகளைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது . இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத் திறன், அதிக பார்வைக் கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித் திறன், அவ்வளவு ஏன் ... துரித கதியில் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றைத் தகவமைத்து இருக்கிறது . இந்தப் புலன் நுணுக்கத்தினாலேயே ஆணைவிட, பெண் அதிக திறமையுடன் வேட்டையாட முடிகிறது . --- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10

1 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites