எங்க நண்பர் ஒருவர், வேடிக்கையாக கேட்டார்:
"இந்தியர்களுக்கும் சீன மக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?"
"உருவத்தில் இருந்து எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. எதுன்னு நீங்களே சொல்லுங்க."
" இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க."
காரணம்: வித்தியாசமாக இருக்கும் இடங்கள், விழாக்கள் தேடி பிடித்து சென்று பார்க்கும் பழக்கம் உள்ள நானும் என் கணவரும், Texas மாநிலத்தில் இருந்த பொழுது, தெரியாத்தனமாக ஒரு பாம்பு திருவிழாவுக்கு சென்று விட்டு வந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. அங்கே சென்ற பின் தான் கவனித்தேன். எத்தனையோ இந்தியர்கள் வாழும் அந்த மாநிலத்தில், எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த இந்தியரையும் அந்த திருவிழாவில் நான் பார்க்கவே இல்லை. எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல...
கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்.... அப்புறம் கம்பெனி எதற்கும் பொறுப்பு எடுக்காது.
வருடந்தோறும், Sweetwater என்ற சின்ன ஊரில், மார்ச் மாதத்தில் இரண்டாம் வார இறுதியில் (வியாழன் முதல் ஞாயிறு வரை) நடக்கும் இந்த திருவிழாவுக்கு அந்த ஏரியா மக்களிடம் வரவேற்பு அதிகம். Rotary Club - Lions Club மாதிரி உள்ள ஒரு சமூக அமைப்பான Jaycees குழுவினர், "World's Largest Rattlesnake Round-up" என்று நம்ம பக்கம் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாதிரி, பாம்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க.
வரலாறு:
ஒரு காலத்தில், அந்த பகுதிகளில் விஷப்பாம்பு வகைகளில் ஒன்றான Diamondback Rattlesnakes அதிகமாக இருந்து இருக்கின்றன. (இந்த பாம்புகளின் வால் பகுதிகளை, அந்த பாம்புகள் கிலுகிலுப்பை - rattle - மாதிரி ஆட்டி சத்தம் உண்டாக்கி எச்சரிக்கை செய்வதால், இந்த பெயர்.) அதனால் கால்நடைகளும் பாதிக்கப் பட்டு வந்து இருக்கின்றன. அந்த பாம்புகளின் வளர்ச்சியை குறைத்து, பாதுகாப்பு உள்ள இடமாக மாற்ற எண்ணி, மக்களையே அந்த பாம்புகளை பிடித்து வரச் செய்து அழிக்க வகை செய்து இருக்கிறார்கள்.
Diamondback Rattlesnake:
வாலில் உள்ள கிலுகிலுப்பை (rattle) பகுதி:
மக்களை உற்சாகப் படுத்தும் விதமாக, "இருப்பதிலேயே அதிக நீள பாம்பை பிடித்து வந்தவர்" - அதிக எடை உள்ள பாம்பை பிடித்து வந்தவர்" என்று இன்னும் சில வகைகளாக பிரித்து பரிசுகள் வழங்கி இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அந்த அளவுக்கு பாம்புகள் தொல்லை இல்லை என்றாலும் பழக்க தோஷம் யாரை விட்டது. மக்களும் "ருசி" கண்ட பூனைகள் மாதிரி, பாம்பு பிடிக்க கை துருதுரு என இருக்குதுன்னு தொடர்ந்து சொல்ல, 52 வருடங்களாக தொடர்ந்து இந்த பாம்பு விழா நடக்குது.
இதற்கெனவே பாம்பு பண்ணைகள் மூலமாக இந்த rattlesnakes வளர்க்கிறார்கள். விழா ஆரம்பிக்கும் நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் அந்த பாம்புகளை விட்டு விடுகிறார்கள். மக்கள் பாம்புகளை பிடித்து வர போட்டா போட்டி தான்..... பரிசுகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.
பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் டிப்ஸ் கொடுக்கிறார்கள்.
இந்த விழா மூலமாக கிடைக்கும் நிறைய பணத்தில் தான், இந்த ஊரின் பல நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது. அதை குறித்த விவரங்களுக்கு:
விழா சிறப்பு நிகழ்ச்சிகள்:
வியாழன் அன்று மதியம், அரை மணி நேர Parade ஒன்று ஊரின் முக்கிய பகுதியில் நடக்கும்.
வியாழன் மாலை, Miss Snake Charmer Scholarship Beauty Pageant நடைபெறுகிறது. தங்கள் கல்லூரி படிப்புக்காக, Jaycees வழங்கும் Scholarship (கல்வி உதவி தொகை) க்காக அழகி போட்டிகள் நடக்கும். அதில் வெற்றி பெறும் அழகிக்குத்தான், Miss Snake Charmer என்ற பட்டம் வழங்கப் படுகிறது.
2009 Miss Snake Charmer அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்:
வியாழன் முதல் ஞாயிறு வரை, இசை - நடனம் என்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு.
இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.... அப்புறம் தான் விஷமே ...சாரி, விஷயமே என்னை கொட்டுச்சு..... சாரி, திக்கு முக்காட வச்சுது..... ம் ..... ம்.......ம்...... ஸ் ...ஸ்......ஸ்.....
பிடிச்சுட்டு வந்த பாம்புகளை எல்லாம் என்ன பண்றாங்க என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்குது....
அந்த ஊரில் உள்ள பெரிய அரங்கில் உள்ளும் நடக்கும் நிகழ்ச்சிகளை காண நுழைந்தோம். ஒரே பேடு ஸ்மெல்லு ..... ஆமாம்ப்பா ..... துர் நாத்தம் தாங்கல ..... ஒரு பெரிய குழிக்குள் பிடித்து வரப்பட்ட எல்லா பாம்புகளும் போட்டு வைத்து இருந்தார்கள். அந்த பாம்புகள், தங்கள் பாதுகாப்புக்காக, எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் இப்படி ஒரு ஸ்ட்ராங் வாடையை - ஒரு மஞ்சள் திரவம் போல வெளிப்படுத்தி விடுமாம். ஆனால், அங்கே மக்கள் ஏதோ ரோசாப்பூ வாசனையில் அன்ன நடை போட்டுக்கிட்டு போற மாதிரி நடந்தாங்க.... நான் விடுவிடுவென அந்த இடத்தை கடந்து போய் விட்டேன்.
அந்த பாம்புகளிடம் இருந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது - அதை எப்படி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று மூன்று பேர்கள் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.
அடுத்து பார்த்த காட்சியில், எனக்கு குடலை பிரட்டி, அதுவே பாம்பு மாதிரி வெளியே வந்துடும் போல இருந்துச்சு.... இரண்டு பேர்கள் , சில பாம்புகளை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்து இருந்தார்கள். ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து, கசாப்பு கடைக்காரர் போல, பாம்பு தலையை வெட்டி கொண்டு இருந்தார்கள். நம்ம ஊர் பக்கம், ஆடுகள் பலி கொடுத்துட்டு போற மாதிரி, இங்கே சர்வ சாதாரணமாக பாம்புகளை பலி கொடுத்த மாதிரி சிரச் சேதம் செய்தாங்க... அந்த தலைகளை ஒன்று விடாமல் சுத்தம் செய்து ஒரு வாளியில் சேகரித்துக் கொண்டார்கள்.
அப்புறம், டீன் வயதில் உள்ள சின்ன பெண்களும் ஆண் பிள்ளைகளும், தலைகள் இல்லாத பாம்புகளை ஒரு பெரிய கொடியில், ஏதோ துணி காயப் போடுற மாதிரி காயப் போட்டு விட்டு, கிளிப் மாட்டி, அதன் தோலை, ஒரு வீச்சாக பிய்ந்து விடாமல், ஒரே பீசாக உரித்து கொண்டு இருந்தார்கள். யம்மா..... என்று ஓடி போய்ட்டேன்.
அடுத்த பகுதியில் அப்படி உரிக்கப்படும் தோல்களை, எப்படி பதப்படுத்துகிறார்கள் (how to make them into snake skin leather ) என்று ஒரு குட்டி வகுப்பு நடக்குது.
அடுத்து ஒரு திருவிழா கடைகள்/சந்தை பரப்பி அந்த அரங்குக்குள்ளேயே வைத்து இருந்தார்கள். அந்த பாம்பின் தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட தலைகள் வைத்து - குட்டி பாம்பு முதல் பெருசுகள் வரை - செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்கப்பட்டுக் கொண்டு இருந்தன.
கைத்தடி, கம்மல்கள், வளையல்கள், பெல்ட், ஜாக்கெட், பூட்ஸ், கைப்பைகள், பர்சுகள், மோதிரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று வகை வகையாக இருந்தன. ஏதோ கண்காட்சியகம் போல பார்த்து கொண்டு இருந்தேன். அந்த பாம்பு கொத்துனா, மனுஷனுக்கு சங்குதான். அந்த பாம்பை, இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு.... விற்பனை கோலகாலமாக நடந்து கொண்டு இருந்துச்சு.
rattlesnake belt, purse, money-clip:
rattlesnake pen:
rattlesnake கத்தி உறை:
அந்த பையன் போட்டு இருக்கிற செயின் பாருங்க:
Rattlesnake Boots: (most popular items)
rattlesnake real bones necklace:
நான் என் கணவரின் கையை பிடித்து கொண்டு, போதுண்டா சாமி..... என்னை பலி/பழி வாங்கியது போதும் ....வாங்க போகலாம் என்று இழுத்து கொண்டு வந்தால், அரங்கின் வெளியேறும் வாசல் பக்கம் - கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்துச்சு... வெளியே வர முடியல. அப்புறம், மெல்ல வெளியே வந்தால் அந்த வாசல் பக்கம் தான் ஒரு கடை போட்டு, french fries உடன் பாம்பு வறுவல் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஏதோ மீன் வறுவல் மாதிரி மக்கள், என்ஜாய் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் - சிறுவ சிறுமியர் - ஆண் பெண் - என்று எல்லோரும் ஜாலியா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
corn dog என்பது நாய் கறி அல்ல, சோள மாவில் முக்கி எடுத்து பொரிக்கப்பட்ட ஒரு வகை sausage ஆகும்.
Rattlesnake fry with french fries:
நான் அங்கே பிடிச்ச ஓட்டத்தில் எங்க கார் பக்கம் வந்துதான் நிறுத்தினேன். நாங்க அப்போ இருந்த லபக் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டோம். பசித்தாலும், ஏனோ எதையுமே சாப்பிடத் தோணல .....ரெண்டு நாளைக்கு....... அப்புறம் தான் சகஜ நிலைமைக்குத் திரும்பினேன்.
படங்கள்: நன்றி கூகிள் அக்கா (எனக்கு இருந்த பதட்டத்தில், நிறைய படங்கள் எடுக்கல. நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால், என்னையே படமா மாட்டி இருப்பாங்க.... என் நிலைமை நிச்சயமா அப்படி ஆகி இருந்து இருக்கும். அவ்வ்வ்வ்....)
பதிவை வாசிச்சிட்டு உங்களுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சுனா, நேரில் இதையெல்லாம் எடிட் பண்ணாமல் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க....
நாட்டுக்கு நாடு நஞ்சுபுர சம்பவங்கள் உண்டு போல.... அதற்கு அமெரிக்கர்களும் விதிவிலக்கு அல்ல. நேரில் பார்த்திரா விட்டால், நான் கூட நம்பி இருந்து இருக்க மாட்டேன்
Thnxs:http://konjamvettipechu.blogspot.com/2011_04_01_archive.html
0 comments:
Post a Comment