நம் நாட்டில் மணலரிப்பைத் தடுக்கவும், தோட்டங்களில் பல வகைச் செடிகளைக் காக்கவும் காற்றுத் தடுப்பாக சவுக்குமரங்களைப் பயிரிடுவார்கள். இவ்வாறு காற்றுத்தடுப்புக்காகக் கட்டப்படும் வேலியை வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று யோசித்ததில் ஒரு புதிய தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது. மரங்களைப் போன்ற வடிவு கொண்ட செயற்கைக் குச்சிகள் சவுக்கந்தோப்புகள் போல நெருக்கமாக நடப்பட்டு, அவை காற்றில் அலையும்போது அந்த அலைவில் இருந்து மின்சக்தி உற்பத்தி செய்யத் திட்டமிடுகிறார்கள்.
மேற்கில் அதிகளவில் காணப்படும் காற்றாலை மின் உற்பத்தி கேந்திரங்களின் குறைபாடுகள் இந்த செயற்கை வேலி முறையில் தவிர்க்கப்படும் என்று சொல்கிறார்கள். காற்றாலை விசிறிகள் பறவைகளுக்குச் சேதம் விளைவிப்பதோடு, பல ஊர்களில் அந்த விசிறிகளின் ரொய்ங் என்ற சப்தம் அமைதியைக் குலைக்கிறது என்று மக்கள் குறை சொல்கிறார்களாம். அந்தக் குறைகளை இந்தப் புதுமுறைச் செயற்கைக் காடு போன்ற உற்பத்தி முறை நீக்கும் என்கிறது இந்தச் செய்தி. படங்களும் செய்தியும் இங்கே பார்க்கலாம்.
2 comments:
nanaba neengal neradiyaaga cm min thani pirivirku message panni vidalaame? ithu patri avargaluku therinthirukka vaappillai.enve intha payanulla thagavalai muthalamaicharin thanippirivirkku anuppi vaiyungal nanba
தாங்கள் வருகைக்கு நன்றி.நல்ல கருத்து . நான் நல்ல இருப்பது பிடிக்கவில்லையா இருக்க கூடிய பழைய பிளான்ட் டை சரிசெய்தால் போதும்
Post a Comment