இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, January 16, 2012

தேங்காய்யின் மருத்துவ குணம்

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். * புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
* தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
* மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
* மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
தைலங்கள்:
* தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
* எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
*வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

அழகு குறிப்புகள்:தேங்காயில் அழகு குறிப்புகள்

முகம் டல்லடிக்கிறதா?

வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள்.
தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.

வெயிலால் வரும் கருமையை விரட்ட....

தேங்காய் பால் - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த "பேக்" போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த "பேக்"கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு "பளிச்" சிகிச்சை.

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்....

கேரட் சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.

முகத்தில் எண்ணெய் வடிகிறதா?

முல்தானிமட்டி - டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து முகத்துக்கு "பேக்" போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த "பேக்" போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க.....

உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்
பயத்த மாவு - 1 டீஸ்பூன்

மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு "பேக்" போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள்.
வாரம் இருமுறை இந்த "பேக்" போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

"சூப்பரான ஒர் ஹேர் பேக்".....

ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.

உடலைக் குளுகுளுப்பாக்க....

ஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு சியக்காய் போட்டு குளியுங்கள்.

வாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும்.

"கலக்கல் பேக்" இது...

உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன்
வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 2 டீஸ்பூன்

இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் "பேக்" ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர்.

தேங்காய் வைத்தியம்...

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.

பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites