இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 25, 2012

ரூ.8 லட்சம் செலுத்தினால் ஒட்டகச் சிவிங்கியை வேட்டையாடலாம்

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, நமிபியா போன்ற நாடுகளில் உள்ள காடுகளில் ஏராளமாக ஒட்டகச் சிவிங்கிகள் வாழ்கின்றன. இதன் நீண்ட கழுத்து, தோளின் மேல்பகுதியில் காணப்படும் வர்ணங்களும் குழந்தைகளை மிகவும் கவரும்.
ஆனால் இந்த ஒட்டகச் சிவிங்கிகளை சுற்றுலா பயணிகள் வேட்டையாட பணத்தை வாங்கி கொண்டு அனுமதி கொடுக்கிறார்கள். ரூ.8 லட்சம் செலுத்தினால் இதற்கான ஏற்பாடுகளை ஆப்பிரிக்காவில் உள்ள சபாரி கிளப் செய்து கொடுக்கிறது.
மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் முன்பு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். விரும்பினால் அதன் தலை, தோள் போன்ற சில உறுப்புகளையும் எடுத்து கொள்ளலாம்.
இதற்காக தென் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, ரஷியா, சாந்தி நோவியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். இவ்வாறு அனுமதி பெற்றும், திருட்டுத் தனமாகவும் வேட்டையாடுவது நடைபெறுவதால் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மேலும் கடந்த 1988ஆம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் இருந்த ஒட்டகச் சிவிங்கிகள் தற்போது 80 ஆயிரமாக குறைந்துவிட்டன.
0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites