கிரேகோரியன் நாட்காட்டியின் படி, 2011 எனும் வருடத்தை முடித்து 2012 எனும் புதிய வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் காலடி எடுத்து வைத்து வருகின்றன.அந்த வகையில் முதலில் 2012 வருட தொடக்கத்தை கொண்டாடி மகிழ்ந்தன பசுபிக் வலய நாடுகள்.
சமோ மற்றும் டோகெலு ஆகிய நாடுகளே சர்வதேச திகதி எல்லை வரைவு படி 2012ம் ஆண்டின் முதல் நாளை (ஜனவரி 1) ஐ முதலில் கொண்டாடின. பின்னர் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - பாங்காக் நகரங்களில் பிரமாண்ட வானவேடிக்கை நிகழ்வுகளுடன் சரியாக நள்ளிரவு 12.00 மணிக்கு நேர கணக்கெடுப்பு செய்யப்பட்டு புதுவருட பிறப்பு கொண்டாடப்பட்டது.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் பல மில்லியன் டாலர் செலவில் 15 நிமிட பிரமாண்ட வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. நியூசிலாந்தில் மோசமான காலநிலையால் பல இடங்களில் வெளி வானவேடிக்கை நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்ட போதும், ஆக்லாந்து ஸ்கை டவர் பிரதேசத்தில் பிரமாண்ட வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது.
சிட்னி வான வேடிக்கையின் போது 'time to dream' கனவு காண்பதற்கான நேரம் என்ற தொணிப்பொருளுடன் வானவேடிக்கை இடம்பெற்றது. சிட்னி துறை பாலத்தில், காட்டு விலங்குகளின் ஒலி மற்று பாப் இசையுடன், சுமார் மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொள்ள இக்கொண்டாட்டம் நடைபெற்றது.
0 comments:
Post a Comment