இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 19, 2012

தையால் தொழில்லில் நல்ல லாபம்


பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். பள்ளி சிருடை,நைட்டி ,ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்


கணவர் வெளி நாட்டில் டிரைவர்  
. வெளி நாட்டில் முடித்து விட்டு வந்துவிட்டார்
. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, பள்ளி சிருடை,நைட்டி ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது.
முழு நேர தொழிலாக தற்போது பள்ளி சிருடை,நைட்டி ,தலையணை உறை தயாரிக்கிறேன். இதன் மூலம்   நாள் தவறாமல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மாதம் 500 பள்ளி சிருடை,நைட்டி  தலையணை உறைகள் விற்கிறது. இதன்மூலம் ஓரளவு லாபம் வருகிறது. இடையிடையே வாடிக்கையாளர்களுக்கு ஜாக்கெட், சுடிதார் தைத்து தருகிறேன். அதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
தலையணை உறை விற்க செல்லும்போது போர்வை, பாவாடை, ஜாக்கெட் துணிகள் கிடைக்குமா என்று நிறைய பேர் கேட்டனர். இதனால் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கும்போது, பாவாடை, ஜாக்கெட் துணியும் வாங்கி வந்து விற்கிறேன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  தவணை முறையில் வாங்குகிறார்கள். அதில் உடனடியாக லாபம் கிடைக்காது. ஆனால் விற்பனையாகும் பொருட்கள் அதிகரிக்கும்.
வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் பொறுப்புடன் அமர்ந்து தலையணை உறை தைத்தால் தினசரி 4 டஜன் வரை தைக்கலாம். உறை தைக்க நெளிவு சுளிவுகள் தேவையில்லை. உழைப்பும் தொழில் நேர்த்தியும் போதும். நெருக்கமில்லாமல் தைத்தால் பிரிந்து விடும், அடுத்து நம்மிடம் வாங்க மாட்டார்கள். நல்ல நூலில், நெருக்கமாக தைத்தால் பிரியாது. வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.
கடைகளுக்கு சப்ளை செய்தால் குறைந்த லாபம் கிடைக்கும். ஆனால் உடனடியாக மொத்தமாக போட்ட காசை எடுத்து விடலாம். வீடு, வீடாக விற்றால் அதிக லாபம் கிடைக்கும். ஒரு மாதத்தில் உற்பத்தியான உறைகளை அந்தந்த மாதத்துக்குள் விற்றால் தான் அடுத்த மாதத்துக்கான முதலீடு கிடைக்கும். ஒரு பழைய தையல் மெஷினை மட்டும் வாங்கி போட்டால் போதும். உறை தைக்க பெரிய பயிற்சி வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் தலையணை  பழகிவிடலாம். தலையணை உறையோடு டர்க்கி டவல் மற்றும்  சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.


தையல் மெஷினில்பவர்பெடலை பொருத்தி சிலர் தைக்கிறார்கள். இதற்கு மின்சார செலவு ஆகும். லாபத்தில் ஒரு பகுதி மின்கட்டணத்துக்கு சென்று விடும். மேலும் பவர் பெடல் விலை ரூ.9 ஆயிரம். அதை வாங்குவதால் முதலீடும் அதிகரிக்கும். பவர் பெடல் இல்லாத தையல் மெஷினை பயன்படுத்துவதே நல்லது. தையல் மெஷினை காலால் இயக்குவதால்  நடை பயிற்சி மற்றும் உடல் பயிற்சி மேற்கொண்ட பலன் கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள், வெளியே நடை பயிற்சி மேற்கொள்ள முடியாத பெண்கள் தையல் மெஷின் இயக்கினால் உடற்பயிற்சியாக அமைவதோடு லாபமும் கிடைக்கும்.
முதலீடு
குறைந்தபட்சம் 10க்கு 15 அடி நீள, அகலமுள்ள அறை. தையல் மெஷின், ஸ்டூல், கட்டிங் டேபிள், கத்தரி, அலமாரி ஆகியவை தேவைபழைய தையல் மெஷின் ரூ.3 ஆயிரம், ஸ்டூல் ரூ.400, கட்டிங் டேபிள் ரூ.3000,  கத்தரி ரூ.300, அலமாரி ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.11700
உற்பத்தி செலவு
ஒரு நாளில்10  நைட்டிகள் தைக்கலாம். ஒரு நைட்டி தைக்க ஒரு 3-4 துணி தேவை. ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்தியில் ஈடுபட்டால் 1250 மீட்டர் துணி தேவை. ஒரு மீட்டர் குறைந்தபட்ச விலை ரூ.25 வீதம் ரூ.35 , ரூ.50 ஆயிரம். துணி கொள்முதல் மற்றும் விற்பனைக்கான போக்குவரத்து செலவு ரூ.2 ஆயிரம், தைக்க தேவையான பல வண்ண நூல் ரூ.100, தையல் இயந்திர பராமரிப்பு ரூ.100. உழைப்பு கூலி ரூ.250 வீதம் ரூ.6,250 என ஒரு மாத உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.39,700, அதிகபட்சம் ரூ.58,700 தேவை. முதலீடு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவை சேர்த்து துவக்கத்தில் தொழில் துவங்க குறைந்தபட்சம் ரூ.47,300, அதிகபட்சம் ரூ.100000 தேவை.
வருவாய்
ஒரு நைட்டிரூ.200 முதல் ரூ.400 வரை விலை வைத்து, 1250 நைட்டிவிற்பதன் மூலம் வருமானம் ரூ.62,500 முதல் ரூ.100000 வரை இருக்கும். இதன் மூலம் லாபம் குறைந்தபட்சம் ரூ.20000 அதிகபட்சம் ரூ.30000 கிடைக்கும். கூடுதலாக தையல் மெஷின் போட்டு, பெண்களை வேலைக்கு அமர்த்தி கூடுதலாக தைக்கலாம். லாபம் அதிகரிக்கும்.
சந்தை வாய்ப்பு
ஜவுளி கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்யலாம். கிரமம் கிரமம்மகா சென்று பள்ளி களில் ஆர்டர் எடுத்து தைத்து கொடுக்கலாம்.
 கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள், தனியார் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் சில்லரையாக விற்கலாம். கண்காட்சிகள், பொருட்காட்சிகளில் கடை போட்டு விற்கலாம்.
கிடைக்கும் இடங்கள்

.
ஈரோடு கனி மார்க்கெட்டில் செவ்வாய்தோறும் நடக்கும் ஜவுளி சந்தையில் பல்வேறு ரகங்கள், வண்ணங்கள், டிசைன்களில் தலையணை உறை துணிகள் குறைந்த விலையில் கிடைக்கும். இதே பகுதியில் பெட்ஷீட், பெட்கவர், டர்க்கி டவல், கைலி, பாவாடை, ஜாக்கெட் துணிகள் மொத்தமாக, பல ரகங்களில் கிடைக்கிறது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites