இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 18, 2012

மூங்கில் மற்றும் மூங்கில்தொழில்

மூங்கில் பயிர் பாதுகாப்பு.மூங்கில் பயிர் பாதுகாப்பு.
பூச்சிகள் தாக்குதல் :-கரையான்கள் :- வேர் பகுதிகளை கடித்து சேதத்தை உண்டாக்குகிறது.

வெள்ளைப் புழுக்கள் :- மண்ணிற்கு ஆடியில் இருக்கும் இவ்வண்டின் புழுக்கள் கிழங்கு பகுதிகளை கடிப்பதால் மரம் வறண்டு விடும்.

மடக்குப் புழு.

இப்புழுக்கள் இளநிலைக் காலங்களில் இலைகளை துளைத்தும் சற்றே வளர்ந்த பின் நீள்வாக்கில் மடக்கியும் இலைகளைத்தின்று சேதம் விளைவிக்கின்றன. மழை காலங்களில் இதன் சேதம் அதிகமாக இருக்கும்.


வெட்டுக் கிளிகள்.

இலைகளை கடித்து சேதம் உண்டாக்குகிறது.

ஹிஸ்பின் துளைப்பான்.

மழைக்காலங்களில் இலை சோகை இடுக்குகளில் இடப்படும் முட்டைகள் பொறித்தவுடன் மூங்கில் கணுக்களின் மேற்பரப்பை சுரண்டிவிடும். சோகைகள் உதிர்ந்தவுடன் கணுக்களில் துளையிட்டு குடைந்து சென்று சேதத்தை உண்டாக்கும். வளர்ந்த வண்டுகள் இலைத்துளிர்கள் தின்று வாழும்.

மூங்கில் அசுவினி.

இப்பூச்சிகள் நுனி குருத்துகளில் சாற்றை உறிஞ்சி சேத த்தை உண்டாக்கும். அதிக அளவில் இப்பூச்சிகளால் வெளிப்படுத்தும் சர்கரைத்துளிகள் மரங்களிங் படியும் இடங்களில் கருநிற பூசணங்கள் படர்ந்து ஒளிச்சேர்க்கை தடைபடும்.

தூர் கூன் வண்டுகள்.

இவ்வகை வண்டுகள் நுனி குருத்துகளை கடிப்பதால் மூங்கில் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் புழுக்கள் மூங்கிலையும் குடைந்து சேதம் ஏற்படுத்துகின்றன.

பூச்சிகள்கட்டுப்பாட்டு முறைகள்.

கரையான் மற்றும் வெள்ளைப்புழுக்கள் :-
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு குருணை மருந்தை மண்ணில் இடலாம். தூருக்கு 20 முதல் 50 கிராம் வரை இடலாம்.

இலை மடக்கு புழு மற்றும் வெட்டுக்கிளி :-
குளோரிபைரிபாஸ் 2 மில்லி லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

அசிவினி :-
டைமெதோயேட் அல்லது பாஸ்போமிடான் அல்லது மானோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

மூங்கில் துளைப்பான் :-
சீரிய சாகுபடி முறைகளை மேற்கொள்வதன் மூலமும் மூங்கில் காட்டை சுத்தமாக பராமரிப்பதன் மூலமும் இப்பூச்சிகளின் தாக்குதலை தவிர்க்கலாம்.

நாவாய் பூச்சிகள் :-
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெதோவேட் அல்லது மீத்தைல் டெமெட்டான் ஒரு மில்லி/லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்கலாம்.

நோய்கள்
1. மூங்கில் இலையுறை கருகல் நோய் :-

இலைஉறைகளில் முதலில் பழுப்பு நிற நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். இவை மிக வேகமாக பரவி இலையுறை முழுவதும் காய்ந்து விடும். இலையுறை களிமரத்திலிருந்து எளிதில் உரித்து விடலாம். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது மூங்கில் களிகள் குருத்திலிருந்து கீழ் நோக்கி காய்ந்து விடும். இதனால் தரமான மூங்கில் உற்பத்தி பாதிக்கும்.

2. களி அழுகல் நோய்

இந்நோய் இளம் மற்றும் முதிர்ந்த மூங்கில் களிகளை தாக்குகிறது. பாதிக்கப்பட்ட மூங்கில் களிகளில் அடிபாகத்தில் முதலில் கரும்பழுப்பு மற்றும் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின் வேகமாகப் பரவி தண்டுப்பகுதி பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட கழிகளில் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.

3. மூங்கில் கிழங்கு அழுகல் நோய்.

இரண்டு வருடங்களுக்குட்பட்ட மரங்களை இந்நோய் தாக்குகின்றது. முதலில் கழிகளின் அடிப்பகுதிகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி கீழ்நோக்கிப் பரவி கிழங்கினைத் தாக்கி அழுகலை உண்டாக்கும்.

4. வேர் அழுகல் நோய்.

நோய் தாக்கப்பட்ட மரங்களின் வேர்களில் அழுகலை காணலாம். பாதிக்கப்ட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடும். நோய் தாக்கப்பட்ட மரங்கள் மிக விரைவாகக் காய்ந்து வடும். காய்ந்த கழிகளின் அடிப்பகுதியில் காளான் தோன்றும்.

5. இலைக் கருகல் நோய்.

இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி காய்ந்து உதிர்ந்து விடும்.

6. துரு நோய்.

இலைகளில் முதலில் செம்பழுப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி மஞ்சள் நிறமாக மாறு உதிர்ந்து விடும்.

7. நச்சுயிரி நோய்.

இரண்டு வகையான நச்சுயிரி நோய்கள் காணப்படுகிறது. வெளிரிய பச்சை நிற கோடுகள் இலை நரம்புகளுக்கு இணையாக இலைகளில் தோன்றும்.

நோய் தீவிரமாகும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்து விடும்.

8. சிற்றிலை நோய்.

இந்நோயின் காரணி மைக்கோபிளாஸ்மா ஆகும். இந்நோயின் தாக்குதலால் இலைகள் சிறுத்து இடைக்கணுப்பகுதி வளர்ச்சி குறைந்து கொத்துக் கொத்தாகக்காணப்படும்.

ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகள்:
1. நோய்பூச்சிகள் தாக்குதலற்ற செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
2. நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
3. நோயுற்ற இலையுறைகை அகற்றி விட வேண்டும்.
4. கிழங்கு அழுகல், வேர் அழுகல் மற்றும் கழி அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த மரத்தினைச் சுற்றிலும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதம் அல்லது கார்பென்டசிம் 0.1 சதம் மருந்தினை வேர்கள் நன்கு நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும்.
5. இலைக்கருகல் : மான்கோசெப் 0.25 சதம்.
6. துரு நோய் : நனையும் கந்தகம் 0.2 சதம் தெளிக்கவும்.
7. நச்சுயிரி நோய் மற்றும் சிற்றிலை நோய் தாக்கிய மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites