




சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . விதையை எறிய வேண்டும் . இனிப்போ இனிப்பு . மிகவும் நன்றாக இருக்கும் . ருசியாக இருக்கும் .
![]() |
ரம்புட்டான் காய் |




அமெரிக்கா , மலேசியா , இந்தியா , இந்தோனேசியா , இலங்கை , தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது . இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன . இலங்கையில் ரம்புட்டானுக்கு பெயர் போன இடம் என்றால் அது மல்வானை தான் .
இந்த மரங்களில் பூச்சிகள் தீண்டினால் இந்த பழங்களை அரித்து விடும் . பூக்களை அளிக்கும் , காய்களை வெட்டும் என பல பிரச்சனைகளும் உண்டு . அதற்கு ஏற்ற பூச்சி கொல்லிகளை பாவித்து வந்தால் நல்ல பயனை பெறலாம் . மரங்களில் உள்ள காய்களை வைத்து மரத்துடன் தீர்த்து வாங்குவார்கள் . பின்பு அந்த மரத்தில் உள்ள பழங்களை பறிப்பார்கள் .
உடனே பிடுங்கி விற்கும் பழங்களுக்கும், நாள்பட்ட பழங்களுக்கும் வித்தியாசம் தெரியும் . உடன் பழங்கள் முள்கள் எல்லாம் நல்ல வடிவாக சில்லென இருக்கும் . பழம் கல் மாதிரி இருக்கும் . நாள்பட்டது என்றால் முள்கள் காய்ந்து பழம் காய்ந்து இருக்கும் .


ரம்புட்டான் பழம் ஒன்று இப்போது 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் . இனி பழங்கள் கூட கூட பழங்களின் விலை குறையும் . இரண்டு ரூபாய் , ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் . சிகப்பு பழம் ஒரு ருசி , மஞ்சள் பழம் ஒரு ருசி . நீங்களும் ஒருக்கா வாங்கி சாப்பிட்டுத்தான் பாருங்களேன்
Thnxs:http://pavithulikal.blogspot.com/2010/07/blog-post_17.html .
0 comments:
Post a Comment