அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே ஆளில்லாமல் பறக்கும் டிரோன் எனப்படும் விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இவற்றை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தி பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர்களை தயாரித்தனர். தற்போது அதற்கும் ஒருபடி மேலாக சரக்குகளை சுமந்து செல்லும் 2 ஆளில்லா விமானங்கள்(டிரோன்) வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு கேம்ப்ட்வையர், மரின் கார்ப்ஸ் என பெயரிட்டுள்ளனர். தற்போது இவை ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள கார்ம்சிர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரு ஆளில்லா விமானங்களும் இதுவரை 18 டன் சரக்குகளை சுமந்து சென்று இராணுவ வீரர்களுக்கு உதவி புரிகிறது. வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் மற்றும் எந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை சுமந்து சென்று பத்திரமாக விநியோகம் செய்துள்ளது. ஆப்காஸ்தானில் ரோட் டோரங்களில் வெடி குண்டுகளை வைத்து தீவிரவாதிகள் வெடிக்க செய்கின்றனர். அதனால் சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் சேதமடைகின்றன. இராணுவ வீரர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மேஜர் கெயல் ஓ கான்னர் தெரிவித்தார். |
0 comments:
Post a Comment