இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 26, 2012

இது தன்னம்பிக்கை கட்டுரை

நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய..?குமுதா தேவி. துரைசாமி&சாந்தி இருவரின் அன்புக்குப் பாத்திரமானவர். முடிந்து போக இருந்த குமுதாவின் வாழ்வை புதிதாக தொடங்கி வைத்த மணிவிழா தம்பதிகள் பற்றி பேசும்போது பிரகாசம் பெறுகிறது குமுதாவின் முகம். இலையுதிர் காலங்களுக்குப் பிறகு பசுமைப்பூக்கிற அழகான வசந்தகால தாவரம்போல பளீச்சென்று வரவேற்கிறார் குமுதா. வாழ்ந்து கெட்டதற்கான தடயம் கண்ணீரிலும், கெட்ட பிறகும் வாழ்ந்து காட்டிய பெருமிதம் சிரிப்பிலும் காட்டுகிறார்.

��சாந்தியும், துரைசாமியும் எனக்கும், என் குடும்பத்துக்கும் தெய்வம். என்னோட தாய்வீடு அவங்க வீடுதான். இனி வாழையடி வாழையா வர்ற என் சந்ததி எப்பவும் இவங்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கும்.  புல் பூண்டு இல்லாம என் குடும்பம் முடிஞ்சிருக்கும். கடவுள் மாதிரி வந்து என் குலத்தை காத்தாங்க.�� மடியில் வந்து அமரும் பேரக்குழந்தையை அணைத்தபடி கண்ணீரைக் கட்டுப்படுத்துகிறார். கரை உடைத்து நன்றியாக பெருக்கெடுக்கிறது நீர்.

��அர்ஜுன கவுண்டர்னு சொன்னா ஈரோடு ஜில்லாவுல எல்லாருக்கும் தெரியும். டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம். மில்லுல 700 பேர் வேலை செய்வாங்க. 20 வருஷத்துக்கு முன்னால வீட்டு வாசல்ல நாலு கார் நிக்கும். ராணி மாதிரி வெச்சிருந்தார் என்னை வெச்சிருந்தார் வீட்டுக்காரர். �ஜேசிஸ்� அமைப்பில் என் வீட்டுக்காரரும் தீவிரமான உறுப்பினர். அங்க வெச்சுதான் துரைசாமி, சாந்தி ரெண்டு பேரையும் தெரியும். வெளியில பேசி சிரிச்சு பழக்கம் இல்லை. வீடு உண்டு, வேலை உண்டு இருந்துட்டேன். கணவரும், பசங்களும்தான் என் உலகம். நாலு பேர்கிட்டே பழகணும்னு என்னையும் �ஜேசிஸ்� சங்க கூட்டங்களுக்குக் கூட்டிகிட்டு போனார். அப்பவும் அளவா பேசி, குறைவா சிரிச்சி பயந்து ஒதுங்கி நிப்பேன்.

என் வீட்டுக்காரருக்கு, துரைசாமி, சாந்தி ரெண்டு பேர் மேலேயும் அளவு கடந்த ப்ரியம் உண்டு. சாந்தியைச் சொந்த தங்கச்சியாவே நினைச்சாரு. என்னோட பொறந்த நாளு, எங்க கல்யாண நாளு எதுவும் ஞாபகம் இருக்காது. ஆனா, சாந்தி பொறந்த தேடி, அவங்க கல்யாண தேதி எல்லாம் மனப்பாடமா தெரியும். அந்த அளவு பாசம் வெச்சிருந்தார். எனக்கு தெரிஞ்சாலும், நான் அதிகம் நெருங்கி பழகினது இல்லை. காசு கஷ்டம்னா எனக்கு என்னனு தெரியாம பார்த்துகிட்டார். நல்லா இருந்த மனுஷன் திடீர்னு ஒருநாள் விபத்துல மாட்டிகிட்டாரு. கஷ்டம் சனி மாதிரி அங்க எங்க காலை சுற்ற ஆரம்பிச்சது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாத்த முடியலை. துரைசாமியும், சாந்தியும் அப்பவே வந்து நிறைய உதவிகள் பண்ணாங்க. எமன் இரக்கம் இல்லாம அவரை கூட்டிகிட்டு போயிட்டான். எல்லாம் குடுத்த மாதிரி குடுத்து, மொத்தமா எடுத்துகிட்ட கடவுள்கிட்ட போய் அழது தீர்த்தேன். 

கொடுத்து பழக்கமே தவிர, யார்கிட்டேயும் கை நீட்டி நின்னு பழக்கம் இல்லை. நீட்டி நின்னாலும், கைக்குடுக்க யாருமே இல்லாம போயிட்டா ஒத்த பொம்பளையா நான் என்ன பண்ண முடியும்? எதுவுமே இல்லாம இருந்து வாழ்ந்துடலாம். இருந்து இல்லாம போறதுதான் ரொம்ப கொடுமையான விஷயம். பல நூறு குடும்பங்களுக்குச் சாப்பாடு போட்டவரோட பசங்க அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுனு வழி தெரியாம நின்னோம். மத்தவங்கிட்டே இருந்து இரக்கம் கிடைச்சதே தவிர, சாப்பாடு கிடைக்கலை. சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டணுங்கிற தன்னம்பிக்கை எனக்கு வர்ற சந்தர்ப்பம் இல்லை. அப்படி நான் வளரவும் இல்லை. வாழவும் இல்லை. கூட்டிகிட்டு போக ஆள் இல்லாம வெளில கால் எடுத்து வெக்க மாட்டேன்.

என்ன பண்றது, யார்கிட்டே போய் நிக்கிறதுன்னு தெரியாம, கோழைத்தனமா ஒரு முடிவு எடுத்தேன். படங்களோடு செத்துப்போயிடலாம் முடிவு எடுத்தேன். சாப்பாடுல ஏதாவது  மருந்து கலந்து கொடுத்துட்டு குடும்பத்தோடு செத்துபோறது முடிவெடுத்தேன். சாகிறதுக்கு மருந்து வாங்க காசு இல்லை. ஈரோடுல இருக்கிற டாக்டர்கள் நல்லா பழக்கம். �தூக்கம் வரலை�னு சொல்லிவிட்டா நாலு மாத்திரை கொடுத்துவிடுவாங்க. அந்த மாதிரி எல்லா டாக்டருகிட்டேயும் சொல்லி 50 தூக்க மாத்திரைகள் வாங்கினேன். என் பொண்ணுக்கு நினைவு நல்லா தெரியும். அவ, எப்படியோ சாந்திக்கு போன் பண்ணி, எங்கம்மா �மருந்து குடிச்சி செத்து போகலாம்�னு சொல்றாங்கனு சொல்லியிருக்கா. ராத்திரி எத்தனை மணிக்கு சொன்னானு தெரியலை. விடியல்ல துரைசாமியும் சாந்தியும் வீட்டுக்கு வந்தாங்க. �உங்க சொத்து எல்லாம் வாங்கிட்டு போகலாம்�னு சொல்றாங்க. �எதுவுமே இல்லாம கதியத்து நிக்கிற எங்ககிட்டே என்ன சொத்து இருக்கு? சாகறதுக்கு மாத்திரைதான் வெச்சிருக்கேன்�னு சொல்லி அழுதேன். �அந்த சொத்தைதான் கொண்டு வாங்க�னு சொல்லி எங்கிட்டே இருந்து வாங்கிட்டாங்க. கஷ்டத்தையும் தந்து, கூடவே கடவுள் மாதிரி ரெண்டு பேரையும் அனுப்பி வெச்சிட்டார் கடவுள்.

�எந்தத் தப்பான முடிவும் எடுக்கக்கூடாது�னு சத்தியம் வாங்கினாங்க. எவ்ளோ பெரிய தப்பான முடிவு எடுத்தேன்னு புரிய வெச்சாங்க. �எதுக்கும் கவலைப் படாத. உனக்கு ஏதாச்சு செய்யணும்னா நாங்க இருக்கோம். கவலைப் படாதே� ஆறுதலுக்கு நாலு வார்த்தை சொன்னாங்க. சொல்லி 16 வருஷமாச்சு. குடுத்த சொல்லு மீறி நடந்துக்கலை. குடுக்கிறதை வாங்கிக்காம போயிடப்போறேன்னு அவங்க ரெண்டு பேரும் பதறுனாங்க. சொந்தம் இல்லை. பந்தம் இல்லை. கூட பொறக்கலை. நன்றிகடன் எதுவும் பாக்கி இல்லை. அவங்க எனக்கு செய்த எதையும் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களால திரும்ப தர முடியாது.

ஆனா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை வருஷமா எனக்கு தாய்வீட்டு சீர் அவங்க வீட்டுல இருந்துதான் வரும். நல்ல நாள்ல பொடவை, பலகாரம் எல்லாம் முறைப்படி வீடு  தேடி வரும். தனிமையில் திகைச்சு நின்ன என்னை, அவங்க எந்த ஊருக்கு டூர் போனாலும் கூட்டிகிட்டு போனாங்க. அவங்க பிள்ளைங்களோடு எங்க பசங்களையும் உறவு முறை சொல்லி சமமா வளர்த்தாங்க. பெரிய பொண்ணுக்கு கல்யாண செலவுல இருந்து, பிரசவ செலவு வரைக்கும் பார்த்தாங்க. பையனை படிக்க வெச்சு வேலை வாங்கிக் கொடுத்து, இப்போ புதுசா சொந்தமா கம்பனி நடத்த உதவியும் பண்ணாங்க. பையனோட கல்யாணத்துல சாப்பாடு செலவு 2 லட்சத்தை அவங்கதான் பொறுப்பு எடுத்துகிட்டாங்க. இது எதுவும் நாங்க �உதவி வேணும்�னு கேட்டு செய்யலை. வீடு தேடி வந்து செஞ்சாங்க. இந்தக் காலத்துல யாருங்க பண்ணுவாங்க?
துரைசாமியும், சாந்தியும் பண்ணங்க. ஒரு முறைகூட முகம் சுளிச்சது இல்லை. சலிச்சுகிட்டது இல்லை. இவங்களுக்கு இதை செஞ்சோம்னு வாய்விட்டு சொன்னது இல்லை.

எல்லாதுக்கும் மேல எனக்கு சொந்த மளிகை வெச்சு கொடுக்க ஏற்பாடு பண்ணாங்க. எனக்கு தொழில் எதுவும் தெரியாது. கடையில் போய் பொருள் வாங்கிய பழக்கமே இல்லாதபோது, கடை வைத்து வியாபாரம் செய்வது எப்படி? தினமும் என் வீட்டுக்கு சக்தி மசலா நிறுவனத்திலிருந்து கார் வந்துடும். பெருந்துறையில் துரைசாமி அவர்களின் மளிகை கடை இருக்கும். அந்தக் கடையில்தான் மளிகை கடை நடத்துவற்கான் பாலபாடம் தொடங்கியது. வீட்டுக்கு கார் அனுப்பி நான் தொழில் கற்று கொள்ள, பிறகு பணம் செலவு செய்து மளிகை கடையும் வெச்சு கொடுத்தாங்க. �கண்ணன் மளிகை� கடையில் கடந்த பதினாறு வருஷத்தில் ஒரேயொரு மசலா பொடிமட்டுமே விற்பனையாகும்.

சக்தி மசலா தவிர வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டாலும் எனக்கு கோபம் வந்துவிடும். நாங்களே எங்க சொந்த காலில் நின்று வாழக் கற்றுகொடுத்ததுதான் அவர்கள் எனக்கு செய்த உதவிகளிலேயே மிகப்பெரிது. 16 வருஷத்திற்கு முன்னால் கொடுத்த வாக்கை  கணவனும் மனைவியும் கண்போல காப்பாத்துறாங்க. காலத்துக்கும் நன்றி சொல்றதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத இடத்துல இருக்கோம். என்னை மாதிரி எத்தனையோ பேரோட வாழ்க்கையில் வௌக்கு ஏத்தி வெச்சவங்க, இன்னு பலகாலம் நல்லா இருக்கணும். அப்போதான் என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும்�� என்கிற குமுதா தேவியின் ஒவ்வொரு வார்த்தையிலும் துரைசாமி&சாந்தி துரைசாமியின் வணங்கத்தக்க வாழ்கை வெளிப்படுகிறது. தனக்குக் கிடைத்த பலத்தை வைத்து சாதாரண மனிதர்களின் வாழ்வைத் தொட்டு துலங்க வைப்பவர்கள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்கள். துரைசாமி&சாந்தி தம்பதி நம் கண்முன்னால் வாழ்கிறார்கள். 

2 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites