இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, June 7, 2012

தோரணம் தயாரித்தல்

வீட்டுக்கு கோலம் எத்தனை அழகோ, அதைவிட அழகு வாசலை அலங்கரிக்கும் தோரணம்! பண்டிகை, விசேஷ நாட்களில் வாசலில் தொங்கவிடுகிற மாவிலைத் தோரணத்தால் வீடே களை கட்டும். என்றோ ஒருநாள் கட்டுகிற தோரணமே இப்படி என்றால், எப்போதும் அது வாசலுக்கு அழகு சேர்த்தால்?

நிலையான தோரணங்கள் செய்வதில் நிபுணி, மீஞ்சூர் மீனாட்சி. மரம், செராமிக், எம் சீல் என விதம்விதமான பொருட்களில் தோரணங்கள் செய்கிற மீனாட்சிக்கு, ஏகப்பட்ட கைவினைக்கலைகள் அத்துப்படி. தோரணங்கள் செய்யக் கற்றுக்கொண்டு, தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘மரம், கிளே, எம் சீல், செராமிக், குந்தன் கற்கள், லேஸ், மணிகள், பசை, ஃபேப்ரிக் பெயின்ட், 3டி அவுட் லைனர்... எல்லாத்துக்கும் சேர்த்து 500 ரூபாய் முதலீடு தேவை.’’

எத்தனை மாடல்?

அடிப்படை மாடல்கள் உண்டு. இலை, பூ, இதய வடிவம்னு கற்பனைக்கேத்தபடி, அதையே எத்தனை வித மாடல்களா வேணாலும் மாத்திக்கலாம். வாசலுக்கு மாவிலை மாடல்லயும், சாமி ரூம் வாசலுக்கு சாமிப்படங்கள் வச்ச மாடல்லயும் செய்யலாம்.’’

ஒரு தோரணத்துக்கு எத்தனை நாள்?

‘‘மரத்துல செய்யறதா இருந்தா, டிசைன் வரைஞ்சு கொடுத்து, அளவு சொல்லி, கார்பென்டர்கிட்ட வெட்டி வாங்கணும். மத்தபடி கிளே, செராமிக்ல நாமே கையால வெட்டி பண்ணலாம். வெட்ட, ஒட்ட, அலங்காரம், பெயின்ட் பண்ண எல்லாம் சேர்த்து ஒரு தோரணம் முடிக்க 3 நாள் ஆகும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘வருஷத்துல எல்லா நாளும் விற்பனை ஆகிற பொருள் இது. கிரகப்பிரவேசம், கல்யாணம்னு எந்த நல்ல விசேஷத்துக்கும் அன்பளிப்பா கொடுக்கலாம். சாமிப்படங்கள் விற்பனை செய்யற கடைகள்லயும், ஃபேன்சி கடைகள்லயும் சப்ளை பண்ணலாம். 500 ரூபாய் செலவழிச்சுப் பண்ற ஒரு தோரணத்தை ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம்.’’

தொடரும் ......>>>>>>>>>>>>>>>

1 comments:

சுயதொழில் முனைவோருக்கு உங்கள் தளம் நல்ல ஒரு வழிகாட்டல்..பயன் தரும் நல்ல விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.......
புதிய வரவுகள்:
பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

எனது தள கட்டுரைகளில் சில:
அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-தளத்திற்கு வந்து உங்க கருத்தை தெரிவியுங்கள்........www.tvpmuslim.blogspot.com

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites