இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 26, 2012

பொரி செய்வது எப்படி

அரிசியானது அடு மணலுடன் சேர்த்து இரும்பு அல்லது மண் சட்டியில் சூடு செய்யப்படும். நன்றாக கலக்கும்போது அரிசியானது வெடித்து உப்ப ஆரம்பிக்கும். மணலுடன் சேர்ந்த அரிசியை சலித்து பிரிக்கவேண்டும். புழுங்கல் அரிசி பயன்படுத்தி தயார் செய்யும்போது சாம்பல் நிறத்திலிருந்து தூய வெள்ளை நிறம் பெறலாம். இது விற்கும்போது உப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் விற்கப்படுகிறது. இது சாப்பிடும்போது மோர் அல்லது பால் சேர்க்கலாம்.

பொரி

பொரியானது பண்டைய காலந்தொட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் எளிய உணவாகும். இதனுடன் வெல்லம்,
பொரிகடலை துருவிய காய்கறிகள் மற்றும் மசாலா வகைகள் சேர்த்தும் சாப்பிடலாம். பொரியானது பெரும்பாலும் வீட்டிலும் அல்லது சிறு தொழிலாகவும் சிறந்த வல்லுணர்களால் தயாரிக்கப்படுகிறது.
பழமையான முறையில் நெல்லானது ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து (தழும்பும் வரையும்) நீர் வடிக்கப்பட்டு ஆவியில் வேக வைத்து அல்லது வறுக்கப்படுகிறது. மணலினால் (புழுங்கல் வைப்பதற்காக) புழுங்க வைத்த நெல்லானது அரைக்கப்பட்டு, உப்பு சேர்க்கப்பட்டு மணல்சேர்த்து அரிசி உப்பும் வரை வறுக்கப்படுகிறது.
நெல்

நீரில் ஊறவைத்தல் (30 சதவீதம் எம்.சி)

புழுங்கல் அரிசி (14 சதவீதம் எம்.சி)

அரைவை அரைத்தல் (15 சதம் எம்.சி)

வறுத்தல் (வெறும் சட்டியில்)
(110 டிகிரி செண்டிகிரேட்)

உப்பு சேர்த்தல்
(சோடியம் குளோரைடு 10 கி ,
100 மிலி தண்ணீர் 1 கிலோ அரிசி)

வறுத்தல் - மணலுடன் (250 டிகிரி செண்டிகிரேட்)

பொரி (0.5 சதவீதம் எம்.சி)
பஃடு அரிசி

இது மிகவும் பிரபலமான சிற்றண்டியாகும். புழுங்கல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பழங்காலத்தில் அரிசியானது மெதுவாக பீங்கான் பாத்திரத்தில் மணலில்லாமல் சூடேற்றி ஈரப்பதத்தை குறைக்கவேண்டும். பின்பு இதனுடன் உப்பு கரைசல் சேர்த்து மறுபடியும் பீங்கான் பாத்திரத்தில் மணல் சேர்த்து சிறிதாக பலத்த தீயில் சில மணிதுளிகள் சூடுபடுத்தும்போது அரிசி பெரிதாகின்றது. அரிசியானது 8 மடங்கு அளவு அரிசியைப்போல உருவத்தில் பெரிதாகின்றது. இவை மிகவும் பெரிதான வெற்றிடம் மற்றும் மொறு மொறுப்பு தன்மையும் கொண்டது.

பார்சல் அரிசி

சூரிய ஒளியில் காய வைத்த நெல்லானது மண் ஜாடிகளில் நிரப்பி சுடு தண்ணீர் கொண்டு ஈரப்படுத்தப்படுகிறது. 2-3 நிமிடங்களுக்கு பிறகு நீர் வெளியேற்றப்பட்டு தரைகீழாக 8 முதல் 10 மணி நேரம் நிறுத்தப்படும். பிறகு நெல்லானது சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்து சுடு மணலில் வறுக்கப்படும்.
அரிசியானது உப்புத் தண்ணீரில் ஊறவைத்து அதன் ஈரப்பதத்தை 20 சதவீதம் உயர்த்தப்படும். ஈரப்படுத்தப்பட்ட அரிசியானது நன்கு சூடான பாத்திரத்தில் 250-275 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் 30 முதல் 40 மணி துளிகள் சூடுபடுத்தப்படும் அரிசி உடனடியாக உப்புகிறது
பழங்காலந்தொட்டு மதசார்ந்த பணடிகை மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. 12-14 சதவீதம் நீர் நெல்லில் சேர்த்து இரும்பு சட்டியில் மணல் சூடு செய்து 150-200 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் தயாரிக்ப்பட்டு மணலிலிருந்து பிரிக்கப்படும்.

அவல்

நெல்லிலிருந்து அதிக அளவு அடுத்து தயாரிக்கும் பொருள் அவல் ஆகும். ஊறவைத்த நெல்லை சூடு செய்து உடனடியாக தட்டையாக்கப்படும் இயந்திரத்தின் உதவியுடன் தட்டையாக்கப்படும்.
நெல்
ஊறவைத்தல் (12-18 மணிநேரம்)

வறுத்தல்
(200-250 டிகிரி செல்சியல்
வெப்பநிலையில் 20 முதல் 30 நொடி)

5 நிமிடம் உலர வைத்தல்

தட்டையாக்குதல்

அவல்

1 comments:

தாங்கள் வருகைக்கு ,கருத்துக்கு நன்றி

இந்த மாவட்டங்களில் தயாரிக்க படுகின்றது

சிதம்பரம் கலா கடலை மண்டி .தெற்கு வீதி மற்றும்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, சாமல்பட்டி, காவேரிப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் பொரி தயாரிக்கும் கூடங்கள் உள்ளன

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் ராமாபுரம் புதூர், பொய்யேரிக்கரை, முருகன் கோவில் பகுதிகளில் பொரி தயாரிக்கும் கூடங்கள் உள்ளன.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites