இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, November 11, 2012

லவ் பேர்ட்ஸ்

வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும் சின்ன கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் வரை வளர்க்கலாம். கீச் கீச் சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி குடியேறும். இந்த பறவைகளை வளர்ப்பது தனி கலை. அவற்றை குழந்தைகள் போல பராமரித்தால் நம் கைகளில் வந்து விளையாடும்.

பறவைக் கூண்டுகள்Love Birds

இந்த பறவைக் கூட்டினை வீட்டின் மூலையில் கட்டி தொங்க விட வேண்டும். கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விடுவது அவை முட்டை வைத்து அடை காக்க வசதியாக இருக்கும். அவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம். அப்புறம் தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம். தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பனதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து வெளியேற முடியாமல் தவிக்கும்.

எப்பவாவது ஒரு முறை தண்ணில வைட்டமின் B போட்டுவிடுவோம்.

பறவைகளின் உணவு

லவ் பேர்ட்ஸ் பறவைகள் திணை விரும்பி சாப்பிடும். அப்புறம் சீமைப்பொன்னாங்கன்னி கீரை, பசளிக்கீரை தரலாம். முட்டைக்கோஸ், விதை நீக்கிய ஆப்பிள், புருக்கோலி, போன்றவைகளை உணவாக தரலாம்.

கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

எறும்புகள் ஜாக்கிரதை

கூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் வைக்கவேண்டும். அதில் வைட்டமின் பி மாத்திரை கலந்து வைத்தால் பறவைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.

பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட்டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது.

லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். எனவே எளிதில் குடும்பம் பெருகுவதோடு நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.


சென்னை : கோடை விடுமுறை துவங்கவுள்ள நிலையில், ஞாயிறு மட்டும் கூடும், பறவைகள் விற்பனைக்கு பெயர் பெற்ற மாஸ்கான் சாவடி சந்தை, களைகட்டத் துவங்கியுள்ளது. பிராட்வே அம்மன் கோவில் தெருவில், ஞாயிறு மட்டுமே கூடும் மாஸ்கான் சாவடி சந்தை பிரபலமானது. இங்கு அனைத்து வகையான வளர்ப்பு பறவைகளும் விற்கப்படுகின்றன.
காதல் பறவை வகைகள், கிளி, புறா, சேவல், வான்கோழி, கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் மற்றும் முயல், வெள்ளை எலி உள்ளிட்டவையும் விற்கப்படுகின்றன. வியாபாரிகளை விட, பறவை உள்ளிட்டவற்றை வளர்ப்பவர்களே நேரில் கொண்டு வந்து விற்பதால், விலை குறைவாக கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

புறா பந்தயம்
சென்னையில், ஏப்ரல், மே மாதங்களில் புறா பந்தயம் களை கட்டும். அரை சவரன், ஒரு சவரன் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வைத்து, புறா பந்தயம் நடத்தப்படும்.
அதற்காக புறாக்களை வாங்குபவர்கள் மாஸ்கான் சாவடி சந்தையை மொய்க்கத் துவங்கியுள்ளனர். தரம் மற்றும் வகை பார்த்து, புறாக்களை வாங்குகின்றனர். இங்கு பலரது விருப்பத் தேர்வாக, கர்ணபுறாக்களே உள்ளன. இவை, தொடர்ந்து ஐந்து மணி நேரம் பறக்கும் சக்தி உள்ளவை. மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் திறன் உள்ள புறாக்களும் உள்ளதாக, புறா வளர்ப்பில் உள்ள கவுதமன் தெரிவித்தார்.

என்ன விலை?
காதல் பறவை வகைகள் ஜோடி 300 முதல், 1,200 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் உள்ளன. சிட்டுக்குருவி போல் உள்ள ஸ்பிரிக்கர் பறவைகள், ஜோடி 200 ரூபாய்க்கும், ஆம்ஸ்டெர் எனப்படும் குட்டி வளர்ப்பு எலி ஜோடி 1,200 ரூபாய்க்கும், மைஸ் எனப்படும் கறுப்பு வளர்ப்பு எலி ஜோடி 600 ரூபாய்க்கும், வெள்ளை எலி ஜோடி 400 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
அழகுக்காக வளர்க்கப்படும், "÷ஷா புறா' ஒன்று, 1,200 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. முயல் வகைகளுக்கு, 800 ரூபாய் முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
 

1 comments:

Love bird's price tell me

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites