வீட்டுத் தோட்டங்களில் பூக்களை வளர்பது அழகோடு மன அமைதியையும் அதிகரிக்கும், அதோடு வருமானத்தையும் அதிகரித்து தரும். தாவரங்களைப் பற்றிய ஓரளவு அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டாலே மலர்ச்செடிகளை வளர்த்து பராமரிக்கலாம். இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. வெயிலின் உக்கிரத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா...
இதோ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவரான பேராசிரியை சாந்தி கூறுகையில்,வெயிலின் கோரத்தில் இருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் வெயிலின் தாக்கம் குறையும். அத்துடன் சத்தான காய்கறிகள், பழங்கள் வளர்த்தால் அதனை பராமரிக்கும் போது பெண்களின் மன அழுத்தம் குறையும்.
மாடியின் அடர்த்திக்கு ஏற்ப செடிகள் வளர்க்கும் போது வெயிலின் கோரத்திலிருந்து 4 முதல் 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் குறையும். மேலும் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். காய்கறி செடிகளுடன் அருகம்புல், அகஸ்டின் புல், ஜப்பான் புல், கொரியன் புல் உள்ளிட்ட பலவகை புற்களை வளர்ப்பதால் வெயி லின் தாக்கம் படிப்படியாக குறையும்.
செடிகளுடன் கொடிகள் வளர்த்தால் அதுவே சிறந்த நிழற்கூரையாக அமைகிறது. அத்துடன் தாவரங்கள் நீரை உறிஞ்சுவதால் மாடியின் மேல்தளம் குளிர்ந்து வீட்டின் உட்புறம் குளுமை அடைகிறது. இதனால் கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொசுத் தொல்லையும் இருக்காது.
செடிவளர்ப்பு
வீட்டில் இடமிருந்தால் செம்மண், மணல் சிறிதளவு சேர்த்து தொழு உரம், தென்னை நார்க்கழிவு மண், மண்புழு உரம் ஒரே அளவு சேர்த்து செடி வைத்தால் 45 நாட்களில் வேர் பிடித்துவிடும். வெயில் அதிகம் படாத வகையில் நிழல் வலை அமைத்தும் செடிகள் வளர்க்கலாம். குறிப்பிட்ட சில தினங்களுக்கு ஒருமுறை கிளைகளை வெட்டிவிட வேண்டும்.
உரமிடுதல்
25 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும். செடிகளில் தண்ணீர் ஈரப்பதம் எப்போதும் இருக்கவேண்டும்.
ரோஸ் செடிகளை வெயிலில் வைக்க வேண்டும். ஆர்கிட், அந்தூரியம் ஆகிய செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலிஹவுசில் தான் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் ஊற்றுதல்
கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாகஇருக்கும். நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் காலை, மாலை வேளைகளில் முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். பகல் நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.
பூந்தொட்டிகளில் பூக்கள்
பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.
கார்னேஷன், செவ்வந்தி, ரோஜா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, மேற்கிந்திய செர்ரி, லிட்சி, குரோட்டன்ஸ், ரம்பூட்டான், கறிப்பலா போன்றவை இம்முறையில் வளரக் கூடியவை. இதற்கான ஆலோசனைகளை வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறையின் தோட்ட கலைத்துறையில் பெறலாம்.
அப்புறம் என்னங்க வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீங்ளும் மாடித் தோட்டத்தை ட்ரை பண்ணுங்க...

0 comments:
Post a Comment