
25,000க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கியவராக என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கும். என் மூலம் தொழில் முனைவோர் ஆனவர்களை தொடர்ந்து இந்தப் பகுதியில் உங்களுக்காக அறிமுகப்படுத்தப்போகிறேன். இது உங்களுக்கு ஊக்கம் தர உதவும்!... முதலில், ஃபேஷன் ஜுவல்லரி டிஸைனராக முன்னேறி இருக்கும் பவித்ரா. இதோ அவரே தன்னைப் பற்றி சொல்கிறார்..
‘‘ஃப்ரீயா வீட்ல இருந்து நாமளே ஏதாவது தொழில் செய்யணும்னுதான் நான் செய்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். எதையும் செய்ய முடியும்கற நம்பிக்கை இருந்தது. ஆனா என்ன செய்யப்போறோம் அப்படீங்கற தெளிவு இல்லை. அப்பதான் டாக்டர் நடராஜன் ஒரு ஐடியா கொடுத்தார். பர்சனல் யூஸுக்காக ஆர்டிஃபிஷியல் ஜுவல்லரி நான் செய்றதுண்டு. அதை அவர்கிட்டே சொன்னபோது ‘அதையே ஏன் பிஸினஸா செய்யக்கூடாது?’ன்னு சொன்னார். அதுதான் தொடக்கம்... சின்ன இன்வெஸ்மெண்ட்ல வீட்லேர்ந்தே ஜுவல்லரி செஞ்சு விற்க ஆரம்பிச்சேன்.
கோரல், பேர்ல், ஜேட், ஓனிக்ஸ், எமரால்ட், ரூபி இன்னும் நிறைய விதவிதமான கற்களை யு.எஸ்.லேர்ந்து மொத்தமா வரவழைச்சு வெச்சிருக்கேன். பொதுவா யு.எஸ்.லேர்ந்து இந்த மாதிரி கற்களை வாங்கிட்டு வரவங்க அதை ஒரு கயிறா அப்பிடியே கோர்த்து மாட்டிக்கறாங்க. ஏன் இதை டிஸைனா பலவிதமான கற்களோட மேட்ச் செஞ்சு அழகான, நீட்டான ஜுவல் செய்யக் கூடாதுன்னு தோணிச்சு. களத்துல இறங்கிட்டேன். ஜெய்ப்பூர்ல பீட்ஸ்,

“பெண்களுக்கு பொதுவா நிறைய டிஸ்ப்ளே வேணும். நிறைய நகைகளை கண் முன்னே நிறையப் பாத்தாதான் அதிலிருந்து ஒண்ணை வாங்குவாங்க... என்கிட்ட பத்து அல்லது பதினைஞ்சு செட் நகைகள்தான் இருக்கும். அதில நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்திருப்பேன், ராத்திரி பகல்னு டைம் பாக்காம வேலை பண்ணுவேன். இந்த பிரச்னையை சால்வ் பண்றதுக்காகவே சாம்பிள்ஸ் காட்ட ஒரு ‘கேட்டலாக்’ ரெடி பண்ணேன். இந்த என்னோட பிஸினஸ் இரண்டரை வருஷமா நல்லபடியா போயிட்டிருக்கு. நிறைய ஆர்டர்கள் கிடைக்குது. நல்ல லாபமும் கிடைக்குது’’ என்கிறார் மகிழ்ச்சியுடன்!...
பவித்ரா தரும் சக்ஸஸ் டிப்ஸ்!
வேலையை பணமா பார்க்காம முதல்ல ஆத்மார்த்தமா அதை அணுகணும். வீட்ல இருந்தபடியே நாம என்ன செஞ்சு சாதிச்சிட முடியும்கற அவநம்பிக்கையை முதல்ல விட்டுடணும். நம்மளால முடியுங்கற எண்ணம் இருந்தா சாதிக்கறதுக்குத் தடையே இல்லை.
0 comments:
Post a Comment