நான் வெல்டிங் தொழில் செய்கிறேன். இந்த தொழிலை சிறப்பாக நடத்த என்ன வழி என்று சொல்லுங்கள்.
சிறப்பாக தொழில் நடத்த இரண்டு வழி உண்டு. ஒன்று, குறைந்த விலையில் உங்கள் சேவைகளை அளிப்பது; இரண்டாவது, வித்தியாசப்படுத்துவது. இதில் முதல் விஷயத்திற்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. ஆனால், இரண்டாவது விஷயத்தைப் பொறுத்தவரை சிறு விளக்கம் தேவை. வித்தியாசம் என்பது ஏதேனும் ஒரு பரிமாணத்தில் புது வகையான சேவைகளை அளிப்பதிலேயோ, துரித நேரத்தில் வேலைகளை முடித்துக் கொடுப்பதிலேயோ, மிக உயரிய தரத்தில் பொருட்கள் வழங்குவதிலேயோ இருக்கலாம்.
எத்தகைய உத்தியை நீங்கள் பின்பற்றுவதாக இருந்தாலும், உங்களைப் போன்ற முதிர்ச்சியான தொழில் அனுபவம் கொண்டவர்கள் மார்க்கெட்டிங்கில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் மிகச் சிறந்த விளம்பரமும், விற்பனையாளரும் உங்களின் சேவையில் திருப்தி அடைந்திருக்கும் தற்போதைய வாடிக்கையாளர்களே.
ஆர்டர் முடித்து காசு வாங்கின கையுடன் அவர்கள் தொடர்பு முடிந்துவிட்டது என்று இருந்து விடாதீர்கள். புது வருடப் பிறப்பு, பண்டிகை தினங்கள் போன்ற நாட்களில் வாழ்த்து தெரிவிப்பது தொடர்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு எளிய வழியாகும். இத்தகைய சின்னச் சின்ன செயல்கள் வருங்காலத்தில் உங்கள் பிஸினஸ் வளர நல்ல வழி வகுக்கும்.
0 comments:
Post a Comment