இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 5, 2012

உலர் மலர்கள் உற்பத்தி

  • இந்திய மற்றும் சர்வேதச சந்தையில் உலர் மலர்களுக்கான கிராக்கி மிகஅதிகம்.இந்தியாவிலிருந்து உலர் மலர்கள் அமெரிக்கா, ஐப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .
  • பல விதமான செடிகள் இந்தியாவில் இருப்பதால், உலர் மலர்கள்  ஏற்றுமதியில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது.
  • உலர் மலர்கள் என்றால் மலர்கள் மட்டுமல்லாது உலர்ந்த கிளைகள், விதைகள் மற்றும் பட்டைகளையும் குறிக்கும்
  • உலர் மலர்கள் மற்றும் செடிகளை ஏற்றுமதி ெசய்வதன் மூலம் இந்தியாவில் ஒருவருடத்திற்கு ரூபாய் 100 கோடி அண்ணிய செலாவணி கிடைக்கிறது. சுமார் 500 வகையான உலர் மலர்கள் இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • இவை கைவினைக் காகிதம், பெட்டிகள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள், சணல் பை, அலங்கார புகைப்படம் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது. உலர் மலர்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதனால அதன் அழகு கூடுகிறது.
                        

உலர் மலர்களின் உற்பத்தி தொழில் நுட்பம்
  • உலர்த்துதல்
  • வர்ணம் ஏற்றுதல்
உலர்த்துதல்
அறுவடைக்கான உகந்த நேரம்
உலர் மலர்கள் உற்பத்திக்கு,  மலர்களானது காலை வேளையில் பனித்துளிகள்  காய்ந்த பின்பு செடியிலிருந்து வெட்டப்படுகிறது. மலர்களுடன் கூடிய வெட்டப்பட்ட கிளைகள் சிறு கட்டுகளாக    கட்டப்பட்டு உடனடியாக சூரிய ஒளியிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது.
சூரிய ஒளியில் உலர்த்துதல்
  • இது மிக எளிய மற்றும் செலவில்லாத உலர்த்தும் முறையாகும். ஆனால் மழைக்காலத்தில் இம்முறை சாத்தியப்படாது.
  • கட்டப்பட்ட மலர் கட்டுகள் கயிறு அல்லது மூங்கிலின் உதவியால் தலைகீழாக தொங்கவிடப்படுகிறது.
  • இம்முறைக்கு இரசாயன பொருட்கள் தேவையில்லை.
  • நல்ல காற்றோட்டம் மிகவும் அவசியம்.
  • மேலும் இம்முறையில் பூஞ்சானங்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
குளிர் உலர்த்துதல்
  • மேற்கூறிய முறையை விட இம்முறை மிகவும் மேம்படுத்தப்பட்டது.
  • இம்முறைக்கு மிக அதிக விலையுள்ள சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது, ஆனால், இம்முறையில் உலர் மலர்களின் தரம் அதிகம் என்பதால், மிக அதிக விலைக்கு விலை போகிறது.
அழுத்த முறை
  • இம்முறையில் உறிஞ்சும் காகிதம் (அல்லது) சாதாரண காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
  • இம்முறையில் மலர்கள் தட்டையாக்கப்படுவதால், அதிக சேதத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிளிசரின் முறை
  • மலர்களின் ஈரம் காய்ந்த பின்பு கிளிசரின் தெளிக்கப்படுகிறது.
  • மிகத் தரம் வாய்ந்த மலர்கள் இம்முறையில் தயாரிக்கப்படுகிறது.
பாலிசெட் பாலிமர்
  • பாலிசெட் பாலிமரை தெளிப்பதன் மூலம் மலர்கள் உலர்த்தப்படுகிறது. மேலும் இம்முறைக்கு மிகக் குறைந்த நேரம் தேவைப்படும்.
  • இந்த முறையில் மலர்களின் நிறம் மேம்படுத்தப்படுகிறது.
சிலிக்கா உலர்த்தி
  • சிலிக்கா மற்றும் சிலிக்கா பசையை உபேயாகப்படுத்துவதால் மலர்களின் தரம் மேம்படுத்தப்படுவதுடன். மலர்கள் உதிர்வதும் தடுக்கப்படுகிறது.
  • மிக மெல்லிய மலர் மற்றும் செடிகள் உலர்த்துவதற்கு இம்முறை உகந்ததாகும்
வர்ணம் ஏற்றுதல்

  • புரோசியான் வகை நிறம் உலர் மலர்களுக்கு மிகவும் உகந்தாகும்.
  • முதலில் 4 கி.கிராம் அளவு கலர் பொடியை 20 லி. நீருடன் கலக்க வேண்டும்.
  • பின்பு இக்கரைசலை 800 லிட்டர் சுடு நீருடன் சேர்த்து அதனுடன் 2 லி அசிடிக் அமிலத்தை சேர்த்து கலக்க வேண்டும்.
  • மிகவும் மிருதுவான மலர்களின் நிறத்தை கூட்டுவதற்கு மக்னீசியம் குளோரைடு சேர்க்கப்படுகிறது
  • உலர் மலர்கள் இந்த நிறத்தை உறிஞ்சும் வரை அவற்றை இக்கரைசலில் ஊறவைக்க வேண்டும்
வணிகரீதியான உலர் மலர் உற்பத்தி

மலர்கள் மற்றும் தாவரத்தின் மற்ற பாகங்கள்
  • கோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் இப்பட்டியலைச் சார்ந்ததாகும், இதனுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது.
  • கடந்த 20 வருடங்களாக இந்தியா இவ்வகையான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
  • பாட்பொரி
    • இவ்வகையான மணமூட்டப்பட்ட மலர்கள் பிளாஸ்டிக் பைகளில வைக்கப்படுகிறது.
    • பொதுவாக இவை அலமாரி, டிராயர் மற்றும் குளியலறைகளில் வைக்கப்படும்.
    • சுமார் 300க்கும் மேலான தாவர வகைகள் இம்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
    • இந்தியாவில், பேச்சிலர் பட்டன், கோழிக் கொண்டை, மல்லிகைப் பூ, ரோஜா இதழ்கள், காகிதப் பூ, வேப்ப மர  இலைகள் மற்றும் பழக் கொட்டைகள் ஆகியவை பாட்பொரி செய்யப்பயன்படுகிறது.
    • இங்கிலாந்து, இவ்வகை தயாரிப்புக்கு, நமது மிக முக்கிய வாடிக்கையாளர்.

  • உலர் மலர் தொட்டி
    • உலர்ந்த தண்டு மற்றும் சிறு கிளைகள் பயன்படுத்தப்படுகிறது.
    • இதற்க்கு கிராக்கி மிகவும் அதிகமில்லை என்றாலும் அதிக விலைக்குப் போகக்கூடியது, மேலும் உயர்தர வர்க்கத்தினரால் மிக அதிகமாக விரும்பப்படக்கூடியது.
    • பொதுவாக உலர்ந்த பருத்தியின் கூடு, பைன் மலர்கள், காய்ந்த மிளகாய், மற்றும் சுரைக்காய், புல், மர மல்லிகை, அஸ்பராகஸ் இலைகள், பெரணி இலைகளை, மரப்பட்டைகள் மற்றும் சிறு குச்சிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
    • உலர்மலர் கைவினைப் பொருட்கள்
      • இவ்வகை பொருட்கள், உலர் மலர் வர்த்தகத்தில் தற்சமயம் மிக அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
      • வாழ்த்து அட்டைகள், கவர்கள், மெழுகு தாங்கி, கண்ணாடி கிண்ணங்கள் ஆகியவை பல வகை நிறமுள்ள உலர் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
    • Thnxs: தகவல்
      முனைவர் ஸி. ஸ்வர்ணபிரியா மற்றும் முனைவர்  வி. ஜெயேசேகர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் (கே.வி.கே), பேச்சிப்பாறை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites