சுய உதவி குழுக்கள் என்றால் என்ன?
- சுய உதவி குழு என்பது கிராம ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு, உறுப்பினர்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் குழு ஆகும்
- இது பதிவு செய்யப்படலாம் பதிவு செய்யப்படாமலும் இருக்கலாம்
- சிக்கனம் கடன் மற்றும் சுய உதவி போன்ற கொள்கைகளை வழியுறுத்துவது
- சுய உதவி குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சேமிக்கவும் மற்றும் பொது நிதியில் பங்கு கொள்ளவும் சம்மதிக்க வேண்டும்
- உறுப்பினர்கள் பொது நிதி மற்றும் இதுபோன்ற இதர நிதிகளையும் (வங்கிகடன்) குழுவின் சார்பாக பெற்று குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப தேவைப்படும் உறுப்பினர்களுக்கு கடன் அளிப்பது
சுய உதவி குழு உறுப்பினர்கள் சுய விருப்பத்தோடு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சேமிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் இந்த சேமிப்பு பணமானது அதன் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் சுழல் முறையில் அல்லது தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் 1991 ம் ஆண்டு நபார்டு வங்கியால் புதிய முயற்சியாக சுய உதவி குழு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
நபார்டு 20 அல்லது அதற்கு குறைவான ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் தாமாக முன் வந்து பொது பிரச்சனைகளுக்காக சேர்ப்பவர்களின் அமைப்பு என வரையறுக்கிறது. பொதுவாக சுய உதவி குழு என்பது 10 முதல் 20 நபர்கள் கொண்ட பதிவு செய்யப்படாத மற்றும் மேம்பாட்டு குழு ஆகும். சில குறிப்பிட்ட பகுதிகளான பின்தங்கிய மற்றும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் மலைகள் மற்றும் பாலைவன பகுதிகளில் உறுப்பினர் எண்ணிக்கை 5 - 20 வரையாக கூட இருக்கலாம். இந்த கடினமான பகுதிகளை மாநில அளவிலான குழுமம் கண்டறியும் அந்த பகுதிகளில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கைக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குழுவில் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு உறுப்பினர் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
சுய உதவி குழுக்களை பற்றிய பொதுவான கருத்து உங்களால் செய்ய முடியும் ஆனால் நீ தனித்து எதுவும் செய்ய முடியாது. சுய உதவி குழு முறையான அரசு சாரா அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. சுய உதவி குழுக்கள் உள்ளூர் அளவில் முக்கியமான அமைப்பாக கருதப்படுகிறது.

ஒரு அரசு சாரா அமைப்பு மைரடா (MYRADA) ஆனது 1984 மற்றும் 1985 ம் ஆண்டுகளின் இடையில் கர்நாடகாவில் கிராம வளர்ச்சி சார்ந்த திட்டங்களை மேற்கொண்டது. ஏராளமான கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதின் மூலம் அவற்றை மேம்படுத்தியது. கர்நாடகாவானது நிதி நிறுவனங்களை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டபொழுது அது மாநிலங்களில் உள்ள சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்தது. இந்த சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1991 - 92 ம் ஆண்டுகளில் தேசிய வேளாண் மற்றும் கிராம வளர்ச்சி வங்கி (நபார்டு) சுய உதவி குழு மற்றும் வங்கிகளின் இணைப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து ஏராளமான கூட்டுறவு சங்கங்கள் சிறிய குழுக்களாக பிரிந்தன. இதுநான் சுய உதவி குழுக்களின் ஆரம்பம். இது இந்த கால கட்டங்களில் கடன் மேலாண்மை குழுவாக கண்டறியப்பட்டது. இது கடன்களை மேலாண்மையை நோக்கி செயல்பட்டது.
கூடிய விரைவில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களும் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் கருத்து உருவானது. இதை தொடர்ந்து ஒரு முறையான செயல்பாடுகளான தொடர்ச்சியான கூட்டங்கள் ஆவணங்கள் மற்றும் ஏடுகள் பராமரிப்பு அனைவரும் இணைந்து முடிவுகளை மேற்கொள்வது ஆகியவை உருவானது. நபார்டினால் 1996 ம் ஆண்டு வங்கிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் இணைப்பு திட்டத்தை பற்றிய ஒரு நம்பிக்கை அளிக்கும் ஆய்வு (பூசாசண்டி மற்றும் சாய்) மூலம் சராசரியான கடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இத்திட்டம் வேகமாக வளர்ந்தது. இது மிக வேகமாக நாடு முழுவதும் பரவியது 2002 ம் ஆண்டு இது உலகிலேயே மிகப்பெரிய சிறு நிதி திட்டமாக அமைந்தது. இதன் முன் சுய உதவி குழுக்களின் வரலாறு அரசு சாரா அமைப்புகளின் முயற்சியால் 1980 ம் ஆண்டுகளில் நடுவில் தொடங்கியது. 1980 களின் இறுதியில் நபார்டின் முயற்சியால் மேம்பட்டது. பின்பு 1991 - 92 ம் ஆண்டுகளில் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கிகள் இணைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் முதல் முதலில் கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் வைஷ்யா வங்கியில் சுய உதவி குழுக்களுக்கு முதல் கடன் வழங்கப்பட்டது.

சுய உதவி குழுக்கள் வறுமையை ஒழிப்பது மக்கள் மேம்பாடு மற்றும் சமுதாய எழுச்சிக்கான மிக சிறந்த யுக்தியாக உள்ளது. சுய உதவி குழுக்களின் நோக்கம் ஏழை மக்களின் செயல் திறனை அதிகரித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் வருமான உற்பத்திக்கான திட்டங்களை உருவாக்குதல் போன்றவையாகும்.
ஒரு குழுவை அமைப்பதன் மூலம்
- உறுப்பினர்களின் தங்களைப்பற்றிய சிந்தனைகளை மாற்றுதல் மற்றும் அவர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் சக்தியை வழங்குதல்
- சமுதாய அங்கீகரிப்பினை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைய செய்தல்
- ஒற்றுமையை உருவாக்குதல் மற்றும் புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்களை ஊக்கப்படுத்தி செயல்படுத்துவதன் மூலம் உறுப்பினர்களின் வாழ்வில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துதல்
- தொடர்ச்சியான சேமிப்பு / விரைவான கடன்கள் மூலம் உறுப்பினர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
- குழுவை வங்கிகளுடனும் / கடன்களுடனும் இணைக்க ஊக்கப்படுத்துதல்
- அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளிடம் இருந்தும் தகவல் பெறும் திறனை அதிகரித்தல் மற்றும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் / பணிகளை அவைகளிடம் இருந்து பெறுதல்
- சமூக மற்றும் இதர சிக்கல்களிலிருந்து பாதுகாத்தல்
- சுய சார்பை தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலம் அவர்களை வளர்ச்சி பாதையில் முன்னேரச்செய்தல்
சுய உதவி குழுக்களை பராமரித்தல் மற்றும் கண்காணித்தல் பணிகள்
குழுவை அமைத்தல்
குழுக்களை அமைத்தல் பொதுவாக கிராம அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அடிப்படையான தகவல்களை பெறமுடியும். இது அரசு சாரா அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பங்கேற்பு கிராம அணுகு முறை (பி.ஆர்.ஏ) வளங்களின் வரிசை மற்றும் சமுதாய வரைபடம் போன்றவை உபயோகப் படுத்த படுகிறது. டாராலின் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏழை பெண்களை சுய உதவி குழுக்களில் சேர்ப்பதன் மூலம் அவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலிருந்து நீக்க முடியும்.

உறுப்பினர்
- ஒரு சுய உதவி குழுவில் உறுப்பினர் எண்ணிக்கை 10 நபர்களுக்கு குறையாமலும் 20க்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.
- குழு உறுப்பினர்கள் ஒரு இயக்குபவர் மற்றும் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது குழுவை இயக்குவதற்கு ஏதுவாக அமையும்
- உறுப்பினர்கள் ஒரே கிராமத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
- உறுப்பினர்கள் ஒரே இணத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
- ஒரு குழுவில் ஆண் பெண் இரு தரப்பினரும் இடம்பெறலாம்
- ஒரு குழுவில் குறைந்த வருமானம் கொண்ட உறுப்பினர்கள் இடம் பெறுவது சிறந்தது.
- ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட குழுவில் உறுப்பினர் ஆக கூடாது
சுய உதவி குழுவின் உறுப்பினர் தகுதியிலப்பு
- ஒரு உறுப்பினர் தொடர்ந்து 3 முறை சுய உதவி குழுவின் சட்டங்களுக்கு வராமல் இருத்தல்
- குழுவின் கொள்கைகள் மற்றும் குழுவின் நிர்வாகம் மற்றும் குழுவினால் வகுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட சாசன அமைப்பிற்கு எதிராக செயல்படும் உறுப்பினர்.
குழு கூட்டங்கள்
ஒவ்வொரு குழுவும் சேமிப்பு கடன் திரும்ப செலுத்துதல், கடன் பெறுதல் மற்றும் சேமிப்பு மற்றும் திரும்ப செலுத்துதல் போன்ற விஷயங்களை பற்றி விவாதிக்கவும் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாகவும் வாரம் ஒரு முறை குழு கூட்டங்களை நடத்துவது அமையும். குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சரிசமமான முறையில் வளர்ச்சி பெரும் வகையில் அரசு சாரா அமைப்புகளின் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தனி உறுப்பினரோ அல்லது இயக்குபவர்களே அதிகாரம் செலுத்த முடியாது. அப்படி அதிகாரங்களை மேற்கொள்ளுவது ஒரு சிறந்த குழுவின் அடையாளமாக இருக்க முடியாது. சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் வெளிப்படையாததாக அமையுமாறு உள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பணிகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை சுய உதவி குழுவின் உறுப்பினர்கள் பரிவர்த்தனைகள் அல்லது நிதி நிலைமையைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
வார கட்டத்திற்கான நாள் / நேரம் போன்றவற்றை முடிவு செய்து கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு கட்டங்களிலும் சேமிப்பு, பெற்ற நிதியின் சுழற்சி முறை, வங்கிகடன் மற்றும் திரும்ப செலுத்துதல் சமூக திட்டங்கள் போன்றவற்றை பற்றி தவறாமல் கலந்து ஆலோசனைகள் செய்ய வேண்டும். மேலும் கடன் பெறுதல் திரும்ப செலுத்துதல் தவணை கடந்த கடன்கள் மற்றும் ஒட்டு மொத்த நிதி நிலைமை பற்றியும் கூட்டங்களின் இறுதியில் சுத்தமாக படிக்க வேண்டும்.

சேமிப்பு மற்றும் சிக்கனம்
- அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களும் தொடர்ந்து சேமிக்க வேண்டும். சேமிக்கும் தொகை சிறியதாக இருக்கலாம். ஆனால் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
- முதலில் சேமிப்பு பின்பு கடன் என்பது சுய உதவி குழுவின் எயின்மொழியாக உள்ளது.
- சுய உதவி குழு உறுப்பினர்கள் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் சுய பாதுகாப்பினை பெறுகிறார்கள். சேமிப்பு மற்றும் உள்கடன்களை மேற்கொள்வதன் மூலம் நிதி கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கிறார் (நன்மைகள் - இந்த சேமிப்பு வங்கி கடன் பெற உதவுகிறது)
உள் கடன்கள்
- சுய உதவி குழுக்கள் சேமிப்பு தொகையை உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்க பயன்படுத்த வேண்டும்
- இதன் நோக்கம் தொகை வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் கால அளவு போன்றவற்றை குழுக்கள் தங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்
- சுய உதவி குழுக்கள் முறையாக கணக்குகளை பராமரிக்க வேண்டும்
ஆரம்ப வருடங்களில் இந்த கடன் தொகைகள் உறுப்பினர்களின் சிறிய தேவைகள் மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தது. ஆனால் கடந்த வருடங்களில் இது அதிக உற்பத்தி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
குழு ஒதுக்கீட்டு நிதி ஆனது குழுவின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கும் அவசிய தேவைகளுக்கும் அவசியம். இது குழுவின் 2வது அல்லது 3வது வருடங்களுக்கு பிறகு ஏற்படுத்தப்படும். குழு ஒதுக்கீட்டு நிதியானது நடைமுறை செலவுகளை சமாளிக்கவும் உறுப்பினர்களின் அவசரத் தேவைகளுக்காகவும் மற்றும் இதர எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்க ஏதுவாக ஏற்படுத்தப்படுகிறது. இது முழுவதும் தேவைகளைப் பெருத்தது. இது பொதுவாக குழு தன்னுடைய தொடர்ச்சியான சேமிப்பில் ஒரு பகுதியை வங்கி கணக்கில் வைத்திருப்பது ஆகும். இது சுய உதவி குழுக்களின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாகவோ அல்லது திரும்ப பெறும் வைப்பு தொகையாகவோ இருக்கலாம். ஆனால் இந்த தொகையை நேர்மையாக மேற்கண்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
அலுவலக பணியாளர்கள்
குழுவை இயக்குபவர் படித்தவராகவும் தலைமை பண்புகளை கொண்வராகவும் இருப்பது அவசியம். குழுவை வழிநடத்தும் பெண்கள் அந்த கிராமம் முழுமைக்கும் முன் உதாரணமாகவும் பிரதிநிதியை மாற்றக்கூட்டியவாராகவும் இருக்க வேண்டியது அவசியம். இயக்குபவர்களுக்கு பணம் கொடுப்பது குழுவின் விருப்பம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தலைவர்களை மாற்றுவதன் மூலம் இயக்குபவர் அதிகாரம் கொண்வராக உருவாவதை தடுக்க முடியும். மேலும் குழுவின் அமையான செயல்பாடுகளுக்கும் உதவும். இதனால் இயக்குபவர்கள் வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் செய்ய வழியுறுத்தப்படுகிறது. ஒரு குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் படிக்காதவர்களாக இருந்தாலும் இயக்குபவர்கள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். மேலும் முன்பு இருந்த இயக்குபவர் (படிக்க தெரிந்த நபர்) புத்தக எமுத்தராக தொடர்வர். காசோலையில் கையெப்பமிடும் உரிமை மற்றும் பணத்தை கையாளும் உரிமையும் புதிய இயக்குபவரிடம் மட்டுமே இருக்கும். சுய உதவி குழுக்களின் தொடர்ச்சியான மற்றும் ஜனநாயக வளர்ச்சிக்காக வங்கியும் இயக்குபவர் அல்லது பிரதிநிதியை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற உதவி செய்கிறது. வங்கியும் இந்த மாற்றத்தை விரும்புகிறது. புதிய தலைவர் வங்கியின் கணக்கை கையாளும் உரிமையும் பெறுகிறார் இதற்காக சுய உதவி குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

- பெண்களின் குழு கூட்டங்களின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்துவது
- தற்பொழுதைய சமுதாய சூழ்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் குழு பணிகள் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பது
- குழு உறுப்பினர்களின் கல்வியறிவு மற்றும் கணித அறிவுகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல்
- அரசின் நலத்திட்டங்கள் குறிப்பாக ஆரோக்கிய மற்றும் குடும்ப நலத்திட்டங்கள் கல்வி போன்ற திட்டங்களை பற்றிய தகவல்களை உறுப்பினர்களுக்கு தெரிவித்தல்
- சுய உதவி குழு தொடர்பான நிர்வாகம் பொது பண்புகள், சுற்றுப்புற சூழ்நிலை, பெண்கள் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி திட்டங்கள் பற்றிய விவரங்களை சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தல்
- உறுப்பினர்களின் வருமான உற்பத்தி நடவடிக்கைகளை கண்டறிவதற்காக குழுக்களுக்கு உதவுதல் வங்கிகளுடன் இணைந்து கடன் பெறுதல் மற்றும் திரும்ப செலுத்துதல் போன்றவற்றை உறுதிசெய்தல்
- வங்கி நடவடிக்கைகள் விதிமுறைகள் பற்றிய பயிற்சியை உறுப்பினர்களுக்கு வழங்குதல்
- ஒருமித்த கருத்து மற்றும் செயல்பாடுகளுக்காக உறுப்பினர்களை ஊக்கப்படுத்துதல்
- உறுப்பினர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பணிகளை மேற்கொள்ளுதல்
- உறுப்பினர்களின் தொடர்சியான சேமிப்பினை உறுதி செய்தல்
- குறிப்பு ஏடுகள், கணக்கு பதிவேடுகள், கடன் பதிவேடுகள் சொத்து பதிவேடுகள் போன்றவற்றை பராமரித்தல்
- கடன் வழங்குவது தொடர்பான குழு கூட்டங்களின் தீர்மானங்கள் போன்றவற்றை பதிவு செய்தல்
- குழு வங்கி கடன் பெறுவதற்கு உதவி செய்தல் சொத்து உருவாக்கும் மற்றும் திரும்ப செலுத்துவதற்கு ஊக்கம் அளித்தல்
- குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பதை உறுதி செய்தல்
- குழுவின் கூட்டங்களுக்கு வர தவறுபவர்களின் வீடுகளுக்கு சென்று ஊக்கப்படுத்தி தொடர்ந்து குழு கூட்டங்களில் பங்கேற்குமாறு செய்தல்
- அரசு சாரா அமைப்புகள் / திட்ட அமலாக்கு பிரிவுகள் வழங்கும் பயிற்சிகளில் பங்கெடுத்தல்
- ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பங்கேற்பது
- ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் உறுப்பினர்கள் செயல்பட ஊக்கப்படுத்துதல்
- சுய உதவி குழுக்கள் சுய சார்புடன் தொடர்ச்சியாக 2 மற்றும் 3 ஆண்டுகளை தான்டியும் செயல்படுவதை உறுதி செய்தல்
- குழு கூட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்சியாக நடத்துவது
- திட்டங்களின் நோக்கங்களை இயக்குபவர்கள் அடைய உதவுதல்
- குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவர் என்ற முறையில் வங்கி கணக்கை இணைந்து கையாளுவது
- சுய உதவி குழு தொடர்பான நிர்வாகம் பொது பண்புகள், சுற்றுப் புற சூழ்நிலை, பெண்கள் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி திட்டங்கள் பற்றிய விவரங்களை சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துதல்
- பணம் மற்றும் வங்கி தொடர்பான நடவடிக்கைகளை கையாளுதல்
- குழுக்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உதவுதல்
- குழுவிற்கும் / கிராமத்திற்கும் பயனாளிக்கும் வகையில் உள்ளூர் வளங்களை கையாளுதல்
- கடன் தொகை மற்றும் குழுவின் சேமிப்புகளை சிறப்பான உபயோகித்தல் மற்றும் கையாளுதல்
- குழு உறுப்பினர்கள் தங்களின் வணிக திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தங்களின் நடவடிக்கைகளை நிர்வாகிக்கவும் மற்றும் வங்கி கடன் நடைமுறைகளை புரிந்து கொள்ளவும் பயிற்சி (உதவி) களை வழங்குதல்
- குழுவின் முடிவுகளை தெரியப்படுத்துதல்
- பிற இடங்களுக்கு குழுவின் பிரதிநிதியாக பங்கெடுத்தல்
- சுய உதவி குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வது
- சுய உதவி குழு கூட்டங்களில் முழுவதுமாக பங்கெடுத்துக் கொள்வது மேலும் சுதந்திரமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை கூறுதல்
- சுழற்சி முறையில் வங்கிக்கு செல்வது போன்று சுய உதவி குழுக்களின் பொறுப்புக்களில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது
- சுய உதவி குழுக்களின் கடன்களை சரியாக முறையில் திரும்ப செலுத்துவது
- கிராம மற்றும் சமூக நல திட்டங்களில் பங்குகொள்வது
- அனைத்து உறுப்பினர்களுக்கிடையேயும் நம்பிக்கையும் ஒற்றுமையையும் உறுதிபடுத்துவது மேலும் நோக்கங்களை அடைய கொள்கைகளை வரையறுத்துக் கொள்வது
- கேள்விகளையும் சந்தேகங்களையும் வெளிப்படையாக கேட்பது மற்றும் சுய உதவி குழுக்களின் பணிகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிபடுத்துவது
- குறைந்த பட்சம் பிரதிநிதிகள் மற்றும் இயக்குபவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆண்டு தேர்தல் நடப்பதை உறுதி செய்தல்
- பயிற்சி திட்டங்களில் தவறாமல் பங்கெடுப்பது மற்றும் சிறந்த செயல் முறைகளை நடைமுறை படுத்துவதை உறுதி படுத்துதல்
- சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்களின் பிரச்சனைகள், அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் யோசனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்
பெண்களின் குழு அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு 2 வது அல்லது 3வது வருடத்திற்கு பிறகு கூட்டமைப்புகளாக மாற்றி அமைக்கப்படும். குழுக்கள் நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் அவை கூட்டமைப்புகளாக மாற்றியமைக்கப்படும். கூட்டமைப்புகள் சமூக பாலமாக செயல்படுகிறது. மேலும் பலவீனமான குழுக்களை வளுப்படுத்துவது மற்றும் தங்களின் வெற்றிகரமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடுவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது. அதன் குழுக்களில் ஏதேனும் ஒன்று கடன்களை திருப்பி செலுத்தாமல் இருப்பின் அவைகளிடம் இருந்து கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு உதவி புரிகிறது. மேலும் குழுக்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உதவுதல் மற்றும் கடினமான பணிகளுக்கு உதவுதல் மற்றும் குறிக்கோள்களை அடைய உதவுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. மேலும் அரசு சாரா அமைப்புகளின் சில முக்கியமான நீண்டகால பணிகளை மேற்கொள்கிறது. இவைகளின் தொடர்சியான நடவடிக்கைகளுக்காக வங்கிகளும் இவற்றுடன் வளுவான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இருப்பினும் கூட்டமைப்புகளின் ஆரம்ப காலங்களில் சுய உதவி குழுக்களின் கடன் தொகைகள் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பின் மூலமாக வழங்கப்படமாட்டாது. இது சுய உதவி குழுக்களின் சுதந்திரமான செயல்பாடுகளை பாதிக்கும். கூட்டமைப்புகள் சில குறிப்பிட்ட வகையான கடன்களை வழங்கலாம். உ-ம்: வீட்டுகடன்கள், கழிப்பாறைகள் கட்டுவது போன்றவைகள் சுய உதவி குழுக்களின் மூலமாக செயல்படுத்த முடியாது. இத்தகைய பணிகளும் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளின் 4 வது மற்றும் 5 வது வருடங்களில் அவற்றின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் நிலையான தன்மை போன்றவைகளின் அடிப்படையில் வழங்கப்படும். சுய உதவி குழுக்களின் கட்டமைப்புகளின் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள் போன்றவைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
0 comments:
Post a Comment