இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, June 1, 2012

செல்ல பிராணிகளை

ஈரோடு பகுதியில் சமீப காலத்தில் தங்கள் வீடுகளில் கூட்டில் காதல் பறவைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாய்கள் போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


 
பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்க்கும் காலங்கள் மாறிபோய் தற்போது அழகுக்காகவும் நாய் ஷோக்களில் கலந்துகொள்ளவும் வித, விதமாக ரகங்கள் கொண்ட நாய்களை தங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வரத்தொடங்கியுள்ளனர். பெரிய நகர்பகுதிகளில் வசிக்கும் வசதியான மக்கள் மட்டுமே இதுபோன்ற நாய்களும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால் சமீப காலத்தில் வீட்டில் செல்ல‌ப்பிராணிகள் வளர்ப்பதில் ஏழை, பணக்கார‌ர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இதை வளர்க்க தொடங்கி விட்டனர். இதனால் இதன் விலைகளும் அதிகரித்துள்ளது. தற்போது நாய் வகைகளில் டோபர்மோன், கிரேடன், ஜெர்மன்சப்பேர்ட், டால்மேஷன், டேஸ், பொமரேடியன் உள்ளிட்ட நாய் வகைகள் முக்கியமானதாக விளங்குகிறது.

இந்த நாய்குட்டிகள் வாங்கும்போது மூன்றாயிரத்தில் தொடங்கி முப்பதாயிரம் வரை நாய்களின் ரகங்களுக்கு தகுந்தாற்போல் விற்கப்படுகிறது. மேலும் தாங்கள் வாங்கும் குட்டிகள் பிற்காலத்தில் நாய் ஷோவிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அதற்கு குட்டியிலேயே சான்றிதழுடன் வாங்கவேண்டும். இப்படி சான்றிதழுடன் வாங்கினால் அதற்கு கூடுதலாக ஐந்தாயிரம் அதிகமாகிறது.


 
இதேபோல் அன்னப்பறவைகள் போல் இருக்கும் கூஸ் வாத்துகளையும் செல்லப்பறவைகளாக வளர்த்து வருகின்றனர். இந்த வாத்துக்கள் வீட்டை சுற்றிக்கொண்டே இருக்கும் புதிய மனிதர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் நாய் குறைப்பதுபோல் இந்த கூஸ் வாத்துக்கள் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கும். மேலும் வீட்டிடை சுற்றியுள்ள பூச்சிகள், பாம்புகள் போன்றவற்றையும் இந்த கூஸ் வாத்துக்கள் கொத்தி கொன்றுவிடுகிறது.

காதல் பறவைகளுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது. தங்கள் வீடுகளில் கூண்டு அமைத்து அதை செல்ல பறவைகளாக வளர்த்து வருகின்றனர். காதல் பறவைகள் பல்வேறு வ‌ண்ணங்களில் உள்ளது. ஒரே கலரில் உள்ள ஆண், பெண்கள் இணைந்து ஜோடியாக கூண்டுக்குள் கொஞ்சிகிறது. இதற்கு திணை மற்றும் கீரை வகைகள் உணவாக கொடுக்கப்படுகிறது.


 
மேலும் கூண்டுக்குள் வைத்துள்ள மண்சட்டிகளில் முட்டை வைத்து அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றது. இது தொடந்து கீச், கீச் என்று கத்திக்கொண்டே இருப்பதால் இதைகேட்கும்போது ஒருவகையான மன அமைதி ஏற்படுவதாக காதல்பறவைகள் வளர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

நாய், கூஸ் வாத்து மற்றும் காதல் பறவைகள் ஆகியவைகளை வளர்க்கும் தொட்டம்பாளையம் சுரேஷ்குமார் என்பவர் கூறுகை‌யி‌ல், ''நாள்தோறும் இந்த செல்லப்பிள்ளைகளோடு குறைந்தது ஒரு மணிநேரம் செலவிட வேண்டியது வரும். இந்த ஒரு மணி நேரம் நாம் யோக மற்றும் தியானம் போன்றவை செய்வதற்கு சமமாக இருக்கிறது. மனதில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றோடு இருக்கும்போது நமக்கு அனைத்தும் மறந்து நம் மனது முழுவதும் இந்த செல்ல‌ப்பிராணிகளோடு ஒன்றிவிடுகிறது'' என்றார்.

மொத்தத்தில் வீட்டில் செல்ல‌ப்பிராணிகள் வளர்ப்பது பார்‌ப்பதற்கு அழகு ஏற்படுத்துவதுமட்டுமின்றி இதனால் மனசும் அமைதி ஏற்படுவதால் சமீப காலத்தில் இவைகளை வளர்க்க ஆர்வம்காட்டி வருகின்றனர்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites