மாதச் சம்பளம் முப்பதாயிரம் ரூபாய் கிடைத்தாலும் பார்ட் டைமாக ஏதாவது ஒரு தொழில் செய்து இன்னும் சில ஆயிரங்களைச் சம்பாதித்தால்தான் குடும்பத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற முடியும் என்கிற நிலை இப்போது பலருக்கும்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று மணி நேர வேலை, பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் ரூபாய்க்குள் முதலீடு, குறைந்தபட்சம் மூவாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை வருமானம் தருகிற தொழில்களை செய்வதற்கு இன்றைக்குப் பலரும் தயாராகவே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பல நூறு தொழில்களில் எல்லோரும் செய்யும்படியான ஆறு தொழில்களை மட்டும் இங்கே தருகிறோம். நல்ல முறையில் வருமானம் பெற வாசகர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
எப்படிப்பட்ட தொழில்!
நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் தேவையாக இருப்பது துணிகள். தேவை மிகுதியாக இருப்பதால் துணி விற்பனை தொழிலுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.
நேரம்!
அலுவலக வேலையோ, சுய தொழிலோ எதைச் செய்தாலும் நீங்கள் இந்த தொழிலைச் செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 மணி நேரம் செலவழித்தால் போதும். அதற்குமேல் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
முதலீடு!
குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தொடங்கி, உங்கள் முதலீட்டு வசதிக்கேற்ப இத்தொழிலைத் தொடங்கலாம். காலப் போக்கில் தொழில் வளர்ச்சிக்கேற்ப முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம்.
வருமானம்!
எல்லா செலவுகளும் போக 10 முதல் 20 சதவிகித லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.
கவனம்!
தரமான துணிகளை, குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு விற்க வேண்டும். கலர், டிசைன் போன்றவற்றை கஸ்டமர்கள் விரும்புகிற மாதிரி தேர்வு செய்ய வேண்டும். கஸ்டமர்கள் தவணை முறையில் கேட்டால், கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
பாசிட்டிவ்!
அடிப்படைத் தேவை என்பதால் மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். கெட்டுப் போகாத சரக்கு என்பதால் சில மாதங்களுக்கு வைத்துகூட விற்கலாம்.
0 comments:
Post a Comment