இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, June 1, 2012

செல்லப்பிராணிகளுக்கேற்ற சத்தான உணவு

Homemade Pet Food Aid0174வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது அவசியம். இன்றைக்கு சந்தைகளில் கிடைக்கும் உணவுகள் விலை அதிகமானதாக இருக்கிறது. ஆனால் அவை எந்த ஆரோக்கியத்தை அளிக்கின்றன என்று தெரியவில்லை. வீட்டிலேயே நம் கையால் தயாரித்து அளிக்கும் உணவே நாய் போன்ற செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. நாய்களுக்கு ஏற்ற உணவுகளை கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.

சத்தான உணவு

நாய்களுக்கான உணவில் 40 சதவிகிதம் மாமிசம், 30 சதவிகிதம் காய்கறி, 30 சதவிகிதம் மாவுச்சத்து இடம் பெற்றிருக்க வேண்டும். முதலாவதாக நாய்களுக்கு உணவு தயாரித்து அளிக்கும் முன் கால்நடை மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் ஏனெனில் ஒருசில நாய்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடும்.

சமைக்காத மாமிசம்

மாமிசத்தை சமைத்து கொடுப்பதை விட பச்சையாக கொடுப்பது அதிக ஆரோக்கியமானது. மாமிசத்தை சமைத்துக் கொடுப்பதன் மூலம் அதில் உள்ள புரதம், வைட்டமின்கள் குறைந்துவிட வாய்ப்பு உள்ளது.கோடை காலத்தில் பச்சையாக மாமிசம் கொடுப்பது நாய்களின் உடம்பில் நீர்ச்சத்தினை தக்கவைக்கும்.

முட்டை, கோழிக்கறி

வேகவைத்த முட்டை, பன்றிக்கறி, கோழிக்கறி, வான்கோழி, முட்டை ஆகியவைகளை நாமே சமைத்து கொடுக்கலாம். இதில் உள்ள உயர்தர புரதங்கள் செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

எலும்புக்கறி

நாய்கள் எலும்புகளை விரும்பி சாப்பிடும். எனவே கோழிக்கறி கடைகளில் எலும்புகளை வாங்கிவந்து சமைக்காமல் பச்சையாக கொடுக்கலாம் நாய்கள் விரும்பி சாப்பிடும்.

காரட், முட்டைக்கோஸ்

நாய்களுக்கு காய்கறி உணவு அளிக்கும் போது புருக்கோலி, செலரி, காரட், முட்டைக்கோஸ் ஆகியவைகளில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருக்குமாறு சமைத்து கொடுங்கள். இவற்றை நாய்கள் விரும்பி சாப்பிடும்.

ஓட்ஸ் கஞ்சி, பாஸ்தா போன்றவற்றில் உயர்தர ஸ்டார்ச் உள்ளது. இவைகளை வாரம் ஒருமுறை தயாரித்து கொடுக்கலாம்.

நாய்களுக்கு ஆபத்தானவை
ஒரு சில உணவுகளை நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. வெங்காயம், வெள்ளைப்பூண்டு, திராட்சை, செயற்கை இனிப்பு ஊட்டப்பட்ட உணவுகளை கண்டிப்பாக நாய்களுக்கு கொடுக்கக் கூடாது. வீட்டிலேயே சத்தான உணவுகளை தயாரித்து கொடுத்து செல்லப்பிராணிகளை ஆரோக்கியமாக வளருங்கள் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

1 comments:

புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்-www.tvpmuslim.blogspot.com

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites