இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, June 25, 2012

குங்குமச்சிமிழ் செய்வது எப்படி

தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற சுப நாட்கள் மட்டுமல்லாமல் எந்த நாளாக இருந்தாலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவது மனநிறைவைத் தரும். குங்குமம் நெற்றிக்கு அழகு என்றால், அதை அலங்காரமான சிமிழில் வைத்து தருவது கண்ணுக்கு அழகு! அந்தக் குங்குமச்சிமிழையும் ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தால் அது நல்ல பிசினஸுக்கு அழகு. .

என்னென்ன தேவை?

உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்யப்பட்ட மரப்பெட்டிகள் (கார்ப்பென்டரிடம் கேட்டு செய்து வாங்கலாம். மரப்பெட்டி பிடிக்காதவர்கள் திக்கான அட்டையில் நீங்களே வெட்டி சின்ன பாக்ஸ் செய்து கொள்ளலாம்), டெக்ஸர் வொயிட் அல்லது பிரெஞ்ச் சாக் பவுடர் மற்றும் வொயிட் கம், மெட்டாலிக் கலர்கள் (காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ), பெயின்ட் பிரஷ், குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடி, கெமிக்கல் கிளே (எம்சீல்), வார்னிஷ்.

எப்படிச் செய்வது?


  •   மெஹந்தி போடுவதற்கு கோன் செய்வது போல பால் கவர் அல்லது பாலித்தீன் கவரில் கோன் செய்து கொள்ளவும். அதில் டெக்ஸர் வொயிட்டை நிரப்பவும். அல்லது பிரெஞ்ச் சாக் பவுடருடன் பெவிகால் கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கோனில் நிரப்பவும்.
  •  மரப்பெட்டி மேல் கோன் மூலம் டிசைன்கள் வரைந்து மூன்று, நான்கு மணிநேரம் காயவிடவும்.
  •  பெட்டி முழுவதும் மெட்டாலிக் காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ கலர்களை மாற்றி மாற்றி அடித்து 10 நிமிடம் காயவிடவும்.
  •  எம்சீல் பாக்கெட்டில் இருக்கும் இரண்டு நிற எம்சீலை நன்றாகப் பிசைந்து, அதை பாக்ஸின் மேல்புறம் உங்களுக்குப் பிடித்த டிசைனில் ஒட்டி காயவிட்டு கலர் அடிக்கவும்.
  •  பாக்ஸில் பெவிகால் தடவி அதன் மீது குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடிகளைப் பதித்து அழகுபடுத்தவும்.
  •  கடைசியாக வார்னிஷ் அடித்து 12 மணிநேரம் காயவிட்டால் எத்தனை நாள் ஆனாலும் பளபளப்பு குறையாமல் இருக்கும். குங்குமம், விபூதி, சந்தனம் போட்டுவைக்க அட்ராக்டிவான பாக்ஸ் தயார்.
  •  இதையே கொஞ்சம் பெரிய சைஸில் செய்து ஜுவல் பாக்ஸாகவும் பயன்படுத்தலாம்.

��பொதுவாக மீடியம் சைஸ் பாக்ஸ் செய்ய 100 ரூபாய் செலவாகும். ஆனால் இவற்றை 150 ரூபாய்க்கு விற்கலாம். ஹெவி வொர்க் செய்த பாக்ஸ்களை அவற்றின் தரத்துக்கு ஏற்ப விலையை ஏற்றி விற்கலாம். அதிக ரிஸ்க் இல்லாத, ஈஸியாக செய்யக்கூடிய வேலை இது. ஃப்ரெண்ட்ஸ் மூலமாகவும் ஃபேன்ஸி ஸ்டோர்கள் மூலமாகவுமே கஸ்டமர்கள் கிடைத்துவிடுவதால் இதற்கு எப்போதும் மார்க்கெட் உண்டு�� .

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites