இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 1, 2013

எந்த ஊரில் என்ன வாங்கலாம்?- கரூர்

!
என்னதான் வீட்டுக்குள் ஆயிரம் அழகுப் பொருட்கள்
இருந்தாலும் வீட்டுக்கு வருபவர்களின் கண்களில்
முதலில் படுவது திரைச்சீலைதான். திரைச்சீலைகளை
வெரைட்டியாக, தரமாக, குறைந்த விலையில் வாங்க
வேண்டுமெனில் கரூருக்கு ஒருமுறை சென்று வர வேண்டும்.
கரூரிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி
செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்காகத் தயார் செய்யும்
ஸ்கிரீன் துணிகளில் ஒரு பகுதி கரூர் பேருந்து நிலையத்திற்குப்
 பின்புறமுள்ள 80 அடி ரோட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
 இங்கு திரைச்சீலை, டேபிள் கிளாத், ஏப்ரான், கிட்சன் க்ளவுஸ்
ஆகியவைகளும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இத்தொழிலை கடந்த 25 வருடத்திற்கு மேல்  செய்துவரும்
ஸ்ரீ சன் ஸ்டாக்ஸ் கடையின் உரிமையாளர்
 ஆர்.இன்னாசிமுத்துவிடம் பேசினோம்.
''எங்க அப்பா காலத்துல இருந்தே இங்க டெக்ஸ்டைல்ஸ்
ஏற்றுமதி வணிகம் நடந்துட்டு இருக்கு. ஆனா,
1985-லதான் இந்த 80 அடி ரோட்டுல செகண்ட் சேல்ஸ்
 கடைகள் வர ஆரம்பித்தது.  இப்ப சுமார் ஐநூறுக்கும்
மேற்பட்ட கடைகள் இருக்கு.
கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக தமிழ்நாட்டின்
 மையத்திலிருக்கும் திருச்சி மாவட்டத்திற்கு
 சுற்றுலாவிற்கும், பிற வேலைகளுக்கும் செல்பவர்கள்
 கரூரைத்தான் கடந்து செல்ல வேண்டும். எனவே,
எப்போதுமே கரூர் மக்கள் கூட்டம் நிறைந்த சேல்ஸ்
சென்டராக இருக்கிறது.    
 இங்குள்ள டெக்ஸ்டைல்ஸ்களில் பத்து லட்சம் பீஸ்
 ஸ்கிரீன் துணிகள் ஆர்டர்னா ரெண்டு லட்சம்
கூடுதலாகச் சேர்த்து தயாரிப்பாங்க. அதுல அழுக்கு பட்டது,
 நூல் பிரிஞ்சது, சைஸ் கம்மியா இருக்குறது, சாயம்
ஓவரா பட்டதுன்னு மிஸ்டேக் ஆனவற்றை தனியா எடுத்து
வச்சிருவாங்க. அத நாங்க மொத்தமா வெயிட் போட்டு வாங்கிக்கொண்டு வருவோம். ஒரு துளி அழுக்கு இருந்தாலும், ஒரே ஒரு தையல் பிரிஞ்சிருந்தாலும்கூட அது செகண்ட் சேல்ஸ்க்கு வந்துரும். பெரும்பாலும் செகண்ட் சேல்ஸ்ல பொருளோட தரம், டிசைன் துளிகூட குறையவோ, மாறவோ வாய்ப்பு இல்லை.
சில நேரம் பீஸா இல்லாமல் துணி மீட்டராகூட செகண்ட் சேல்ஸ்க்கு வரும். அதை வாங்கி வந்து முதலில் திரைச்சீலைகள் தைப்போம். அதுபோக மீதமுள்ளதில் டேபிள் கிளாத், ஏப்ரான், கர்ட்டன், கர்ச்சீப் என படிப்படியாக தைத்து கடைசியாக உள்ள பிட்டுத் துணிகளில் கால்மிதிகளை தைப்போம்.
 ஏற்றுமதியாளர்களிடம் வாங்கிவரும் துணியில் இஞ்ச் அளவும் வேஸ்ட் செய்வது இல்லை. அதனால்தான் பொருட்களை வெரைட்டியாகவும்
 சீப்பாகவும் கொடுக்க முடிகிறது. 
எக்ஸ்போர்ட் பீஸில் ஒரு திரைச்சீலை 2,000 ரூபாய் விற்பதை செகண்ட் சேல்ஸில் 200 ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். இதனால எல்லா
 தரப்பினரும் தரமான பொருளை எளிதில் வாங்கி உபயோகிக்க வாய்ப்பு இருக்கிறது. இங்க வந்து மொத்தமா வாங்குறவங்களும் நிறைய பேர் உண்டு. கேரளா, ஆந்திரா, சென்னைல இருந்து வந்து மொத்தமா வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு திரைச்சீலை, கர்ச்சீப் பரிசாகத் தர நினைக்குறவங்களும் இங்க நிறையபேர் வந்து வாங்குவாங்க. கர்ச்சீப், மேசை விரிப்பை முன்னரே ஆர்டர்
 பண்ணிட்டா, அவங்க சொல்லுற படம் பிரின்ட், பெயர்கள், டிசைனை எம்பிராய்டரிங்கும் ஸ்பெஷலா போட்டுத் தர்றோம்.
பெரும்பாலும் சென்னை, பெங்களூருல இருந்து இங்கவந்து மொத்தமா வாங்குறவங்க அங்க 50 சதவிகித லாபத்துல வச்சு விக்கிறாங்க'' என்றார்.
இனிமேல் கரூர் பக்கம் செல்பவர்கள் திரைச்சீலைகளையும் டேபிள் கிளாத்துகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!
செய்தி, படங்கள்: ஞா.அண்ணாமலை ராஜா

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites