ஒலிம்பிக் கார்ட்ஸ்.
|
'
''பர்மாவில் பேப்பர் வியாபாரம் செய்து வந்தார் என் அப்பா.
பர்மா அரசாங்கம் அங்குள்ள தொழிலகங்களை அரசுடைமை
ஆக்கியதால், அங்கிருந்து சென்னை வந்துவிட்டார்.
கைவசமிருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை முதலீடாகப்
போட்டு சென்னை
பாரிமுனையில் ஒலிம்பியா பேப்பர் அண்ட்
ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ் என்ற சிறுகடையை ஆரம்பித்தார்.
அப்போது எனக்கு ஆறு வயது. பள்ளிக்கூடம் விட்டதும்
நேராக கடைக்கு வந்துவிடுவேன். அப்போது நாங்கள் கடை
வைத்திருந்த தெருவில் திருமண அழைப்பிதழ் விற்கும்
ஒரு நிறுவனம் இருந்தது. அங்கிருந்து அழைப்பிதழ்களை
வாங்கி எங்கள்
கடையிலும் விற்பனை செய்வோம். அப்படி விற்றுவந்த சமயம்
திடீரென அந்த நிறுவனத்தை மூடினார்கள். இதனால்
திருமண அழைப்பிதழ் வாங்க வந்த பலரும் திரும்பிச்
செல்வதைப் பார்த்த என் அப்பா, அழைப்பிதழ்களை
அச்சடிக்கும் தொழிலில் இறங்கினார். அப்போது
திருமண அழைப்பிதழ் என்றாலே, டியூப்ளக்ஸ்
பேப்பர் எனப்படும் மஞ்சள் மற்றும் ரோஸ் வண்ணங்கள்
கொண்ட பேப்பரில் மட்டுமே தயாரிப்பார்கள்.
நாங்கள் அதை மாற்றி வேறு வண்ண பேப்பர்களையும்,
புதிய டிசைன்களையும் கொண்டு வந்தோம் நான் 1978-ல்
கல்லூரியில் படித்து முடித்ததும் தொழிலில் முழுமையாக
இறங்கினேன். திருமணப் பத்திரிகைகளை தயாரிக்க
சொந்தமாக ஒரு தயாரிப்பு யூனிட் தொடங்கினேன்.
பிறகு அனைத்து விசேஷங்களுக்கும் தேவையான அழைப்பிதழ்களை
அச்சடிக்கத்
தொடங்கினேன். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தந்தது
எங்களுக்கு முக்கிய
திருப்புமுனையாக அமைந்தது.அதேபோல அச்சுத் தொழிலில் ஏற்பட்ட
நவீன தொழில்நுட்ப
மாற்றங்களை உடனுக்குடன் கொண்டு வந்தோம். அடுத்த கட்டமாக
டைரி, காலண்டர்,
நோட்டுகளைத்
தயாரிக்க ஆரம்பித்தோம். 1992-ல் ஒலிம்பிக் கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனமாக உயர்ந்தோம்.வாடிக்கையாளர்களுக்கு
பார்சல் போய்ச் சேர்கிற வரை உடன் இருந்து
கவனித்ததே எங்கள் வெற்றிக்கு காரணம். இத்தொழிலை பொறுத்தவரை, கைராசியும்
முக்கியம். அப்பா காலத்தில் அழைப்பிதழ்கள் வாங்கியவர்கள், இப்போதும்
எங்களைத்
தேடி வந்து பத்திரிகை அச்சிடத் தருகிறார்கள். எங்களுக்கு
இப்போது நான்கு உற்பத்திக் கூடங்கள் இருந்தாலும், எங்களது
ஷோரூம்களின் தேவைகளுக்கு மட்டுமே உற்பத்தி சரியாக
இருக்கிறது.
இதை விரிவுபடுத்தும் வேலைகளைச் செய்து வருகிறோம். இந்த
வருடம்
எனது நிறுவனம் பங்குச் சந்தைக்கு வந்ததுகூட எங்களது
வளர்ச்சியின்
முக்கியமான திருப்புமுனைதான்.''-
நீரை.மகேந்திரன்,
படம். ச.இரா.ஸ்ரீதர்.
|
0 comments:
Post a Comment