இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, September 5, 2013

பூர்விகா மொபைல்ஸ்

மாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ்
ற்கெனவே செய்துகொண்டிருந்த வேலையை விட்டபோது அடுத்து என்ன என்று தெரியாமல்  ஒன்றரை ஆண்டு காலம் போனது. அப்போதுதான் திருமணம் செய்திருந்த நிலையில் அடுத்து ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் நான். ஆனால், இனி செய்தால் சொந்தமாக தொழில் செய்வதென்கிற முடிவில் உறுதியாக இருந்தேன். காரணம், என் குடும்பம் பிஸினஸ் குடும்பம். என் உடம்பில் ஓடுவது பிஸினஸ் ரத்தம்.
 அப்போது என் உறவினர் ஒருவர் பழைய செல்போன்களை வாங்கி விற்று வந்தார். செல்போன் விற்பனையில் இறங்கினால் நல்ல எதிர்காலம் இருக்கும் என அவர்தான் எனக்கு ஐடியா தந்தார். ஆனாலும், செல்போனுக்கு உண்மையிலேயே எதிர்காலம் இருக்கிறதா என்பதை நானே நேரடியாகத் தெரிந்துகொள்ள பல ஊர்களுக்கும் சென்று செல்போன்களுக்கு இருக்கும் டிமாண்டை பார்த்தேன்.
நான் ஏற்கெனவே இன்ஜினீயரிங், எம்.பி.ஏ. படித்திருந்தாலும் செல்போன் தொடர்பாக மூன்று மாத பயிற்சி வகுப்பை கிண்டியில் படித்தது புது அனுபவமாகவே இருந்தது. கடைசியில், செல்போன் விற்பனை பிஸினஸில் இறங்கிவிட்டேன்.
வீட்டில் பிரச்னை காரணமாக வெளியில் கடன் வாங்கித்தான் முதல் ஷோரூம் ஆரம்பித்தேன். ஒரே ஒரு ரேக், ஆறு மொபைல்கள் மட்டுமே விற்பனைக்கு வைத்தேன். முதல் மொபைல் விற்பதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. ஒரு நாளைக்கு ஒரு மொபைல் விற்பனை ஆக ஆறு மாதங்கள் வரை சோர்வில்லாமல் உழைக்க வேண்டியிருந்தது.  
நான் கற்றுக்கொண்ட எல்லா தொழில் நுணுக்கங்களும் என் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டவைதான். என் அப்பா தன் கடை ஊழியர்களை கல்லாவில் உட்கார வைக்கவே மாட்டார். ஆனால், நான் அப்படி இல்லை. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அவர்களின் முதலாளியைப் பார்ப்பதேயில்லை. ஆனாலும், அவர்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கார்ப்பரேட் மனப்பான்மைதான் எனக்கான திருப்புமுனையைத் தந்தது.  


நீரை.மகேந்திரன்,
படம்: ச.இரா.ஸ்ரீதர்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites