இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, November 1, 2011

என் அன்னை

சுமையாக வந்த என்னை
சுகமாக ஏற்ற தாயே
உன்னை உருக்கி என்னை
வடித்த சிற்பி நீயே
உன் பசியை மறந்து
என் பசியை போக்கியவளே
நாம் அம்மா என்று அழைக்கையில்
அடிவயிறு குளிர்ந்தவளே
முதல் அடி  எடுத்து வைக்கையில்
என்னை ஆயிரம் முத்தமிட்டு
அரங்கேற்றம் செய்தவளே
உனக்கு அபிஷேகம் செய்தாலும்
என் அன்னை உனக்கு
நான் செய்யும் நன்றி
போதாதம்மா.....
.....................................................................................................................................................................
 அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்.

பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டு சென்றதேனம்மா?

நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ?
பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை எனக்கு..

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...

என்னால் நடிக்க கூட முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் நிரந்தரமாக......
.............................................................................................................................................................................
 

கருவில் தாங்கி
உருவினில் உயிர் பெற
உழைத்தவள் அம்மா
உயிர் எழுத்தின்
உண்மை பெயர்
அம்மா

பிரியாமல் இருப்பதற்காய்
பிரிவை வரமாய் கேட்கிறேன்
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு.... 
.....................................................................................................................................................................................

பத்து மாதம் சுமந்து
பரணியிலே பெற்றெடுத்து
பாலூட்டி தாலாட்டி...
பக்குவமாய் வளர்த்திடுவாய்...

பிள்ளை உள்ளம் தானறிந்து
ப்ரியமுடன் நடந்திடுவாயம்மா
கொஞ்சும் மழலை மொழியினிலே
இன்பத்தை காண்பாயம்மா.....

பச்சிளம் குழந்தயாய்
மண்ணில் தவழும் போது
பார்த்து ரசித்தவண்ணம்
அள்ளி அணைத்திடுவாயம்மா...

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
நீர் அடித்து நீர் விலகிடுமா?
உன் அன்பு என் நெஞ்சில்
என்றும் விலகிடாகதம்மா....
................................................................................................................................................................

 அன்பை ஊட்டிய அன்னையே - என்
ஆசைகளையும் தீரத்தயம்மா...
இனிய வாழ்வை தந்தாயே- இறைவன்
ஈசன் அவன் அருளாளே.....

உண்மை பேச கற்றுதந்தாய் - என்னை
ஊரறிய வாழ வைத்தாய்
என் உயிர் தாயே - எனக்கு
ஏழ்மையிலும் கல்வி அறிவை ஊட்டினாய்

ஜயமில்லாத வாழ்வு என்னவென்று- அரவணைத்து
அன்புடனே கற்று தந்தாய்
ஒவ்வொரு இரவும் நான் தூங்க
தாலாட்டு நீ படித்தாய்
ஓங்கி அழும் என் குரல் கேட்டு
ஓடி வந்து தூக்கி அணைப்பாய்
ஒளவை பாட்டி கதை சொல்லி
ஆகாரம் ஊட்டி வளர்த்தாய்
அன்னையே உன் அன்புக்கு
ஏங்குகிறேன் இன்று ...
.......................................................................................................................................................................

நினைவில் உன்முகம் மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு!

மீண்டும்
ஒருமுறை மறுமுறை
வாழ்திட வேண்டும் - உன்
மடியில் எனக்கு மரணமும்
வேண்டும்.

கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் - என்
கண்ணீர் துடைத்த கைகளையிழந்தேன்

எத்தனை பிறவிகள் எடுப்பினும்
அத்தனை பிறவியும் தாயாக வந்துவிடு...

அரை தசாப்பதம்
ஆகியும் கூட - நேற்று
வாழ்ந்தாற்போல்
இன்னும் நெஞ்சில் சில நினைவுகள்....

வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு.......

பட்டு மடியில்
தாலாட்டு....

செல்லம் என்ற
சிறு அணைப்பு.....

சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்

மற்றவர் இல்லை - தாயே!
பெற்றவள் உன் தூயன்புக்கு நிகர்.....

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites