இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, September 4, 2013

உலகைச் சுற்றும் பெட்டிகள்- வி.பி.ஹரிஸ், விட்கோ.



''எங்களுக்குப் பூர்வீகம் கேரளா. ஆனால், சென்னையில் தொழில் தொடங்கினால் விற்பனை நன்றாக இருக்கும் என்று நினைத்து, பாரிமுனையில் 1951-ல் தொழிலைத் தொடங்கினோம். இன்று பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா என்று இந்தியா முழுக்க ஷோரூம்கள் வைத்துள்ளோம்.

அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மக்களிடம் இருந்த வரவேற்பைப் பார்த்து பிளாஸ்டிக் பொருட்களுக்கான மொத்த விற்பனையாளராக இருந்தோம். நிறுவனத்தின் வளர்ச்சியும், பெயரும் நிலைபெறத் தொடங்கியது இந்த காலகட்டத்தில்தான். குறிப்பாக, டிராவல் பேக்குகள், பெட்டிகள் போன்றவற்றில் தனி அடையாளம் எங்களுக்குக் கிடைத்தது. மற்ற விற்பனையாளர்கள் வெளியிலிருந்து பெட்டிகளை வாங்கி பெயரை மட்டும் மாற்றி விற்பனை செய்த நேரத்தில் நாங்களே உற்பத்திச் செய்தோம். இதுதான் எங்களுக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது.

ஆனால், தொழில் போட்டிகளையும் வாடிக்கையாளர் தேவைகளையும் அறிந்து செயல்படுவது எங்களுக்குச் சவாலாக இருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை நான் ஏற்றேன்.

ஒரே மாதிரியான வடிவத்தில் பெட்டிகளை தராமல், வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப பல்வேறு வடிவங்களில் தந்தோம். அப்படி நாங்கள் தயாரித்து தந்த 'வீல்வைத்த பெட்டிகள் எங்களுக்குத் தனி அடையாளத்தைத் தந்தது.

எங்களுக்கு அடுத்தகட்ட நெருக்கடியாக அமைந்தது வெளிநாட்டு பிராண்டுகளின் வரவு. அந்த போட்டியைச் சமாளிக்க சில்லறை விற்பனையில் இறங்கினோம். அதற்கான ஷோரூமை பாரிஸில் தொடங்கி, மொத்த விற்பனைக் கடையில் இருந்த அனைத்து சூட்கேஸுகளையும் கொண்டு வந்து காட்சிக்கு வைத்தோம்.
அடுத்த கட்டமாக, அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்ததால் பிளாஸ்டிக் பெட்டிகளின் உற்பத்தியைக் குறைத்து, சில வெளிநாட்டு பிராண்டுகளையும் எங்கள் ஷோரூம்களில் விற்பனை செய்யத் தொடங்கினோம்.
இதனால் எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். என்னதான் பாரம்பரிய நிறுவனமாக இருந்தாலும் சில்லறை விற்பனையில் தரத்திற்கும், வாடிக்கையாளர் சேவைக்கும் ஏற்பவே வளர்ச்சி இருக்கும் என்பதை அறிந்து, அதையே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறோம். அடுத்து, ஷாப்பிங் மால்களிலும் ஷோரூமை தொடங்கிவிடுவோம்.

ஒவ்வொருவரது கையில் இருக்கும் பெட்டிகளும் எங்கள் நிறுவனத்தில் வாங்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்!''
- நீரை.மகேந்திரன்,
படம்: த.ரூபேந்தர்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites