இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 14, 2013

பழைய பிரெட்டில் பளபள கலைப்பொருள்

தேவையோ, இல்லையோ... ஒரு பொருளை வாங்குவதும், அதை உபயோகமே படுத்தாமல் வீணாக்கித் தூக்கி எறிவதும் பல வீடுகளில் அன்றாடம்  நடக்கும் விஷயம். இப்படி குப்பைக்குப் போகிறவற்றில் உணவுப் பொருள்களே அதிகம். இதில் பிரெட்டுக்கு முதலிடம். 'ஃபிரெஷ்ஷாக வேண்டும்’ எனப்  பார்த்துப் பார்த்துத்தான் வாங்குவோம். காலாவதி தேதியை எல்லாம் கவனமாக சரி பார்த்து வாங்கும் அந்த பிரெட் பாக்கெட், காலாவதி ஆவதற்குள்  உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறி. அப்படி வீணாகிற பிரெட்டில் விதம்விதமான கலைப் பொருள்களை உருவாக்கலாம் என்றால் நம்ப  முடிகிறதா?
In the old breadart palapala
‘‘காபி குடிக்கிற கப்லேருந்து, பேனா ஸ்டாண்ட், சுவர்க் கடிகாரம், முகம் பார்க்கிற கண்ணாடி... இப்படி எதையும் இந்த ‘பிரெட் கிராஃப்ட்’ மூலம்  அழகுபடுத்தலாம். பிரெட்டுதான்னு நீங்க சத்தியமே செய்தாலும் யாரும் நம்ப மாட்டாங்க. பார்வைக்கும் அப்படித் தெரியாது...’’ என்கிறார் இந்தக்  கலையில் நிபுணியான கல்யாணி.

‘‘பொதுவா ‘கிளே’ன்னு சொல்லப்படற செயற்கை களிமண்ணை கடைகள்ல வாங்கித்தான் பலவிதமான கலைப்பொருட்களை செய்வோம். வீணாகற  பிரெட் ஸ்லைஸை தூக்கிப் போடறதுக்குப் பதிலா, அழகழகான கலைப்பொருட்களை உருவாக்கலாம். பிசினஸா செய்து, விற்பனையும் செய்யலாம்.  பிரெட் காய்ஞ்சு, வறண்டு போகாம இருந்தா போதும். மத்தபடி அது பூஞ்சைக் காளான் பிடிச்சிருந்தாலும் உபயோகிக்கலாம்’’ என்கிறார் அவர்.

பிரெட் ஸ்லைஸ், சானிடைஸர், பசை, ஃபேப்ரிக் கலர், வார்னீஷ், பிரஷ், குட்டிக்குட்டி பானைகள், தட்டுகள், பிளாஸ்டிக் டப்பா மூடி, டைல்ஸ் என  இந்தக் கலைக்குத் தேவையான பொருள்கள் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. பிரெட்டை சரியான கலவையில் கலந்து, நமக்கு விருப்பமான  உருவங்களை உருவாக்க வேண்டியதுதான். பறவைகள், பூக்கள், கார்ட்டூன் உருவங்கள், பொம்மைகள் என எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.  பிறகு கலர் கொடுத்து, அதன் மேல் வார்னீஷ் அடித்து விட்டால், எத்தனை வருடங்கள் ஆனாலும் பூச்சியரிக்காமல், மெருகு குலையாமல் அப்படியே இருக்குமாம்.

‘‘குழந்தைங்களோட பென்சில் பாக்ஸ், ஸ்நாக்ஸ் கப், வால் ஹேங்கிங்னு எதுல வேணாலும் பண்ணலாம். அன்பளிப்புப் பொருளா கொடுக்க நல்லா  இருக்கும். பிறந்த நாள் பார்ட்டிக்கு, கொலு சீசனுக்கு, சுப காரியங்களுக்கு தாம்பூலம் கொடுக்கும்போது வச்சுக் கொடுக்க... இப்படி மொத்தமா ஆர்டர்  எடுக்கலாம்’’ என்கிறார். அடுத்த முறை பிரெட் வாங்கும்போது, அழகுப் பொருள் தயாரிக்கவும் இரண்டு ஸ்லைஸ் எடுத்து வைப்பீர்கள்தானே?

முதலீடு: 500 ரூபாய்
லாபம்: 100 சதவீதம்
பயிற்சிக்கு: பெரிய சைஸில் ஒன்றை ஒரே நாளில் கற்றுக் கொள்ள 500 ரூபாய் கட்டணம். 2 நாட்களில் 3 மாடல்கள் கற்றுக் கொள்ள ஆயிரம்  ரூபாய். (தேவையான பொருட்களுடன் சேர்த்து)
தொடர்புக்கு: 98407 94596

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites