இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 1, 2013

பிரெட் தயாரிப்பு விற்பனையில் லாபம்


இட்லியும் தோசையும் நமது காலை டிபன் மெனுவாக இருந்த காலம்
 மெள்ள மெள்ள மறைந்து, இப்போது அந்த இடத்தைப் பிடித்து வருகிறது பிரெட்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காய்ச்சல் வந்தால் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவாக இருந்த இந்த பிரெட், சொற்ப ஆண்டுகளிலேயே தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் சாயங்கால நேரங்களில் சட்டென சாப்பிடுவதற்கும் காலை நேரத்திலும், சுற்றுலாச் சென்றிருக்கும்போதும் அவசர கதியில் பிரேக் ஃபாஸ்ட் முடித்துக் கொள்ள சௌகரியமாக இருப்பதால் இந்த பிரெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பே தனிதான்!
Description: http://www.vikatan.com/nanayam/2011/09/ndriyz/images/1wright.gifசந்தை வாய்ப்பு!
நகர்ப்புறங்களில் பேக்கரி வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாலும், அதிகரித்து வரும் கேன்டீன்கள் மற்றும் சின்னச் சின்ன ஸ்நாக்ஸ் கடைகளினாலும் பிரெட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது.  பிரெட்டுக்கான டிமாண்டுக்கு ஏற்ப சப்ளை இல்லையென்பதால் புதிய யூனிட்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அன்றாடம் தயாராகும் பிரெட்டை சரியாக விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு போய்ச் சேர்த்தாலே போதும், மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துவிடலாம்.



  முதலீடு!
இந்தத் தொழிலைத் தொடங்க சுமார் ஆறு லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். முன்பு விறகு அடுப்பைக் கொண்டுதான் பிரெட் தயாரித்து வந்தனர். இப்போது பெரிய அவன்கள்  வந்துவிட்டன. அவனில் செய்யப்படும் பிரெட்டுகள் அந்த அளவுக்கு ருசியாக இருப்பதில்லை என்பதால், பழையபடி விறகு அடுப்புகளை வைத்து பிரெட் தயாரித்து வருகின்றனர் சிலர்.  
மூலப் பொருட்கள்!
மைதா, டால்டா, சர்க்கரை, உப்பு மற்றும் ஈஸ்ட் போன்றவைகள் பிரெட் தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் ஆகும். இதன் விலை ஏற்ற இறக்கத்தினை சந்தித்தாலும் அவ்வளவாகப் பெரிய பாதிப்பு இருக்காது. பிரெட் வகைகள் இனிப்பு மற்றும் உப்பு என இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அதைப் பொறுத்து மூலப் பொருளில் சற்று மாற்றம் இருக்கும்!
தயாரிப்பு முறை!
முதலில் டால்டா மற்றும் மைதா மாவினைச் சேர்த்து பிசைய வேண்டும். பின்பு அதில் ஈஸ்ட் மற்றும் தண்ணீரை பதமாகச் சேர்க்க வேண்டும். பிறகு சர்க்கரை/உப்பு சேர்க்க வேண்டும். இப்படி பிசைந்த மாவு சற்று நேரம் அப்படியே வைக்கப்படுகிறது. இதனால் அந்த மாவு கொஞ்சம் மிருதுத் தன்மை அடையும். பின்னர் வடிவத்திற்கு தகுந்தவாறு மோல்ட் செய்யப்பட்ட கிண்ணத்தில் மாவானது நிரப்பப்படுகிறது. இந்தக் கிண்ணம் 125 மற்றும் 200 கிராம் என இரண்டு அளவில் வருகிறது.
இப்படி நிரப்பட்ட கிண்ணங்கள் விறகு அடுப்பாக இருந்தால், சற்று குறைவான வெப்ப நிலையில் உட்செலுத்தப் படுகின்றன. அதுவே, அவனாக இருந்தால் பிரெட் தயாரிக்கவே பிரத்யேகமான வெப்பநிலை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு வெப்ப நிலையை வைத்துக் கொள்ளலாம். இப்படி உட்செலுத்தப்பட்ட மாவை சற்று நேரத்திற்குப் பிறகு வெளியே எடுத்து கிண்ணத்தில் இருந்து பிரித்தெடுத்தால் போதும், பிரெட் ரெடி. அவனாக இருப்பின், அதுவே குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ஆட்டோமேடிக்காக கட் ஆஃப் ஆகும். அடுப்பு விறகாக இருந்தால் நாமே பதம் பார்த்து இறக்க வேண்டும்.

கட்டடம்!
ஆண்டுக்கு 240 டன் பிரெட் தயாரிக்க சுமார் 1,500 சதுர அடி கட்டடம் தேவைப்படும். இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தபட்சமாக 800 சதுர அடி நிலம் தேவைப்படும். அவற்றில், குறைந்தது 600 சதுர அடி அளவாவது கட்டடம் இருக்க வேண்டும். இதன் உற்பத்தித் திறன் அடுப்பின் அளவைப் பொறுத்தே அமையும்.
உதாரணமாக, 10-12 சதுர அடி கொண்ட ஒரு அடுப்படியில் ஒரு நாளைக்கு 30 கிலோ பிரெட் தயாரிக்கலாம்.
மின்சாரம்!
தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் மற்றும் 30 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.
வேலையாட்கள்!
மேலாளர்-1, சூப்பர் வைஸர்-1, திறமையான வேலையாட்கள்- 4, சாதாரண வேலையாட்கள்-8, அலுவலக வேலைக்கு- 2 என மொத்தம் பதினாறு நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.

இயந்திரம்!
டவ் இயந்திரம், டவ் டிவைடர், ஸ்லைஸர், அவன், கூலிங் பேட்ஸ், மோல்டிங் டேபிள், ஹாட் கேஸ் போன்ற இயந்திரங்கள் தேவைப்படும்.

மைனஸ்!
பிரெட் சீக்கிரத்தில் கெட்டுப் போகும் பொருள் என்பதால், குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. இதனால், தேவைக்கு அதிகமாக தயாரித்து ஸ்டாக் வைக்க முடியாது.
பிளஸ்!  
லாபம் அதிகம் தரக்கூடிய தொழில்தான். ஆனால், இந்த லாபத்தினை நாம் முழுவதுமாகப் பெற வேண்டுமெனில், டீலர்களை அணுகாமல் நாமே இறங்கி விற்பனைக் கூடங்களுடன் நேரடியான உறவை வைத்துக் கொள்வது நல்லது. மூலப் பொருள்களில் ஏற்ற-இறக்கம் இருந்தாலும் அவ்வளவாகப் பாதிப்பு இருக்காது. மேலும், குறைந்த அளவே முதலீடு என்பதும் இதன் மற்றொரு பிளஸ் ஆகும்.
சமைக்காமலே சாப்பிடும் உணவுகளுக்கு அதிக மவுசு இருப்பதால், பிரெட் தயாரிப்பு தொழிலுக்கும் நல்ல மவுசு இருக்கத்தான் செய்கிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites