·
மாடுகளின் உடல் நலத்தை
முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான
·
வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து
பாதுகாப்பதற்கும் முறையான
·
கொட்டகை அமைப்பு மிகவும்
அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன்
·
பேணப்பட்டால் மட்டுமே அவை
தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை
·
வெளிப்படுத்த முடியும்.
·
பண்ணைக் கட்டிடங்களை
அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும்
·
முக்கியமாகும். பண்ணை
அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்
·
கவனிக்கப்படவேண்டியவை.
|
மண்
|
·
நல்ல வலுவான கட்டிடங்களை
அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத்
·
தேர்ந்தெடுக்கும்
இடத்தின் மண் இருக்கவேண்டும்.
·
களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை
·
பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.
·
கடினமான மண் கொண்ட
இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.
|
பண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி
|
·
பண்ணைக் கட்டிடங்கள்
அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு
·
இடம் இருக்கவேண்டும்.
இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே
·
பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.
·
200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது
·
நிலம் இருக்கவேண்டும்.தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.
|
வடிகால் அமைப்பு
|
·
மழை பெய்யும் போது
தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள்
·
அமைக்க வேண்டும். இவ்வாறு
அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான
·
சூழ்நிலை உருவாவது
மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள்
ஈரமாவதையும்
·
தடுக்கலாம்.
|
தண்ணீர் வசதி
|
·
பண்ணையில் செய்யப்படும்
பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன
·
உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப
பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர்
·
போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது
அவசியமாகும்.
·
எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய
எப்போதும் தண்ணீர்
·
இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம்
இருக்கவேண்டும்.
|
மின்சார வசதி
|
·
பண்ணையில் மின்சார வசதி
இருப்பது மிகவும் அவசியமாகும்.
·
பண்ணையிலுள்ள பல்வேறு
உபகரணங்களை இயக்குவதற்கும்,
வெளிச்சம் தரும்
·
மின்விளக்குகள் வேலை
செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.
|
காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
|
·
திறந்த வெளியில்
அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய
·
மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும்.
·
இதனால் காற்றின் வேகம்
குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும்
குறைக்கப்படும்.
|
சத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்
|
·
சத்தம் அதிகம்
உண்டாக்கும் தொழிற்சாலைகள்,
ரசாயன தொழிற்சாலைகள்,
·
சாக்கடைக் கழிவுகள்
வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில்
·
பண்ணை அமையக்கூடாது.
·
தொழிற்சாலையிலிருந்து
வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள்
·
சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.
·
கால்நடைகளின்
உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும்.
·
எனவே கால்நடைப்
பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு
·
பார்த்துக்கொள்ளவேண்டும்.
|
சந்தை வசதி
|
·
கால்நடைப் பண்ணையானது
நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு
·
அருகிலிருக்குமாறு
பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து
·
பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு
பண்ணை
·
நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.
|
போக்குவரத்து வசதி
|
·
பண்ணை அமையுமிடத்தினை
எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும்
·
பொருட்களை விற்பனை
செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும்.
·
இதனால் போக்குவரத்து
செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து
பெறப்படும்
·
உற்பத்திப்பொருட்கள்
வீணாவதும் தடுக்கப்படும்.
|
இதர வசதிகள்
|
·
இதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின்
·
குழந்தைகளுக்கு பள்ளி
வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு
·
அம்சங்கள் போன்றவையும்
பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
|
0 comments:
Post a Comment