இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 25, 2013

வண்ண பட்டுப்புழு வளர்ப்பு திட்டம் நிறுத்தம் : வரவேற்பு இல்லாததால் தோல்வியில் முடிந்தது

இந்தியாவில், முதல் முறையாக, வண்ணப் பட்டுப் புழுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம், 22 வண்ணப் பட்டு நூல் தயாரிக்கும் திட்டம், ஜவுளி நிறுவனங்களிடம், வரவேற்பு இல்லாததால், கைவிடப்பட்டுள்ளது.
உலக அளவில், பட்டு உற்பத்தியில், சீனா, முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், 25 ஆயிரம் விவசாயிகள், பட்டு நூல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை, பட்டுப் புழுக்கள் மூலம், வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டுக் கூடுகளை மட்டுமே, விவசாயிகள் உற்பத்தி செய்தனர். இவற்றை, தரம் பிரித்து, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், சாயப் பட்டறைகளுக்கு அனுப்பி, விரும்பும் வண்ணங்களில், செயற்கை சாயம் ஏற்றி, வண்ண நூல்களாக்கிக் கொண்டனர்.
கடந்த, 2011ம் ஆண்டு, மத்திய பட்டு ஆராய்ச்சி மையம், பரிசோதனை முறையில், சிவப்பு, ஊதா, நீலம், வெள்ளை, கத்திரிப்பூ, வெளிர் ஊதா என, வண்ண வண்ணப் பட்டுப் புழுக்களை, முட்டையிலே உற்பத்தி செய்து, அவற்றின் மூலம், இயற்கையாகவே, 22 நிறங்களில், பட்டுக் கூடுகளை தயாரிக்க, நடவடிக்கை எடுத்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில், 50 விவசாயிகள், வண்ணப் பட்டுப் புழுக்களை வளர்த்து, இயற்கை முறையில், பட்டு நூல்களை தயாரித்தனர். இந்த பட்டு நூல்கள் மூலம் தயாரிக்கப்பட்ட, பட்டுத் துணிகளுக்கு, வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், ஜவுளி நிறுவனங்கள், இயற்கை முறை வண்ணப் பட்டு நூல்களை, கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால், வண்ணப் பட்டுப் புழுக்கள் மூலம், நூல் தயாரிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பட்டுக் கூடு வளர்த்த விவசாயிகள், பழைய நடைமுறையில், பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்வதற்கு மாறிவிட்டனர்.
ஓசூர், பட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, ஷெரீப் கூறுகையில், ""எந்த ஒரு திட்டத்திற்கும், கொள்முதல் ஆர்டர் கிடைத்தால் மட்டுமே, தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியும். ஜவுளி நிறுவனங்கள், தயக்கம் காட்டியதால், புதிய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.



0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites