மாரிக்கண்ணன், கோவில்பட்டி.
''அப்படி எதுவும் இல்லை..! ஏற்றுமதி பற்றி ஓரளவுக்கு விஷய ஞானம் இருந்தால் போதும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு என பிரத்யேக எண் இருக்கிறது. இதை 'எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கோட்’ என்பார்கள். அதனை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். இதை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரக (DGFT - Director General of Foreign Trade) அலுவலகத்தில் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இதன் அலுவலகங்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன.இந்த ஏற்றுமதி எண்ணை பெற ஏற்றுமதி செய்பவர் அல்லது நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு இருக்க வேண்டும். மேலும், முகவரிக்கான ஆதாரம், வங்கி நடப்புக் கணக்கு விவரம் போன்றவை தேவைப்படும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.250. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். அதற்கு http://www.dgft.gov.in என்கிற இணையதளத்தைப் பார்வையிடவும். அடுத்து, நீங்கள் ஏற்றுமதி செய்யப் போகிற பொருளை தேர்வு செய்யுங்கள். அந்த பொருள் தொடர்புடைய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அல்லது எங்களின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராகி வழிகாட்டுதல் பெறலாம்.'
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பயிற்சிகளை உங்களின் அமைப்பு நடத்துகிறதா?
டி.கே.சிவக்குமார், திருச்செங்கோடு.
தொலைபேசி எண்கள்: 044-2849 7744/55/66
இ-மெயில் முகவரி: fieosouth@airtelmail.in
சலூன் கடைகளில் கிடைக்கும் முடியை ஏற்றுமதி செய்து சம்பாதிக்க வழி இருக்கிறதா?
ஜி.ராஜ்குமார், மதுரை-14.
''இந்தியாவிலிருந்து பலர் மனித முடிகளை ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் தாராளமாக ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டலாம். சலூன் கடைகளில் கிடைக்கும் மனித முடிகளை அப்படியே ஏற்றுமதி செய்ய முடியாது. அதை சுத்தப்படுத்தி பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய வேண்டும்.''
ராஜலெஷ்மி ஜெயராமன், கும்பகோணம்.
''அந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எண் புதுப்பிக்கப்பட்டிருக்காது என்பதால் இப்போது செல்லாது. மேலும், ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் எல்லாம் இப்போது மாறியிருக்கும். எனவே, புதிதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எண்ணுக்கு விண்ணப்பிப்பதே நல்லது. இது விண்ணப்பித்த இரு வாரத்துக்குள் கிடைத்துவிடும்.'''என்னிடம் ஒரு லட்ச ரூபாய் உள்ளது. இதை வைத்து நான் ஏற்றுமதி செய்ய முடியுமா? குறிப்பாக திருப்பூரிலிருந்து பின்னலாடை ஏற்றுமதி சிறிய அளவில் மேற்கொள்ள முடியுமா?
எஸ்.சரவணகுமார், சென்னை.
''ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச முதலீடு என்று எதுவும் தனியாக இல்லை. பொருளை இறக்குமதி செய்பவரின் தேவையைப் பொறுத்து ஏற்றுமதி செய்பவரின் செலவு இருக்கும். மேலும், உங்களின் நிதி வசதிக்கு ஏற்ப ஆரம்பத்தில் பொருட்களின் அளவை முடிவு செய்துகொள்ளலாம். இறக்குமதியாளர் ஒரே நேரத்தில் அதிக மதிப்பிலான பொருட்களை கேட்டால், அவரிடமிருந்து முன்பணம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஏற்றுமதி ஆர்டரைக் காட்டி வங்கியில் கடன் வாங்கிக்கொள்ள முடியும்.''
பி.ஆர்.சந்திரன், தலைவர், தமிழ்நாடு அப்பள உற்பத்தியாளர்கள் சங்கம்,
வேளச்சேரி, சென்னை.
''இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து அப்பளங்களை உலகின் பல நாடுகளுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கிறார்கள். அப்பள ஏற்றுமதி என்கிறபோது, அது சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் இருப்பது அவசியம். மேலும், குறைந்தது ஆறு மாதங்கள் கெடாமல் இருக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஸ்பெஷல் பேக்கிங் செய்து அனுப்புவது அவசியம். இந்தியாவிலிருந்து தற்போது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றுக்கு அப்பளம் ஏற்றுமதியாகி வருகிறது.''வேளச்சேரி, சென்னை.
நான் கடந்த ஐந்து வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வருகிறேன். சென்னையிலிருந்து துபாய்க்கு அரிசி இறக்குமதி செய்ய விரும்புகிறேன். அதற்கான நடைமுறைகள் என்னென்ன?
அன்புராஜன் இ.காந்தி, துபாய்.
''துபாய், இந்தியாவிலிருந்து அதிகமாக அரிசியை இறக்குமதி செய்து வருகிறது. ஏற்றுமதி நடைமுறைகள் குறித்து ஷார்ஜாவில் உள்ள எங்களின் பிராந்திய அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.தொலைபேசி எண்: 00971 65578220
முகவரி:
INDUS TRADE SERVICES FZE
(Subsidiary of FIEO)
P 6 - 69, SAIF ZONE,
PB No. 121820, SHARJAH-UAE
இ-மெயில்: industs@emirates.net.ae
தொகுப்பு: சி.சரவணன்,
படம்: ஜெ.வேங்கடராஜ்.
படம்: ஜெ.வேங்கடராஜ்.
0 comments:
Post a Comment