மனதுக்குப் பிடித்த ஆடைகளை குறைந்த விலையில் எங்கே வாங்கலாம் என்பதுதான் ஆடைப் பிரியர்களின் தேடலாக இருக்கிறது. அத்தகைய தேடலுக்குத் தீர்வு தரும் இடங்களில் முதன்மையாக இருப்பது சென்னை வண்ணாரப்பேட்டை. சின்னக் குழந்தைக்குத் தேவையான ஜட்டியிலிருந்து பெரியவர்களுக்குத் தேவையான ஆடைகள் வரை அனைத்தும் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு மார்க்கெட்டில் கிடைக்கும். கடந்த முப்பது வருடங்களாக இங்கு துணிக் கடை நடத்திவரும் சந்திரசேகரிடம் பேசினோம்.
'கடந்த நூறு வருடங்களாக இங்கு ஜவுளி வியாபாரம் நடந்துட்டு வருது. ஆரம்பத்துல ஜவுளி வியாபாரம் சிறுதொழிலா ஆரம்பிக்கப்பட்டு இப்ப பெரிய அளவுல வளர்ந்திருக்கு. இங்க மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்கிறோம். இங்கிருந்து சென்னை தி.நகர், புரசைவாக்கம் போன்ற சென்னை பகுதி கடைகள் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கும் துணிகள் சப்ளை செய்கிறோம். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளா, புதுச்சேரிக்கும் சப்ளை செய்கிறோம்.
ஆண்களுக்கான சட்டை 100 ரூபாயிலிருந்தும், இளம் பெண்கள் விரும்பும் அனார்கலி, ரசக்களி டிரெஸ்களை 500 ரூபாயிலிருந்தும் வாங்கலாம். அது மட்டுமல்லாமல் தீபாவளி மாதிரியான பண்டிகைகளுக்குத் தள்ளுபடியும் கொடுக்கிறோம்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்காக மொத்தமா வாங்க வர்றவங்கதான் அதிகம். ஏன்னா, வேற இடத்துல ரெண்டு பேருக்கு வாங்குறப் பணத்துல இங்க நாலு பேருக்குத் துணி வாங்கிடலாம். வாங்கிட்டுப் போன துணி பிடிக்கலைன்னாவோ, டேமேஜ் இருந்தாலோ 15 நாட்களுக்குள் திருப்பிக் கொண்டுவந்தால் மாற்றியும் கொடுத்துவிடுவோம். சிட்டியில எத்தனை பிரமாண்டமான கடைகள் ந்தாலும் வண்ணாரப்பேட்டைக்குன்னு ரு மவுசு இருக்கவே செய்யுது.
சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலும் வண்ணாரப்பேட்டையை தங்கள் சாய்ஸாக வைத்திருப்பார்கள். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருகிறவர்களும் வேலையோடு வேலையாக வண்ணாரப்பேட்டைக்கும் ஒரு விசிட் அடித்து வகை வகையான ஆடைகளை வாரிச் செல்லலாமே!
- பி.செ.விஷ்ணு,
படங்கள்: த.ரூபேந்தர்.
படங்கள்: த.ரூபேந்தர்.
0 comments:
Post a Comment