இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 23, 2012

இலந்தை கற்கண்டு தயாரித்தல்

(இலந்தை (தாவரயியல் பெயர் ) ஜிஜிபஸ் மௌரிஷியானா) என்பது பொதுவாக நம் நாட்டில் வறண்ட மற்றும் ஓரளவு வறண்ட மண்டலங்களில் பயிரிடப்படும் ஒரு முக்கியமான, அதிகமாகப் பயன்படுத்தப்படாத பழ வகையாகும். இலந்தையானது ஒரு ஊட்டசத்து மிக்க பழ வகை. பல வகை வைட்டமின்கள் (தயமின், ரிபோபிளவின் மற்றும் நியாசின்), வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்களை அதிகமாகக் கொண்டதும், வைட்டமின் ஏ க்குத் தேவையான முன்னோடி பொருட்களை உள்ளடக்கியதும் ஆகும். அதுமட்டுமல்லாமல், bercandyஇதில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் அதிகளவில் உள்ளன. இலந்தைப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அதிக நாட்கள் சேமித்து வைப்பதற்கும் நன்றாக விற்பனை செய்வதற்கும் உகந்ததாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பொருள்தான் இந்த இலந்தை மிட்டாய் (அ) கற்கண்டு. இது அறுவடைக்குப் பின்னான பொறியியல் தொழில்நுட்பங்களுக்கான மத்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆஸ்மோ காற்றால் உலர்த்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகும்.
இலந்தை மிட்டாய் (அ) கற்கண்டு
நல்ல தரமான இலந்தைப் பழங்களின் மேல் தோலில் காணப்படும் தூசி மற்றும் அழுக்கு ஆகியவற்றை நீக்க குழாய் தண்ணீரில் பழங்களை கழுவ வேண்டும். பழத்தின் காம்பானது கையால் கிள்ளி அகற்றப்படுகின்றது. கூர்மையான துருப்பிடிக்காத கத்தியைக் கொண்டு பழத்தின் மேல் தோலானது உறிக்கப்படுகின்றது. சாப்பிடக்கூடிய பகுதியானது சிறு துண்டுகளாக அறுக்கப்பட்டு விதையானது அகற்றப்படுகின்றது. பின்பு பழத்துண்டுகளானது 0.2 சதவிகிதம் கே.எம்.எஸ். திரவியம் கொண்டு நிறம் நீக்கம் செய்யப்பட்டு நல்ல நிறமுடைய மிட்டாய்கற்கண்டு தயாரிக்க உகந்ததாக மாற்றப்படுகின்றது. சர்க்கரைப் பாகானது (30, 40, 50 மற்றும் 600 0 பி), தகுந்த அளவு சர்க்கரையை தண்ணீரில் சேர்த்து நன்கு கலப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது. இக்கலவையை 100 டிகிரி வெப்பத்தில் சர்க்கரை கரைய நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்பாகானது தூய்மைப்படுத்தப்பட, கொதிக்கும் போது 0.5 % சிட்ரிக் அமில கரைசல் பாகுடன் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சர்க்கரைப் பாகானது ஒரு மெல்லிய மஸ்லீன் துணியில் வடிகட்டப்பட்டு அறைவெப்பதிற்கு ஏற்றவகையில் குளிர்விக்கப்படுகின்றது. பின்பு, தயார் நிலையில் உள்ள பழத்துண்டுகளை சர்க்கரைப் பாகுடன் (1 பாகம் பழத்துண்டு : 2 பங்கு சர்க்கரை பாகு) சேர்த்து ஒரு பாத்திரத்தில் 48 மணி நேரம் தகுந்த கால உஷ்ண நிலையில் ஊற வைப்பதன் மூலம் இலந்தை கற்கண்டானது தயாரிக்கப்படுகின்றது. 48 மணி நேரத்திற்குப் பின்பு பாகானது வடிகட்டப்பட்டு, பழத்துண்டுகளானது ஒரு தட்டில் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டு, தட்டு உலர்ப்பானில் 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் 5 முதல் 6 மணிநேரம் உலர்த்தப்படுகின்றது. இவ்வாறாக உலர்த்தப்பட்ட பழங்களானது பாக்கெட்களுக்குள் அடைக்கப்படுவதற்கு முன்பு நன்றாகக் குளிர்விக்கப்படுகின்றது.
இலந்தை மிட்டாய் / கற்கண்டில் உள்ள சத்துப் பொருட்கள்
ஈரப்பதம் - 10.08 %
டி.எஸ்.எஸ். - 480 பி
அஸ்கார்பிக் அமிலம் - 95.97 மி.கி/100 கிராம்
அமிலத் தன்மை - 0.225 %
மொத்த சர்க்கரை அளவு - 21.65 %
இவ்வாறாகத் தயாரிக்கப்படும் இலந்தை மிட்டாயானது / கற்கண்டானது சத்துமிக்க ஒரு இனிப்பு தின்பண்டம் மட்டுமல்லாமல், மற்ற செயற்கை முறையிலான நறுமணம் மற்றும் சுவைவூட்டப்பட்ட கற்கண்டு (அ) மிட்டாய்களுக்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சத்துமிக்க சிற்றுண்டியாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு,
மத்திய அறுவடைக்குப் பின்னான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லூதியானா – 141004 பஞ்சாப்.
தொலை போசி : 91-161-2308669
மின் அஞ்சல் : ciphet@sify.com
மூலம் : மின் செய்திமடல், மத்திய அறுவடைக்குப் பின்னான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லூதியானா, பஞ்சாப்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites