இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 24, 2012

ஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதன் பெயரை அரசிடம் பதிவு செய்ய என்ன செய்யவேண்டும்?

 இதற்கென்று தனி விண்ணப்பம் இருக்கிறது. மத்திய அரசின் கம்பெனி நிர்வாகத் துறையின் இணைய தளத்தில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையத்திலேயே பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது நிறுவனத்துக்கு நான்கு பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

அந்த பெயர்கள் ஏற்கெனவே பதிவு செய்யாத பெயர்களாக இருந்தால் நான்கில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். நான்கில் ஏதேனும் ஒன்றிரண்டு பதிவு செய்திருந்தால் அதை விட்டுவிட்டு மீதமுள்ளவற்றில் தேர்வு செய்துகொள்ளலாம்.

மேலும் மெமராண்டம் ஆஃப் அசோஸியேஷன், ஆர்டிக்கிள்ஸ் ஆஃப் அசோஸியேஷன் போன்ற முக்கியமான டாகுமென்டுகள் இணைக்கப்படவேண்டும். இதில் கம்பெனியின் நோக்கம் என்ன, எந்த வகையானது, எவ்வளவு முதலீடு, நிறுவனம் அமைய உள்ள இடம், பிரைவேட் நிறுவனமா, பப்ளிக் நிறுவனமா என்பன போன்ற தகவல்களை எல்லாம் தரவேண்டும்.

உங்களுடைய நோக்கமும், இதர விஷயங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஒரே வாரத்தில் பதிவு செய்வதற்கான தகவலை ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃப் கம்பெனியில் இருந்து அனுப்பி வைப்பார்கள். நாம் தந்த தகவல்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்தம் செய்து அனுப்பி வைக்கவேண்டும்.
பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்றால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடாகவும், பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடாகவும் இருக்கவேண்டும்.

முதலீடு எந்தளவுக்கு என்பதைப் பொறுத்து பதிவுக் கட்டணம் மாறுபடும். பெயரைப் பதிவு செய்த இரண்டு மாதத்துக்குள் நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://india.gov.in/howdo/otherservice_details.php?service=19

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites