இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 24, 2012

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை

நம்மில் பெரும்பாலோனருக்கு பிசினஸ் பண்ணும் ஆசை இருக்கும். ஆனால் ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லாத காரணத்தாலோ அல்லது முதலீடு செய்ய கையில் பணம் இல்லாத காரணத்தாலோ அந்த முயற்சி தொடங்கப்படாமலே போய்விடும். தன்னம்பிக்கையும், ரிஸ்க் எடுக்கும் தைரியமும் உள்ளவர்களே வாழ்க்கையிலும், பிசினசிலும் சாதிக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன், நம் நாட்டில் தொழில் தொடங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இப்பொழுது அரசாங்கமே தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது. நம்மிடம் நல்ல ஐடியா இருந்து முதலீடு மட்டும் இல்லையென்றால் உதவ முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன.  வங்கிகளின் மூலமும் கடன் பெறலாம். வங்கிகள் கடன் தர நம்மிடம் சில தகுதிகளை எதிபார்க்கும்.பொதுவாக வங்கிகள் தொழில் முனைவோரிடமிருந்து இருந்து நான்கு விஷயங்களை எதிர்பார்க்கும். இவற்றை 4C என்று கூறுவார்கள்.

மூலதனம்.( Capital )

தொழில் முனைவோரிடம் இருக்கும் மூலதனத்தை வைத்துதான் அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை வங்கி முடிவு செய்யும். குறைந்தது 10 முதல் 50 சதவிகிதம் வரை தொழில் முனைவோரிடம் மூலதனம் இருக்க வேண்டும்.


வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்கும் திறன்.( Capacity )

தொழில்முனைவோரிடம் இருக்கும் பிஸினஸ் பிளான். என்ன தொழில் செய்யப் போகின்றார் , எப்படி செய்யப்போகின்றார் , போட்டியாளர்கள் இருக்கிறார்களா, என்ன மார்க்கெட் இருக்கிறது, என்ன லாபம் கிடைக்கும், அவருடைய முன் அனுபவம் என்ன என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

குணநலன்.( Character )

தொழில் முனைவோர் யார், என்ன படித்திருக்கின்றார் , நம்பி கடன் கொடுக்கலாமா, வேறு ஏதாவது ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கி அதைத் திரும்பக் கொடுக்காமல் போயிருக்கின்றாரா?, வழக்குகள் இருக்கிறதா?, அவரை யார் அறிமுகம் செய்கிறார்கள் போன்ற விஷயங்களையும் கவனிப்பார்கள்.

அடமானம்.( Collateral Security )

வாங்கும் கடனுக்கு ஈடாக அடமானம் கொடுக்கும் வகையில் தொழில் முனைவோரிடம் ஏதேனும் சொத்து இருக்கவேண்டும்.

மேற்சொன்ன நான்கு விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, வங்கிகள் கேட்கும் மற்ற சில சான்றுகளையும் ( வருமானவரிச் சான்று )கொடுத்து விட்டால் , கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆரம்ப நிலை கம்பெனிகளில், பங்குகளிலோ அல்லது அதைச் சார்ந்த பத்திரங்களிலோ முதலீடு செய்யும் பணக்கார முதலீட்டாளர்களையே 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்' என்று சொல்கிறோம்.


ஞ்சல் முதலீட்டாளர்கள்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகையினர், பிஸினஸ் ஏஞ்சல்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண நிலைமையில் பிறந்து, பின்னர் தொழில்முனைவராக உருவெடுத்து, அதில் அபார வெற்றி பெற்று, பேரும், புகழும், பணமும் சம்பாதித்தவர்கள். ஆரம்பநிலை நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினம். பொருள் திரட்ட முடியாத காரணத்தால் பல இளம் தொழில்முனைவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டதுண்டு. தாங்கள்பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக, வருங்கால தொழில்முனைபவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதே இத்தகைய பிஸினஸ் ஏஞ்சல்களின் நோக்கம்.


தொழில் முனைந்து, அதை நன்கு வளர்ச்சி அடையச் செய்த ஆழ்ந்த அனுபவத்தால், பிஸினஸின் வளர்ச்சிப் பாதை யில் ஏற்படுகிற சிக்கல்களைப் பற்றியும், அதை அணுகுகிற முறை பற்றியும் இவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதோடு மட்டும் நின்று விடுவதில்லை. முதலீடு செய்தபின் அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவி களை முடிந்தவரை செய்ய விருப்பப்படுவார்கள்.


இரண்டாவது வகையினர், ஃபைனான்ஷியல் ஏஞ்சல்கள். இவர்கள் பெரும்பாலும் முனைப்பற்ற முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். முதலீடு செய்த நிறுவனத்தில் பிஸினஸ் ஏஞ்சல்கள் போன்று அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதற்கான நேரமோ அல்லது அனுபவமோ அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். இவ்வகை முதலீட்டாளர்கள் உரிமையாளரின் திறனின் மேல் உள்ள முழுநம்பிக்கையின் பேரில்தான் முதலீடு செய்கிறார்கள். அதனால், நன்கு பரிச்சயமான நண்பர்கள் தொடங்கும் தொழிலிலோ அல்லது நெருங்கிய நண்பர் களின் சிபாரிசின்பேரில் வரும் கம்பெனிகளிலோ மட்டும்தான் முதலீடு செய்வார்கள்.


என்ன வித்தியாசம்!

ஞ்சல் முதலீட்டாளர்களுக்கும் வங்கிக் கடனுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.  • வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தந்த வைப்பு நிதியை, கடனாக தருகின்றன. ஆனால், ஏஞ்சல் முதலீட்டாளர்களோ தங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்கிறார்கள். அதனால், அவர்கள் நிதி தருவதற்கு முன் தீர்க்கமாக விசாரித்தே தருவார்கள்.

  • முதலீடு செய்யும் கம்பெனிகளை தேர்வு செய்வதில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருப்பார்கள். உதாரணமாக, 'சென்னை ஏஞ்சல்ஸ்’ ஆரம்பித்த முதல் மூன்று வருடங்களில் ஐந்து நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்துள்ளது. ஆனால், வங்கிகள் கடன் கொடுப்பதோ இதைக் காட்டிலும் சற்று தாராளமாகவே இருக்கும்.

  • ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு சுற்றில் திரட்டும் நிதி சராசரியாக 20 லட்சத்தைத் தாண்டாது. வங்கிகளிடமிருந்தோ இன்னும் அதிக அளவில் கடன் பெறலாம்.


ஒரு காலத்தில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர் யார், அவர்களை எப்படி அணுகுவது? போன்ற கேள்விகளுக்கு எளிதில் பதில் கிடைக்காது. ஆனால், கடந்த சில வருடங்களில் பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இணையதளம் மூலம் தங்கள் முதலீடு செய்யும் நோக்கத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சில ஏஞ்சல் முதலீட்டாளர்களின் இன்வெஸ்டர்ஸ் இணையதள விவரங்கள் இதோ:


 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites